பக்கம் எண் :

களவுப் படலம்979

(இ - ள்.) வஞ்சகத் தன்மையுடைய கிழவன் அண்மையிற் பழகலுற்றுச் செறிந்த அழகை இரண்டு கண்களும் கௌவிக் களிப்படைய அவளுறுப்புக்கள் எள்ளளவும் நீங்காமல் எளிதாகப் பார்த்துத் தேனொழுகுகின்ற கூந்தலையுடைய அம்மையார்மொழி வழங்க மகிழ்ச்சி மிக்கா னென்க.

(வி - ம்.) எள் + தனை =எட்டனை - எள்ளளவு.

(132)

 உள்ளமணை யக்கடிது கக்குமிரு கையும்
 பொள்ளென வெழும்புணரு மன்பனென வாக்குத்
 தள்ளியெழும் வாயிதழ் தனைப்பெரிதும் வௌவ
 விள்ளுமிரு வார்தொடை விராவநனி துள்ளும்.

(இ - ள்.) மனமானது (அவளழகைக் காண்டலான்) விரைவாக உவகைகொள்ளும். (அம்மையாரைத்) தழுவ இரண்டு கைகளும் விரைவாக எழாநிற்கும். முன்னர் உன்னைச் சோலையின்கட் கூடிய அன்பன் யானேயென்று மொழியானது தடுமாறி எழாநிற்கும். (அம்மையார்) அதரத்தினைப் பெரிதும்பற்ற வாயினைத் திறப்பான். அவனிரு தொடைகளும் அவளுடன் கலத்தற்கு மிகவுந் துடிக்கு மென்க.

(வி - ம்.) உள்ளமுகக்கும், தழுவ இருகையும் எழாநிற்கும், வாக்குத்தடுமாறி எழும், இதழை வௌவ வாயைத் திறப்பான், இடைதுள்ளும் என வினைமுடிவு செய்க.

(133)

 பூங்குழன் முலைத்துணை புணர்ந்ததொடை வாட
 வீங்குயிர் விடுக்கும்விரி வாயினுயிர் காலும்
 தாங்கரி தெனத்தரையில் வீழுமெழு நிற்கும்
 ஓங்குபசி யேனென வுரைத்தவைம றைத்தான்.

(இ - ள்.) பொலிவுபெற்ற குழலினிடத்தும், இரண்டு தனங்களிடத்தும் சேர்த்த மாலைகள் வாடும்வண்ணம் மிக்கவுயிர்ப்பினை வெளியிடுவான். விரிந்த வாயினின்றும் உயிர்ப்பினை வெளியிடுவான். (இத் துன்பம்) என்னாற்றாங்கலரிதெனத் தரையின்கண் வீழ்வான், எழுவான், நிற்றலைச் செய்வான். (இங்ஙனம் வேட்கையினிகழும் நிகழ்ச்சிகளை) மிக்க பசியுடையே னெனக்கூறி அச்செயல்களை மறைத்தன னென்க.

(வி - ம்.) தொடை - மாலை. உயிர் - உயிர்ப்பு. அவை - அச்
செயல்கள்.

(134)

 கிழங்குகனி தேன்விரவு கேழ்த்ததினை மாவும்
 வழங்கவெதிர் வாங்கிவயி றார்தரமி சைந்தான்
 பழங்கணுறு பொய்ப்பசி பறைத்திளைய கள்வன்
 முழங்குபுனல் வேட்கையென மூதுயரு ழந்தான்.

(இ - ள்.) கிழங்கினையும் தேன் கலக்கப்பெற்ற நிறத்தையுடைய தினைமாவினையும் (அம்மையார் பசிநீங்க) கொடுக்க எதிரேநின்று (அவைகளை) வாங்குதல் செய்து வயிறுநிறைய உண்டனன், துன்பத்