பக்கம் எண் :

களவுப் படலம்981

(வி - ம்.) நினக்கு என்பது எழுவாய் வேற்றுமைமயக்கமாதலின் நீயெனப் பொருளுரைத்தாம். இதனை, இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற், கின்னென் சாரியை இன்மை வேண்டும்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா லுணர்க. விச்சு - விதை. துய்த்தல் - பருகல்.

(138)

 வந்தபய னெய்தியது போலுமட வாய்கேள்
 இந்தவள வார்சுனை யரும்புனன்மு கந்த
 அந்தவள விற்கடிதெ னார்வவுள நின்மேல்
 முந்தியது பிந்துவது மூப்புமினி யென்றான்.

(இ - ள்.) யான் ஈண்டடைந்ததனாலுளவாம் பயன்கிட்டியது இளமைப் பருவமுடையவளே கேட்பாயாக. இந்த வளப்பத்தினையுடைய நீண்ட சுனையின்கண் மிகுந்த புனலை மொண்டுகொண்ட அவ்வளவில் விரைவாக எனதன்பினையுடைய மனமானது நின்னிடத்து முற்பட்டது. எனது முதுமையும் இனிப் பின்னடையாநின்றது. என்ன ஆச்சரியம் என்றானென்க.

(வி - ம்.) இரும்புனல் - மிக்கநீர்.

(139)

 பஞ்சினு மிதிப்பவுலை யும்பதம டந்தை
 அஞ்சின ணடுங்கின ளறந்தலை பிறழ்ந்த
 நெஞ்சின னினைந்தபரி சென்னென நினைந்து
 விஞ்சுவெகு ளித்தழல் வெதுப்பவுரை செய்வாள்.

(இ - ள்.) பஞ்சினிடத்து மிதிக்க வருந்து மடியினையுடையாளாகிய அம்மை அஞ்சி நடுக்கமுற்று அறச்செயலினின்றும் மாறுபட்ட நெஞ்சினையுடையான் நினைந்த தன்மையாதென நினைதலுற்று அதிகரிக்கும் கோபத்தழலானது சுடப் பின்வருமாறு உரை செய்வாளாயின ளென்க.

(வி - ம்.) உலைதல் - வருந்தல். அஞ்சினள், நடுங்கினள்
முற்றெச்சங்கள்.

(140)

 மேதையென நின்றனை விருத்தரிலை நின்போற்
 காதுபழி பாவவழி கண்டுமறி யாய்கொல்
 மாதர்மட வார்சிறு மகாரொடு புனைந்த
 தீதிலுரு வத்தையு மயிர்க்குநெறி செய்தாய்.

(இ - ள்.) பேரறிவுடையான்போல நின்றாய் நின்போல (அறச் செயலுக்கு) மாறுபட்டவர் ஒருவருமிலர். வருத்துகின்ற பழியிது பாவ மிஃதென்னும் நெறிகளைப் பார்த்தும் (அவைகளின்) தன்மையை அறியாய்போலும். காதலைச் செய்கின்ற பெண்களாலும் பிள்ளைகளாலும் அலங்கரிக்கப்பட்ட குற்றமிலவாகிய வடிவினையும் ஐயுறும் வழியினைச் செய்தாய் என்க.