| | இப்பிழைபொ றுத்துளமி ரங்கியருள் கென்னக் | | | கைப்பதுமம் வள்ளியிரு காற்பதும முய்த்தான் | | | வெப்புமிக வொய்யெனவி திர்த்துதறி நீக்கி | | | ஒப்பின்மன வேகமொடு ருத்துவழி மீண்டாள். |
(இ - ள்.) இப்பிழையினைப் பொறுத்து உள்ள மிரங்கியருள்வாயாக வென்று தனது கையாகிய தாமரைமலர்களை அம்மையார் இரண்டு காலாகிய தாமரை மலரின்கட் சேர்த்தான். வெப்ப மதிகரிக்க விரைவாக நடுங்குதலுற்று (இறைவனைக் கீழே) தள்ளி நீக்கி ஒப்பின்றிய மன வேகத்தோடு கோபங்கொண்டு வழிக்கட் சென்றாளென்க. (வி - ம்.) கைப்பதுமம் - கையாகிய தாமரைமலர். காற்பதுமம் - காலாகிய தாமரைமலர். உருத்து - சினந்து. (148) | | கற்பின்வலி யுங்குறவர் காமருகு லத்தின் | | | பொற்பின்வலி யும்பொதுளி மாட்சிநனி பூத்த | | | அற்பில்வெகு ளிச்சுவையை யார்ந்துளம தித்தான் | | | வற்புரைய பாங்கனைம ரீஇப்புணரு மன்றல். |
(இ - ள்.) கற்பின்றிண்மையும் (யாவரும்) விரும்பத்தக்க குறவர் குலத்தின் அழகின்வன்மையும் நிறைந்து மாட்சிமை மிக்க குணங்கள் பொலியப்பெற்ற அன்பினாலுளவாகிய கோபச்சுவையை யுண்டு வலிமையுடைய சொல்லோடு கூடிய பாங்கனைக்கூடிப் புணருகின்ற கூட்டத்தினை யுள்ளத்தின்கண் மதித்தானென்க. (வி - ம்.) பொதுளி - நிறைந்து. ஆர்ந்து - நுகர்ந்து. வற்புரை - வலிமையுடைய சொல். (149) பாங்கற் கூட்டம் பாங்கனைத் தலைவன் கூடும் கூட்டம் என விரியும். இயற்கைப் புணர்ச்சியாகிய தெய்வப்புணர்ச்சியும், தானே சென் றிடந்தலைப்பட்டுப் புணரும் வழிநிலைப் புணர்ச்சியும் நிகழ்ந்த பின்னர்த் தலைவன் பாங்கனைச் சென்று கூடுதல். வேறு பாங்கனை நினைத்தல் அஃதாவது வழிநிலைப் புணர்ச்சியெய்தித் தலைவியை ஆயத்துய்த்த தலைமகன் அவள் கண்ணாலறியப்பட்ட காதற்றோழியை நயந்து இவள் அவட்குச் சிறந்த துணையாயினள் ஆயினும் எனக்கு அத்துணைச்சிறந்தா ளல்லள். எனக்குச் சிறந்தானைக் கண்டு பொருந்தின் தலைவியாகிய பொருளிற் கலப்பதற்கு ஐயமில்லையென நினையாநிற்றல். | | அருளிற் கலந்துறி னாராத வின்பத் தழுந்தவிடை | | | இருளிற் கலப்பதொன் றில்லை யினைந்துகு நெஞ்சகமே | | | தெருளிற் கலந்தநற் பாங்கனைச் சேரிற் றெரிவையென்னும் | | | பொருளிற் கலப்பதற் கையமுண் டேயெப் புவனத்துமே. |
|