பக்கம் எண் :

986தணிகைப் புராணம்

(வி - ம்.) முன்னே - முன்னர். பீழை - வருத்தம். வறிது - வாளா. பின்னே - பின்னர். அமர்தல் - தங்கல். மெய்ப்பாடு : அணங்கு பற்றி வந்த அச்சம். "அணங்கே, விலங்கே கள்வர்தம் மிறையெனப், பிணங்கல் சாலா அச்சம் நான்கே" என்றாகலின். பயன் : தலைமகற் குற்றதுணர்தல்.

(152)

தலைவன் உற்றதுரைத்தல்

அஃதாவது தன்னை எதிருற்றுவினாவும் பாங்கனுக்குத் தலைவன் பூவினைச்சாறெழப் பிசைந்தாற்போல. அவுணத்திரளைக் கொன்று முத்தலைவர்கட்கு மஞ்சாவெனது வலியை நீக்க மடக்கொடி வெற்றியின் மன்னியதெனக் கூறாநிற்றல்.

 தேவரை யஞ்சாத் திறல்சா லவுணத் திரண்முருக்கிப்
 பூவரை யஞ்சா றெழவே றிகழ்ந்தது போற்றுணைவா
 மூவரை யஞ்சாத் தமியே னெறுழ்நல முற்றுமொரீஇ
 மாவரை யஞ்சான் மடக்கொடி வெற்றியின் மன்னியதே.

(இ - ள்.) துணைவனே ! தேவர்களுக்கு அச்சங்கொள்ளா வலிமையையுடைய அவுணத்திரளைக்கொன்று இப்பூமியினெல்லையில் அழகிய திருவிழா நிகழுமாறு என்வேல் வென்றியால் விளங்குவதுபோல முத்தொழிலைச் செய்யும் முத்தலைவர்கட்கும் சிறிதும் அச்சங்கொள்ளாத் தமியேனது வலியின் நலம் முழுவதையும் நீக்கி பெரியவரையின் கண்ணழகு நிறைந்த இளமையாகிய கொடியானது வெற்றியோடு நிலைபெற்ற தென்க.

(வி - ம்.) பயன் : பாங்கற்குணர்த்தல். பூவர் - பூ : போலி. ஒரீஇ - நீக்கி மெய்ப்பாடு அழுகை.

(153)

தலைவனைக் கழறல்

அஃதாவது உற்றதுரைப்பக் கேட்ட பாங்கன் றலைமைப் பாட்டிற்கிஃதேலா தெனவுட்கொண்டு ஒரு புல்லிய குடியின்கட்டோன்றிய கொடிபோல்வாள் நின்னாற்றலை மாற்ற இறைவன் முத்தலை வேற்படையோ, இறைவன்றேவா வலியளிக்கும் பொருட்டு நட்ட துரும்போ யானறியேனெனக் கூறாநிற்றல்.

 கரும்பொன்று தோளியிடங்கொண்ட நாதன்கை வேற்படையோய்
 இரும்பொன்று தேவர் வலியளப் பானெய்தி நாப்பணட்ட
 துரும்பொன்று கொல்லோதொகுவரைப்புன்குடித் தோன்றுமுலை
 யரும்பொன்று பூங்கொடி யாற்றலை மாற்றி யஞர்செய்யவே.

(இ - ள்.) ஒன்றினோடொன்று தொகப்பெற்ற மலையின்கண்ணுள்ள சிறிய குடியின்கட்டோன்றிய முலையாகிய அரும்புகள் பொருந்திய பூங்கொடிபோல்வாள் நின் வலிமையை மாற்றுதல் செய்து துன்பினைச் செய்யக் கரும்பினை யொத்த தோளினையுடைய உமையம்மையாரை இடப்பாகத்துக் கொண்ட இறைவன் திருக்கரத்திற் றாங்குமுத் தலைவேற்படையோ ? இரும்பினையொத்த விண்டு முதலிய தேவர்களின்