| தலைவன் தன்னியல் தன்னுளத்தெண்ணல் அஃதாவது தலைவன் தனது தன்மையினை நினைத்துப் பாங்கனு மிடித்துரைக்க, பால்வரை தெய்வமும் பொருந்தாதொழிக. உலகிலம்பலு மலரும் பொருந்துவனவாக என்னுயிர் காப்பதவள்கண்களே யாமெனக் கூறாநிற்றல். | | துணைவனு மின்ன கழறுக சூழ்தரு நல்வினையும் | | | அணைவன வல்லன வாக வுலகம்ப லோடலரும் | | | பிணைவன வாக பெரும்பணைத் தோளி பிறழ்ந்துமின்னுங் | | | கணைவன வாள்விழி யன்றியெவ் வாறுயிர் காப்பதுவே. |
(இ - ள்.) உயிர்ப்பாங்கனும் இத்தன்மையவாக இடித்துரைக்குக் கற்றிய பால்வரை தெய்வமும் பொருந்துவன வல்லவாக. உலகினிடத்து அம்பலினோடலரும் பொருந்துவனவாக. பெரிய மூங்கில் போலும் தோளினையுடையாள் பிறழ்ச்சியுற்று மின்னுதல்செய்யும் கணையையொத்த ஒளியையுடைய கண்ணையல்லாமல் உயிரைக் காவல் செய்வது எவ்வாறென்றா னென்க. (வி - ம்.) நல்வினை - பால்வரை தெய்வம். அம்பல் - முகிழ் முகிழ்த்தல். அலர் - பலருமறிதல். வனம் - அழகு. வாள் - ஒளி. மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமையுணர்த்தல். (158) தலைவன்தலைவி தன்னியலெண்ணல் அஃதாவது தலைமகன் தலைமகள்மாட்டு நின்னிற்பிரியேன் பிரியின் உயிர்வாழேன் எனச் சூளுற்றதனையும் ஒருநாள் நீங்குதலிலவாகிய கூட்டம் எய்தியதனையும் தலைமகள் நினைந்து ஒருகணப்பொழுது உயிர் தரித்திருப்பாளாயின் அக்காலம் ஊழிக்கால மாகுமெனத் தலைவியினியலைத் தலைவ னினையாநிற்றல். | | வருநாள் கழிவதொன் றில்லையென் றேவற் புறுத்தியதும் | | | ஒருநாள் கழிவதில் லாக்கடி யுற்றது முன்னியுன்னிப் | | | பெருநாள் கழிவன போலுங் கணத்திற் பிழைப்பதுண்டேல் | | | திருநாள் கழிவதில் லாத்தொண்டை நாடன்ன தேமொழிக்கே. |
(இ - ள்.) திருக்கோயில்களில் விழாக்கள் என்றும் நீங்குதல் இலவாகிய தொண்டை நாட்டினையொத்த செவ்விய அணிகலன்களை யணிந்த தேன்போன்ற மொழியினையுடைய தலைவிக்கு (இனி) வரக் கடவனவாகிய நாள்கள் (கூட்டமாகிய பயனின்றிக்) கழிவதில்லையென (யான் வற்புறுத்திச்) சொற்றதனையும், ஒரு நாளிலும் நீங்குதலிலவாகிய திருமணத்தை (யாங்கள்) பொருந்திய தன்மையையும் கண்ணிக் கண்ணி வருத்தமுற்று கணப்பொழுதாயினும் (தலைவி) பிழைத்தலுள தாமாயின் (அவளுக்குப்) பேரூழிக் காலங்கள் நீங்குவனபோலுமென்க. (வி - ம்.) கடி - மணம். பெருநாள் - ஊழிக்காலம் போலும் : ஒப்பில்போலி. மெய்ப்பாடு : இளிவரல். பயன் : தலைவியி னிய லெண்ணல். (159) |