| | நின்னடி போற்றி யெவரு நினைத்த கருமமெலாம் | | | தன்னமுந் தாழ்வின்றி முற்றுவ ரேற்றமி யேன்பொருட்டு | | | முன்னவ நீயே முயலின் முகிழ்ந்த முலைப்பணைத்தோ | | | ளன்னவள் கூட்ட மமையாமை யாவரி னாவதுவே. |
(இ - ள்.) நின்னடிகளைப் போற்றுதல் செய்து உலகின் கண்ணுள்ள யாவரும் தாங்கள் நினைத்த காரியங்கள் யாவும் சிறிதும் தாழ்ச்சியின்றி அடைவரேயாயின் எளியேனிமித்தம் முன்னவனாகிய நீயே முயற்சி செய்வாயாயின் அரும்பினை யொத்த முலையினையும் மூங்கில் போன்ற தோளினையுமுடைய அவள் கூட்டம் பொருந்தாமல் (உன்னை யன்றி வேறு) யாவரான் இக்காரியமாகு மென்க. (வி - ம்.) தன்னம் - சிறிதும். கூட்டம் - மணம். மெய்ப்பாடு : உவகை. பயன் : சேறல். (166) தேற்றுபு பாங்கன் ஆற்றிடைச்சேறல் அஃதாவது. செல்கவெனக் கூறிய தலைவனைத் தேற்றி அவன் கூறிய வழியிடத்துச் செல்லா நிற்றல். | | உருவா யுருவப் புவனத்தில் யாங்க ணுறினுமொழிந் | | | தருவா யருவ நிலையொன்றிற் சேரினு மன்றிநம்மான் | | | மருவாய் மலர்ப்பதத் தொன்றினும் வல்லை யியைப்பல்கண்டாய் | | | குருவாய் மயிலினை வேலவ வேதுங் குழையலையே. |
(இ - ள்.) வேற்படையை உடையவனே வடிவுடைப் பொருளாய் வடிவுடைய பூமியில் எவ்விடத்துப் பொருந்தினும் வடிவினை யொத்து அருவப்பொருளாய் நுண்ணிய உலகமொன்றிற் பொருந்தியிருப்பினும் அல்லாமல் நம்மிறைவன் நறுமணம் பொருந்திய மலர்போன்ற திருவடியினிடத்திரண்டறக் கலந்தாலும் நிறம் பொருந்திய மயில்போல் வாளை விரைவில் நின்பாற் சேர்ப்பேன் எக்காரணங் கருதியும் நீ சிறிதும் வருந்தாதேகொள் என்றானென்க. (வி - ம்.) நுண்ணிய உலகம் - சூட்சும உலகம். மலர்ப்பதத் தொன்றல் - திருவடியிற் கலத்தல். வல்லை - விரைவு. குரு - நிறம். ஏதும் - யாதும். குழையலை - வருந்தாதே. கண்டாய் - முன்னிலையசை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : செல்லுதல். (167) பாங்கனை யாற்றுப்படுத்தோ னுரைத்தல் அஃதாவது தேற்றும் பாங்கனை ஆற்றிடைச் செலுத்திய தலைவன் தன்னாற் காதலிக்கப்பட்டாள் தினைக்கதிர் கொய்தமையான் காவலொழிந்து போயினளோ, சிறு குடிலிடத்துச் சென்று நின்றாளோ, பாங்கன் அவணிலைமை அறியும் பொருட்டுப் பொருந்தினனோ உவகையோடு திரும்புவானோவென்று மனமே வருந்தற்க, கூட்டம் இனிப் பாணித்தலின்றெனக் கூறாநிற்றல். | | சென்றனள் கொல்லோ தினைப்புனந் தீர்ந்து சிறுகுடில்வாய் | | | நின்றனள் கொல்லோ நெடுந்தகை யன்னாள் நிலையறிவாய் |
|