| | ஒன்றினன் கொல்லோ வுவப்பொடு மீண்டு குறுகுங்கொல்லோ | | | என்றலை யாதிநெஞ் சேமணம் பாணித்த லின்றினியே. |
(இ - ள்.) தினைக்கதிர் கொய்தமையான் தினைப்புனத்தினின்றும் நீங்கிப்போயினளோ சிறிய இல்லிடத்துச் சென்றனளோ. மிக்க தகுதிப் பாட்டினையுடையனாகிய பாங்கன் அத்தலைவியின் நிலைமையினை யறியும் பொருட்டுப் பொருந்தினனோ. (அவளருள் முகம் பெற்று) உவகையினோடு மறுபடியும் இவ்விடத்துக் குறுகுவானோ என்று அலையா திருப்பாய், கூட்டமானது இனிக்காலம் நீட்டித்தலில்லை யென்றானென்க. (வி - ம்.) பாணித்தல் - காலநீட்டித்தல். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றுதல். (168) பாங்கன் குறிவழிப் பாவையைக் காண்டல் அஃதாவது தலைவன் ஆற்றுப்படுக்க அவன் கூறிய குறிவழிச் செலீஇய பாங்கன் தலைவியைக் காண்டலுறுதல். | | நங்கையி லங்குசம் வாணுதல் பாச நயனமிரு | | | கொங்கைகள் கோடு புரிநூ லிடைகுல வல்குலரா | | | கங்கையிற் றூய மதம்பாய் புழைக்கை கவான்கடுக்கும் | | | மங்கையின் னாளன்றி யில்லைவை வேலன் மனத்தவளே. |
(இ - ள்.) நமது கையின் கண்ணுள்ள அங்குசப்படை இவள் ஒளி பொருந்திய நுதலினையொக்கும். நங்கையிலுள்ள பாசமாகிய கயிறு இவள் கண்களையொக்கும். நம்மிரு கொம்புகள் இவளிருதனங்களையொக்கும். குறுகுதலமைந்த நூல் அவளிடையினையொக்கும். விளக்க முறுகின்ற கடிதடம் அரவின் படத்தினையொக்கும். கங்கைநீரைக் காட்டினும் புனிதமாகிய மதமொழுகுகின்ற உட்டுளையுடைய நமது துதிக்கை இந்நங்கையின் துடையினையொக்கும். கூரிய வேற்படையையுடைய நந்தலைவன் மனத்தின் கண்ணுள்ளாள் மங்கைப்பருவமுடைய இவளன்றி வேறெவருமில்லையென்று கருதினா னென்க. (வி - ம்.) கடுக்கு மென்னுஞ் சொல்லை மூவடியினுமியைக்க. அங்குசம் நுதலையொத்தலை இப்படலம் "பிடிநெடு நாசி" என்னுந் திருப்பாட்டானறிக. நெறியல் நெறிக்கட் சென்றவரை அவன் பாசம்பிணித்தல்போலத் தன்னை நோக்கினாரை யெல்லாம் பிணித்தலின் நங்கையிற் பாசநயனமென்றார். தொழிலுவமம். அரா, படத்திற் கானமையின் ஆகுபெயர். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தெளிதல். (169) எளிதிற்காட்டிய இறைவனை அளிவளர் பாங்கன் அன்பிற்பணிதல் அஃதாவது தலைவியைக் கண்ணுற்ற பாங்கன் எட்டியுஞ் சுட்டியுங் காட்டப்படுங்குலத்த ளல்லாத தலைவியை எளிதிற்காட்டிய இறைவனை வாழ்த்தாநிற்றல். | | மாயத்தி னோருழி நீக்காது புன்குடின் மாட்டமலும் | | | தாயத்தி னாப்பட் டவிராது பூம்புனந் தண்பொழில்வாய் |
|