பக்கம் எண் :

களவுப் படலம்995

 ஆயத்தின் வண்ட லயராது மாதை யகப்படுத்த
 தோயத்தின் வார்சடை வீராட்ட காசனைச் சூழ்குதுமே.

(இ - ள்.) தன்மாயை யான் (இத்தலைவியை) வேறோரிடத்து நீக்காது அற்பமாகிய சிறிய வீட்டின் பக்கத்தே நிறையுந் தாயத்தார் நடு வட்டங்காது பொலிவுபெற்ற புனத்தின் கண்ணுள்ள குளிர்ந்த சோலையின் மாட்டுள்ள ஆயக்கூட்டத்தாரோடு வண்டலாட்டைச் செய்யாது இம்மாதினை அகப்படுத்திய கங்கைநீர் தங்கிய நீண்ட சடையினையுடைய வீராட்டகாசமென்னுந் திப்பிய திருப்பதியின் கண்ணெழுந் தருளிய வீராட்டகாசப் பெருமானை யாம்வணங்குவோ மென்க.

(வி - ம்.) அமலல் - நிறைதல். தவிர்தல் - தங்கல். தோயம் - நீர். மெய்ப்பாடு : உவகையைச்சார்ந்த மருட்கை. பயன் : மகிழ்தல்.

(170)

பாங்கன் தலைவியை வியத்தல்

அஃதாவது எளிதி னகப்படுத்த இறைவனை வணங்கிய பாங்கன் தலைவியி னவயவங் கண்டு மகிழ்ந்து கூறாநிற்றல்.

 கூந்தல் வதனம் விழியென வேழங் குடைதுவசம்
 வாய்ந்த புயமுலை யல்குலெ னச்சிலை வாளிமுர
 சாய்ந்த விடையென மார னழகுடற் றப்பொருவான்
 போந்தது வேட ரறியார் புதல்வியிற் போற்றினரே.

(இ - ள்.) மாரன் யானையாகிய இருளும் குடையாகிய மதியும், கொடியாகிய மீனமும் முறையே குழலும், முகமும், கண்ணுமாகவும் பொருந்தின (அம்மாரன்) வில்லாகிய கரும்பும், கணையாகிய தாமரை மலரும் முரசமாகிய கடலும் தோளும் தனமும் கடிதடமுமாகவும் ஆராயத்தக்க இடையென்ற வடிவமுங் கொண்டு ஆடவரை அழகால் வருத்திக் கொல்லும் பொருட்டுப் பெண்ணுருவாய் வந்ததனை வேடர் அறியாராய்த் தம் புதல்வியெனக் கருதிப் போற்றி வளர்த்தனர் போலும் (எனப் பாங்கன் தன் மனத்துள் தலைவியை வியந்தான்) என்க.

(வி - ம்.) மன்மதன் வேழம் - இருள், குடை, சந்திரன். துவசம் - மீன். சிலை - கரும்பு. வாளி - தாமரை. முரசு - கடல். அங்கமிலனாகிய மாரன் - (உளதோ இலதோ என்னும்) இடை. பொருவான் வானீற்று வினை யெச்சம். மெய்ப்பாடு : உவகை. பயன் : மகிழ்தல்.

(171)

பாங்கன் தலைவனை வியத்தல்

அஃதாவது எளிதிற்காட்டிய இறைவனை வணங்கிய பாங்கன் தலைவன் உள்ளத்தின் உரமறிந்து வியந்து கூறாநிற்றல்.

 இம்மாதர் பின்னர்த் திரியாது நின்று மிவள் புணர்ச்சி
 நம்மா தரவின் முடியுமென் றுள்ளியு நாடறிந்து
 விம்மாது காத்தவ னேயுர வோன்வெளி யேவிடுங்கால்
 தும்மாது நின்றவர் தாமுங் கயவரித் தொல்புவிக்கே.