| (இ - ள்.) அஞ்சாதேகொள் அஞ்சாதே கொள்ளெனத் திருவாய் மலர்ந்து அம்மையாரை ஒரு கையானணைத்தல் செய்து யானை அண்மைக் கட்சென்று சீறாநிற்க (அதனைக்) கொல்வான் போன்று வேற்படையைத் தாங்கிய திருக்கையினைக் குடுமியின் மேலாம்படி செய்துவணங்க (யானை) களிப்படைந்து வேட்டுவக் குமரனைக் கண்டு பயந்ததென்று சொல்லும் வண்ணம் தெய்வமாகிய அவ்வியானை மறைந்ததென்க. (வி - ம்.) குமைத்தல் - கோறல். குஞ்சி - ஆண்மயிர். மஞ்சன் - மைந்தன் : போலி. தெய்வவேழம் - விநாயக யானை. (177) | | தணிவறு காதன் மீக்கூர் தம்பியை யிடரி னீக்கி | | | மணிநகை மாதைச் சேர்த்த வண்மையி னானு நேரில் | | | கணிகவெற் பமரு மைங்கைக் கடவுளெம் பெருமான்றன்னை | | | அணிகிள ருலக மாவச் சகாயனென் றன்பிற் போற்றும். |
(இ - ள்.) குறைவற்ற ஆசைமிக்குள்ள தன்னிளவலைத் துன்பினின்றும் நீக்குதல் செய்து முத்துப்போன்ற பற்களையுடைய அம்மையாரை (தம்பிபால்) நேரிற் கூட்டிய வள்ளற்றன்மையாலும் தணிகை மலையினிடத்துத் தங்கும் ஐந்து திருக்கைகளையுடைய எமது தலைவனாகிய பெருமையுடைய மூத்த பிள்ளையாரை அழகு விளங்குகின்ற உலகிலுள்ளவர் ஆபத்துக் காலத்து சகாயஞ் செய்தவனென்று அன்பினால் வணங்குவாரென்க. (வி - ம்.) தம்பி - முருகன் - மணி - முத்து. உலகம் - ஆகுபெயர். ஆவச் சாகாயன் - உற்றுழி யுதவினோன். (178) | | நஞ்சட வெழுத லோடு நடுங்கின ரிரிந்த தேவர்க் | | | கஞ்சலி ரென்று முக்க ணமலன்கை யமைத்த ஞான்றே | | | துஞ்சிய கவலை போலத் தோன்றலங் கணைத்த லோடுங் | | | குஞ்சரப் பயத்தி னோடு கூர்பரி வணங்கு நீத்தாள். |
(இ - ள்.) நஞ்சமானது கொல்ல எழுச்சியுற்றவுடன் நடுங்கி ஓட்டெடுத்த தேவர்களை மூன்று கண்களையுடைய மலமற்றவன் அச்சங்கொள்ளா தொழிமினென்று கையமைத்த அக்காலத்தே இறந்த கவலை போலத் தலைவன் அணைத்தவுடன் யானையாலுளதாம் அச்சத்தினோடு மிக்க துன்பினைத் தெய்வப் பெண்ணாகிய அம்மை நீத்தனளென்க. (வி - ம்.) அட - கொல்ல. நடுங்கினர் : முற்றெச்சம். அமலன் - மலமிலி. குஞ்சரத்தாலுண்டான பயம் என்க. கூர் - மிகுதி. அணங்கு - வள்ளி. (179) | | எனைத்துமங் கறியான் போல வேழையை வினவி நம்மைக் | | | கனைத்துவண் டிமிருங் கூந்தால் கலப்பிக்கும் வாயி லாக | | | அனைத்தும்வெற் பமருஞ் செவ்வே ளயர்திரு விளையாட் டென்ன | | | நினைத்ததென் னுள்ள மற்றே யாகுநீ யஞ்ச லென்னா. |
|