| (இ - ள்.) யாதொன்றும் அவன் அறியாதவன்போல அம்மையாரை வினாவுதல் செய்து ஒலித்து வண்டினங்கள் ஏறப்பெற்ற கூந்தலை யுடையாளே நம்மைச் சேர்ப்பிக்கும் ஏதுவாக எல்லா மலைகளினும் விரும்பித்தங்கும் முருகவேள் செய்த திருவிளையாட்டென்று எனது மனங் கருதியது அத்தன்மையாகுக நீ அஞ்சாதே கொள் என்று கூறி. (வி - ம்.) எனைத்தும் - யாதொன்றும், ஏழை - வள்ளி, கனைத்து - ஒலித்து. கூந்தால் : விளி. அற்றே - அஃதே. என்னா - என்று கூறி. (180) | | மறைமுடி யறியா வேட மன்னவ குமர னாங்கண் | | | உறைமதுப் பொதும்ப ருள்ளா லொண்டொடி மாதைக் கொண்டு | | | நிறைமகிழ் திளைப்பப் புக்கு நீடிய பரிவு நீத்தும் | | | குறையினை முடிப்பா னன்னாள் குறிப்பறிந் துரைக்க லுற்றான். |
(இ - ள்.) மறைகளின் முடிவாகிய உபநிடதங்களும் அறிய வொண்ணாத வேட அரையகுமாரன் அவ்விடத்துத் தேனைச் சிந்துகின்ற சோலையினுள்ளிடத்து ஒளி பொருந்திய வளையலணிந்த அம்மையாரைக் கொண்டு சென்று நிறைந்த மகிழ்ச்சியிலழுந்தப் புகுந்து மிக்க துன்பினை நீக்கி (அவள்) உள்ளத்துள்ள குறைகளை நீக்குவான் அம்மையார் குறிப்பினையறிந்து சொல்லத் தொடங்கினானென்க. (வி - ம்.) மறைமுடி - உபநிடதம். உறைமது : வினைத்தொகை. அன்னாள் - அவ்வள்ளி. (181) வேறு பிரிந்துழி வருத்தந் திருந்திழைக்குணர்த்தல் அஃதாவது : தலைவியைத் தலைவன் பிரிந்த காலத்துளதாம் நிலைமையினை அவளுக்குணர்த்தல். | | வரிந்தா லனைய மணிநகை வாங்கு சிலைப்புருவம் | | | சொரிந்தா லனைய திதலையம் பூண்முலைத் தோகைநின்றோள் | | | பிரிந்தா லனைய வணங்குநல் லூழிற் பெயர்ந்தடுத்துப் | | | புரிந்தா லனையமுற் றின்பமும் பூப்ப தரிதுலகே. |
(இ - ள்.) சித்திரித்தாலொத்த முத்துப்போன்ற பல்லினையும், வளைந்த விற்போன்ற புருவத்தினையும் கொட்டினாலொத்த தேமலை யுடைய அழகிய அணிகலன்களணிந்த தனங்களையுமுடைய மயில் போல்வாளாய் நின்றோளைப் பிரிந்ததனா லுளதாகிய துன்பத்தையும், நல்லூழின் பகுதியாற் சென்று அடுத்து விரும்பினாலொத்த நிறைந்த இன்பத்தையும் இவ்வுலகம் பிறபொருளாற் றோற்றுவித்தல் அரிது என்றான் என்க. (வி - ம்.) வரிதல் - சித்திரித்தல். மணி - முத்து. சொரிதல் - கொட்டுதல். திதலை - தேமல். தோகை : ஆகுபெயர். நல்லூழ் - நல்வினை. முற்றின்பம் - நிறைந்த இன்பம். பூத்தல் - தோற்றுதல். மெய்ப்பாடு : பெருமிதம்; பயன் : திருந்திழைக்குணர்த்தல். (182) |