வந்த "தாமரை" என்ற சொல்லுக்குப் பொருள் வெவ்வேறாதலால், யமக விலக்கணம் சிதைந்ததாகாது. மா - இலக்குமியைக் குறிக்கையில், வடசொல். திரை - அலை; கடலுக்குச் சினையாகுபெயர். பொருட்டு - நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு; ஆல் - அசை. மாத்திரை - கண்ணிமைப் பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது. திரைச்சீலையுவமை - பிறர்காண வொண்ணாதபடி சூழ்ந்துகொள்வதற்கு. (79) | 80. | சாகைக்குந்தத்துத்துகிறூக்கிமாதர்தமைநகைத்தாய் | | | சாகைக்குந்தத்துவங்கட்குமெட்டாய்தண்புனலரங்கே | | | சாகைக்குந்தத்துப்புடையாழியேந்தறமர்கள்வெய்யோர் | | | சாகைக்குந்தத்துத்தவிர்கைக்கும்போலுமுன்சங்கற்பமே. | (இ - ள்.) சாகை - கிளைகளையுடைய, குந்தத்து - குருந்தமரத்தின் மேல், துகில் தூக்கி - (கோபஸ்திரீகளுடைய) சேலைகளை எடுத்துப் போய் வைத்துக்கொண்டு, மாதர்தமை நகைத்தாய் - அந்தஇடைப்பெண் களைநோக்கிப் பரிகாசமாகச்சிரித்தவனே! சாகைக்கும் தத்துவங்கட்கும் எட்டாய் - வேதங்களுக்கும் தத்துவங்களுக்கும் எட்டாதவனே! தண் புனல் அரங்கம் ஈசா - குளிர்ச்சியான நீர்வளத்தையுடைய ஸ்ரீரங்கத்துக்குத் தலைவனே! - கை - (நினது) திருக்கைகளில், குந்தத்து - குந்தமென்னும் ஆயுதத்தோடு, புடை ஆழி - பகையழிக்கவல்ல சக்கரத்தையும், ஏந்தல் - தரித்திருத்தல், வெய்யோர் சாகைக்கும் தமர்கள் தத்து தவிர்கைக்கும் உன் சங்கற்பம் போலும் - துஷ்டர்கள் அழியுமாறும் அடியார்கள் துன்பம் நீங்குமாறும் நீகொண்ட கருத்தினாற் போலும்; (எ - று.) "போலும்" என்பது - ஒப்பில்போலி: அதாவது - உவமைப்பொருள் தராத "போல்" என்னுஞ் சொல்; "ஒப்பில் போலியு மப்பொருட்டாகும்" என்ற தொல்காப்பியத்தால், அச்சொல் உரையசைப்பொருளதாகி வாக்கியாலங்காரமாய் நிற்கு மென்று விளங்குதலால், எம்பெருமான்திருக் கைகளிற் சிறந்தபடைக்கலங்களைக் கொண்டிருத்தல் துஷ்டநிக்கிரகஞ் செய்து சிஷ்டபரிபாலனம்பண்ணுஞ் சங்கல்பத்தினாலேயேயா மென்ற கருத்து அமையும். சாகை - வேதத்தின் பகுப்பு; வேதத்துக்குச் சினையாகு பெயர். தத்துவங்கள் - ஐம்பொறி, ஐம்புலன், ஐம்பூதம், ஐந்துகருமேந்திரியம், பிரகிருதி, மஹாந், அகங்காரம், மநஸ் என்பன. எட்டுதல் - புலனாதல். இனி, வேதங்கட்கும் மற்றைத்தத்துவநூல்கட்கும் சிறிதளவேயன்றி முழுவதுஞ்சொல்லமுடியாதவனே யென்று உரைப்பினும் அமையும்; இப் பொருளில், தத்துவமென்பது - அதனையுணர்த்தும்நூலுக்கு ஆகுபெயராம். தமர் - தம்மைச்சேர்ந்தவர். சாகா, தத்வம், ஸங்கல்பம் - வடசொற்கள். கை குந்த துப்பு உடை ஆழி ஏந்தல் என்று பதம்பிரித்து, கை - கையில், குந்த - இருக்க, துப்பு உடை ஆழி ஏந்தல் - வலிமையையுடைய சக்கரத்தைத் தரித்தல் என்று உரைத்தலு மொன்று. "தமர்கள் வெய்யோர் சாகைக்கும் தத்துத்தவிர்கைக்கும்" என்ற தொடரில், "தமர்கள்" என்பது "தத்துத்தவிர்கை" என்பத னோடும், "வெய்யோர்" என்பது "சாகைக்கும்" என்பதனோடு மாக மாறிச் சென்றுஇயைதல், எதிர்நிரனிறைப்பொருள்கோள். (80) |