| 81. | சங்கத்தமரர்குழாத்தொடுமூழ்வினைதான்விலங்கச் | | | சங்கத்தமரன்பராயிருப்பீர்கடறானவர்தே | | | சங்கத்தமரம்படவெய்தசார்ங்கத்தனுவரங்கன் | | | சங்கத்தமரன்சரணேசரணென்றுதாழ்ந்திருமே. | (இ - ள்.) கடல் - சமுத்திரமும், தானவர் தேசம் - அசுரர்களுடைய நாடும், கத்த - தவித்துக்கதறவும், மரம் பட - (ஏழு) மராமரங்கள் அழியவும், எய்த - அம்புஎய்த சார்ங்கம் தனு - சார்ங்கமென்னும் வில்லையுடைய, அரங்கன் - ரங்கநாதனும், சங்கம் தமரன் - (பாஞ்சஜந்யமென்ற) சங்கத்தின் முழக்கத்தை யுடையவனு மாகிய திருமாலினது, சரணே - திருவடிகளே, சரண் - ரக்ஷகம், என்று - என்றுகொண்டு, தாழ்ந்திரும் - (அவற்றை) வணங்கியிருங்கள்; (அங்ஙனமிருப்பீராயின்), ஊழ்வினை தான் விலங்க - (உங்கள்) கருமமுழுதுந் தொலைய, சங்கத்து அமரர் குழாத்தொடும் - (எம்பெருமான்பக்கல்) மனம்பற்றுதலையுடைய நித்தியசூரிகள் வர்க்கத்தோடு ஒப்ப, சங்கத்து அமர் - (அவர்களுடைய) கூட்டத்திற் பொருந்திய, அன்பர் ஆய் - அடியார்களாய் (முக்தர்களாய்), இருப்பீர் - (பரமபதத்தில்) வாழ்ந்திருப்பீர்கள்; (எ - று.) திருவரங்கனதுதிருவடியே தஞ்சமென்று சரண்புகுந்திருப்பீராயின், பரமபதத்தில் நித்யசூரிகள்சமூகத்தில் அவர்களோடொப்ப இருக்கப்பெறுவீரென உலகத்தார்க்கு உபதேசித்ததாம். முதலடியில், சங்கம் = ஸங்கம்; இரண்டாமடியில், சங்கம் = ஸங்கம்; நான்காமடியில், சங்கம் = சங்கம். அமரர் மரணமில்லாதவர்; "அயர்வறுமமரர்களதிபதியவனவன்" என்றவிடத்துப் போல, "அமரர்" என்பது - இங்கு, முத்தியுலகத்துநிரதிசயவின்பமனுபவிக்கிற நித்தியசூரிகளைக் குறித்தது. இராமபிரான் ஆக்கினேயாஸ்திரம் பிரயோகித்துக் கடலைவற்றுவிக்கத் தொடங்கியபோது தாபமடைந்து அஞ்சிக்கதறியோடிவந்து சரண்புகுந்து ஒடுங்கிநின்று தன்பிழையைப்பொறுக்குமாறு பிரார்த்தித்த வருணனுக்கு அபயமளித்து அவனைநோக்கி "எனது அம்பு வீண்போகாதாதலால், அதற்கு இலக்கு ஏன்?" என்ன, நீர்க்கடவுள் "மரு காந்தாரமென்ற தீவில் நூறுகோடிக்கும்மேலாக வாழ்கிற அசுரர்கள் மிகக் கொடியராய் உலகத்தை வருத்துதலால், அவர்கள்மேல் இந்தஅனலம்பை விடுத்தருள்க" என்றுசொல்ல, இராமமூர்த்தி அங்ஙனமே அதனைவிடுத்து அவ்வசுரர்களனைவரையும் எரித்தொழித்தன னென்ற வரலாற்றை யுட்கொண்டு, "கடல் தானவர்தேசங் கத்த வெய்த" என்றார். இராமனம்பினாற் பீடிக்கப்பட்டு அம்மருகாந்தாரபூமி அலறிற்றென்று ஸ்ரீவால்மீகிபகவான் கூறியிருத்தலுங் காண்க. கடல் தானவர்தேசம் - கடலிடையேயுள்ள அசுரர்நாடுமாம். சார்ங்கமென்பது - திருமால்வில்லின் பெயர். திருமாலின் அம்சமான இராமபிரானது வில் அவ்விஷ்ணுதநுசின் அம்சமுடைய தென்பார், இங்கு "சார்ங்கத்தனு" என்றார். சரண் - சரண மென்ற வடசொல்லின் விகாரம்; ஏ - பிரிநிலை. "சார் ங்கத்தன் றண்ணரங்கன்" என்றும், "என்று சார்ந்திருமே" என்றும் பாடமுண்டு. கடல் தானவர் தேசம் - கடல்போன்ற (பெருவெள்ளமாகத்திரண் |