ட) அசுரர்களுடைய நாடுகளை, கத்து அமர் - ஆரவாரிக்கின்ற போரிலே, அம்பு அட - தனது அம்புகள் அழிக்கும்படி, எய்த - பிரயோகித்த என்று உரைப்பாரு முளர். சங்கத்து அமரர் என்பதற்கு - சங்கமென்னுந்தொகை யளவினரான அமரர்க ளென்று உரைத்தலு மொன்று; கீழ் "தாமரைமாத்திரை வானவர்" என்றாற்போல: சங்கம் - ஓர்பெருந்தொகை; நூறுபதுமங் கொண்டது. ஈற்றடி - முற்றுமோனை. (81) | 82. | இருந்தேனுகமுடவன்வரைநோக்கியிருப்பதுபோல் | | | இருந்தேனுகந்துனைவைகுந்தநோக்கியெதிர்பொருங்கேள் | | | இருந்தேனுகனும்படவதைத்தாய்வெண்ணெயாமத்தொளித்து+ | | | இருந்தேனுகரரங்காகாணுநாளினியென்றருளே. | (இ - ள்.) எதிர் பொரும் - எதிரில் வந்து போர்செய்த, தேனுகனும் - தேநுகாசுரனும், கேளிரும் - அவ்வினத்தாரான மற்றும்பல அசுரர்களும், பட - அழியும்படி, வதைத்தாய் - (அவர்களைச்) சங்கரித்தவனே! யாமத்து - இராத்திரிகாலத்தில், ஒளித்திருந்தே - (ஆயர்மனையில்) மறைந்திருந்து கொண்டே, வெண்ணெய் நுகர் - (கிருஷ்ணாவதாரத்திலே) வெண்ணெயை (க் களவுசெய்து) உண்ட, அரங்கா - ! - இருந் தேன் உக - பெருமையுள்ள (சுவைமிக்க) தேன் (தனது நாவிலே) சிந்தவேண்டு மென்று கருதி முடவன் - முடவனொருவன், வரை நோக்கி இருப்பது போல் - (அத்தேன் கூட்டையுடைய) மலையை (ஆசையோடு அண்ணாந்து) பார்த்திருந்தாற்போல, உனை உகந்து வைகுந்தம் நோக்கி இருந்தேன் - உன்னையடைய விரும்பிப் பரமபதம்சேர்தலை நெடுநாளாக எதிர்நோக்கியிருக்கிறேன்; காணும் நாள் - (அப்பரமபதத்தை நான்) அடைந்து உன்னைத்தரிசிக்குங்காலம், இனி என்று - இனி எப்போதோ! அருள் - அருளிச்செய்வாய்; (எ - று.) யாதொருமுயற்சியுஞ்செய்யமாட்டாத முடவன் தனக்குக்கிடைத்தற்கு அரியதென்று ஆராய்ந்துணராது கொம்புத்தேனுக்கு ஆசையுற்றிருந்தாற் போல, அதிகாரபூர்த்தியில்லாத யான் பெறுதற்கு அரிதென்று கருதாமல் பரமபதத்தில் உன்னை யடைய நெடுநாளாக அவாவுற்றிருக்கிறேன்; அடி யேனுக்கு விரைவில் அருள்புரியவேண்டு மென்பதாம். காணும் நாள் இனி என்று அருள் - அந்நாள் இந்நா ளென்று சொன்னாலும் அதனை எதிர்பார்த்துக்கொண்டு ஆறியிருப்பே னென்பது, குறிப்பு. கேளிர் என்றது, மற்றும் கண்ணனைக்கொல்லும்படி கம்சனாலேவப் பட்ட பிரலம்பன், கேசி, பூதனை, அரிஷ்டன், கபித்தன், வத்ஸன் முதலிய அசுரவர்க்கத்தாரைக் குறிக்கும்; இனி, தனதுஉறவின ரென்றுகொண்டு, சிசுபாலன்முதல் நாராயணகோபாலர் ஈறாகத் தனது நெருங்கியஉறவினர் பலரைத் தான் நேராகவும் அருச்சுனனைக்கொண்டுங் கொன்ற செய்தியைக் குறித்ததாகவுங் கொள்ளலாம். கேளிர் - (யோகக்ஷேமங்களைக்) கேட்குந்தன்மையையுடையவர்; எனவே, உறவினரும் நண்பரு மாவர்: இதனை, கேண்மை யென்ற பண்பினடி யாப் பிறந்த தென்னலாம்: இர் - பலர்பால்விகுதி. யாமம் - ஏழரைநாழி |