பக்கம் எண் :

திருவரங்கத்தந்தாதி105

கைகொண்ட பொழுது, மூன்றுயாமங்களையுடையதான இரவுக்கு ஆகுபெயர்; "த்ரியாமா" என்பது, இரவி னொருபெயர். "இல்லிலொளித்து" என்றும், "ஆளுநாள்" என்றும் பாட முண்டு. "வெண்ணெய்யாமத்து ஒளித்திருந் தேநுகர்" என்றதனால், இவ்வுடம்பாகிய உறியிலே கட்டுப்பட்டுள்ள வெண் ணெய்போலச் சாரமான ஆத்மாவை விரும்பி எவரும் அறியாதபடி கைக்கொண்டு அநுபவிப்பவன் எம்பெருமா னென்பது தோன்று மென்பர். "ஒளித்திருந்து" என்றவிடத்து, "இருந்து" என்பது - துணைவினை: "எழுந்திருந்து" என்றவிடத்துப்போல. "நுகர்" என்றதன் நகரம் னகரமாகத் திரித்துக் கொள்ளப்பட்டது, யமகத்தின்பொருட்டு. வெண்ணெய் + யாமம் = வெண்ணெயாமம்; தனிக்குறிலைச்சாராத யகரம், யகரம்வரக் கெட்டது.

(82)

83.அரும்பாகவதரிக்கும்பெயராய்புள்ளரசினுக்கோர்
அரும்பாகவதரந்துப்பனையாயரங்காவெனவுண் -
அரும்பாகவதர்பததீர்த்தங்கொள்ளாதடிகள்கொப்புள்
அரும்பாகவதர்தொலைப்பார்கல்லார்கங்கையாடுதற்கே.

(இ - ள்.) கல்லார் - அறிவில்லாதவர்கள், - "அரும் பாகு அவதரிக்கும் பெயராய் - (துதிப்பவர்நாவிலே) மேன்மையான கருப்பஞ்சாற்றுப்பாகு போன்ற இனிமை யூறும்படியான திருநாமங்களையுடையவனே! புள் அரசினுக்கு ஓர் அரும் பாக - பக்ஷிராஜனான கருடனுக்கு ஓர் அருமையான பாகனே! (கருடனை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்துபவனே!), அதரம் துப்பு அனையாய் - வாயிதழ் பவழம்போலச் சிவந்தவனே! அரங்கா - திருவரங்கனே! என உணரும் - என்று (எம்பெருமானை) அறிந்து துதிக்கின்ற, பாகவதர் - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய, பத தீர்த்தம் - ஸ்ரீபாததீர்த்தத்தை, கொள்ளாது - ஏற்றுஉட்கொள்ளாமல், - கங்கை ஆடுதற்கு - கங்காஸ்நாநஞ் செய்தற்பொருட்டு, அடிகள் கொப்புள் அரும்பு ஆக அதர் தொலைப்பார் - (நடந்து யாத்திரைசெய்வதனால்) உள்ளங்கால்களிற் கொப்புளங்கள் அரும்புபோலுண்டாக அருநெறிகளைக் கடந்து கழிப்பார்கள்; (எ - று.)

திருமாலின் மெய்யடியார்களுடைய ஸ்ரீபாததீர்த்தங் கொள்ளாமல் கங்காஸ்நாநஞ்செய்தலினால் என்னபயன்? என்பதாம். பகவத்பாததீர்த்தமாகிய கங்கையினும் பாகவதபாததீர்த்தம் மேம்பட்ட தென்பது, குறிப்பு. பாகவதர் - பகவானுடைய பக்தர்; வடமொழித்தத்திதாந்தநாமம். "ராமநாமமே கற்கண்டு" என்றாற்போல, "அரும்பாகுஅவதரிக்கும்பெயராய்" என்றார். அதரம் - வடசொல். முதலடியில், அருமை - மேன்மை; (ஒப்பு) இல்லாமையுமாம்.

(83)

84.ஆடுமுன்னீர்முதற்றீர்த்தத்தினாலருமாதவத்தால்
ஆடுமுன்னீர்மறைவேள்வியினாலண்டராயுடன்மாறு+
ஆடுமுன்னீரதுமாயையினாலென்றரங்கனைக்கொண்ட்-
ஆடுமுன்னீர்செய்தபாவமும்போய்முத்தராம்வண்ணமே.

(இ - ள்.) ஆடும் முந்நீர் முதல் தீர்த்தத்தினால் - நீராடுகிற கடல் முதலிய புண்ணியதீர்த்தங்களினாலும் (புண்ணியதீர்த்தங்களில் நீராடுதலினாலும்), அரு மா தவத்தால் - (செய்தற்கு) அரிய பெருந்தவத்தைச் செய்தலி