னாலும், ஆடு முன் ஈர் மறை வேள்வியினால் - ஆடு முதலியவற்றை அறுக்கிற வேதவிதிப்படிசெய்யும் யாகங்களினாலும், அண்டர் ஆய் உடல் மாறாடும் - (மனிதசன்மம்நீங்கித்) தேவசன்மமாக உடம்பு மாறும்: அது, அங்ஙனம் வேற்றுமை யடைவது தானும், மாயையினால் - (திருமாலினது) மாயையினாலேயே, என்று முன்னீர் - என்று எண்ணுங்கள்: முன் நீர் செய்த பாவமும் போய் முத்தர் ஆம் வண்ணம் - முற்பிறப்புக்களில் நீங்கள் செய்த தீவினைகளும் தீர்ந்து முத்திபெற்றவராகும்படி, அரங்கனை கொண்டாடும் - ஸ்ரீரங்கநாதனைத் துதியுங்கள்; (எ - று.) தீர்த்தயாத்திரை, தவம், யாகம் என்பன செய்தலாற் சுவர்க்கம்பெற லாம்; அங்ஙனம்பெறுதலில், மனிதசன்மம் ஒழிந்து தேவசன்மம் நேரும்: அதுவும் கருமவசப்பட்டதே யாதலால், அங்ஙனம் பிறவிமாறுதலிற் பயனென்னே! எம்பெருமானைத் துதித்தால்தான் பிறப்புஒழிய மாயையைக் கடந்து முத்திபெறலாம் என்பது, கருத்து. தேவர்கள் நல்வினைப்பயனால் இன்பநுகர்வரேனும் உயிரைப்பந்தப்படுத்துவதில் பொன்விலங்கும் இருப்பு விலங்கும் போலப் புண்ணியசன்மமும் பாவசன்மமும் சமமேயாதலாலும், அத்தேவர்களும் நல்வினைமுடிந்தவுடனே அவ்வுடம்புஒழிய மீளவும் இவ்வுலகத்திற் கருமவசத்திற்குஏற்ப வேறுபிறவிகொள்வ ராதலாலும், சுவர்க்கப்பேறு வீடுபேறுபோலச் சிறந்ததாகாதென்க. தேவசன்மம் எழுவனகப்பிறப்புக்களிலும் நால்வகைக்கதிகளிலும் ஒன்றாதல் காண்க. முந்நீர் என்பது, முன்னீர் என னகரம் திரித்துக்கொள்ளப்பட்டது யமகத்தின் பொருட்டு; முன்னீர் என்றே கொண்டு, பழமையான நீரெனக் கடலைக் குறிக்கலாமாயினும், நான்காமடியில் முன் என்பது - முற்காலத்திலென்ற பொருளில் வருதலால், அங்ஙனங்கொள்ளுதல் சிறவாது. ஆடு - ஆட்டை, முன் - எதிரிலே, ஈர் - அறுக்கிற என்றும் பொருள்படும்; முன் - இடமுன். ஈர் வேள்வி - வினைத்தொகை; ஈர்தல் - அரிதல். அண்டம் - வானம்: அதிலுள்ளவர், அண்டர். முன்னீர் - ஏவற்பன்மைமுற்று; முன்னிலையெதிர்மறைப்பன்மைமுற்றாகக் கொண்டு, நினைக்கமாட்டீ ரென்றலு மொன்று; உன்னீர் என்று எடுப்பினும், இப்பொருள்கள்படும். (84) | 85. | வண்ணங்கலிவஞ்சிவெண்பாவகவல்வகைதொடுத்தோர | | | வண்ணங்கலிகெடவேண்டுமென்றேமக்கண்மாட்டுரையேன | | | வண்ணங்கலிகடல்போல்வானரங்கன்வகுளச்செல்வன் | | | வண்ணங்கலியன்புகழ்தாளெனக்கென்றுமாநிதியே. | (இ - ள்.) ஓர் வண்ணம் கலி கெட வேண்டும் என்றே - (ஏதேனும்) ஒரு விதமாக வறுமை யொழியவேண்டுமென்றே கருதி (எவ்வாற்றாலாயினும் பொருளீட்டுதலையே முக்கியமாகக்கொண்டு), மக்கள்மாட்டு - மனிதர்கள் பக்கல் (மனிதர்கள்விஷயமாக), வண்ணம் கலி வஞ்சி வெண்பா அகவல் வகை தொடுத்து உரையேன் - அழகிய கலிப்பாவும் வஞ்சிப்பாவும் வெண்பாவும் ஆசிரியப்பாவும் அவற்றின்இனமுமான செய்யுள்களைப் புனைந்து கவிபாடேன்; வண்ணம் கலி கடல் போல்வான் - திருமேனிநிறம் ஒலிக்கின்ற கடல் போன்றவனாகிய, அரங்கன் - ரங்கநாதனது, வகுளம் செல் |