பக்கம் எண் :

திருவரங்கத்தந்தாதி109

பிரார்த்திக்கின்ற அசுரர்முதலிய கொடியவர்கட்கு அவர்கள்வேண்டியபடி யெல்லாம் பெருவரங்களைக் கொடுத்திடுதலும், அவற்றால் அவர்கள் மிகச்செருக்கி உலகங்களைப் பலவாறு வருத்திய காலத்தில் தேவர்களும் இருடிகளும் முதலிற் சிவபிரானைப் போ யடுக்க அப்பெருமான் தன்னா லொன்றுமாகாமற் பிரமனை யடுக்க அத்தேவனும் அங்ஙனமே விஷ்ணுவைச் சரணமடைய அப்பரமன் அங்ஙனமே அவர்கட்கு அபயமளித்து அவ்வசுரர்களை உரியசூழ்ச்சிபலசெய்து அழித்தலு மாகிய வழக்கத்துக்கு இரணியன்செய்தி ஓருதாரணமாதலை இச்செய்யுளில் விளக்கினார்.

சந்திரகுலத்து யதுவென்னும்அரசனதுமரபில் திருமால் கண்ணனாகத் திருவவதரித்துச் சிறப்புற்றதனால் "மா யாதவர்தலைவா" என்றும், அக்கண்ணன் மதுரையில் திருவவதரித்து முதலிற்செய்த மாயங்கள் அநந்தமாதலால் "வடமாமதுரைமாயா" என்றும் விளித்தார். மழுஆளி - மழுவென்னும் ஆயுதத்தை யாள்பவன்; இ - ஆண்பாற்பெயர்விகுதி. வடமும், வடத்திற் புரியும், புரியிலிழையும் மூன்றாகவுள்ளதனால், உபவீதத்துக்கு, முந்நூ லென்று பெயர். முந்நூல், செந்நூல் - பண்புத்தொகைகள். மாயாதவரத்த னைக்குடல்கோத்தது உண்வாணகமே - "மேருகிரியுடலவுணன் மிடல்கெ டுத்தா யென்ப ரதுன், கூருகிரே யறிந்ததல்லாற் கோவே நீ யறியாயால்" என்பது காணத்தக்கது.

(87)

88.நகமுண்டகந்தரித்தாற்கருண்மாயற்குஞாலமுந்நீர்
நகமுண்டகமகிழ்ந்தாற்கடியேமென்மினற்கதிவா
நகமுண்டகம்பரனென்னாதரங்கனைநாடிலயன்
நகமுண்டகமலர்தான்குவியாதுநடுக்குளத்தே.

(இ - ள்.) நக - (கண்டவரனைவரும்) பரிகாசமாகச் சிரிக்கும்படி, முண்ட கம் தரித்தாற்கு - முண்டமாகிய தலையை (பிரம கபாலத்தை)க் கையிற் கொண்டவனான சிவபிரானுக்கு, அருள் - கருணைசெய்த, மாயற்கு - ஆச்சரியசக்தியையுடையவனும், ஞாலம் - பூமியையும், முந்நீர் - கடல்களையும், நகம் - மலைகளையும், உண்டு - (பிரளயகாலத்திலே) திருவயிற்றினுட் கொண்டு, அகம் மகிழ்ந்தாற்கு - மனமகிழ்ந்தவனுமான திருமாலுக்கு, அடியேம் - தொண்டர்களாயினோம் (யாம்), என்மின் - என்று எண்ணுங்கள்; (அங்ஙனம் எண்ணினமாத்திரத்தால்), நல் கதி வானகம் உண்டு - (எல்லாப் பதவிகளினுஞ்) சிறந்த பதவியாகிய பரமபதம் (உங்கட்குச்) சித்திக்கும்: (மற்றும்), அகம் பரன் என்னாது அரங்கனை நாடில் - நானே தலைவனென்று அகங்காரங்கொள்ளாமல் ரங்கநாதனை விரும்பிச் சரணமடைந்தால், - அயன் - பிரமனது, நகம் முண்டக மலர் - நகங்களையுடைய தாமரைமலர்போன்ற கையானது, உம் நடு குளத்தே குவியாது - உங்கள்நடுத் தலையிலே (மீண்டும்பிறக்குமாறு விதித்தெழுதுதற்குக்) குவியாது; (எ - று.) - தான் - அசை.

அகம் பரன் என்னாது அடியேம் என்மின், அயனது நகமுண்டகமலர் உம்நடுக்குளத்துக் குவியாது, நற்கதிவானகம் உண்டு என்று இயைத்தும் கருத்துக்கொள்ளலாம். யானென்னுஞ் செருக்கை யறுத்து, ஆபத்காலத் திலே சிவனுக்கும் அருள்செய்தவனும் நித்தியனு மாகிய மாயவனுக்குத்