பக்கம் எண் :

110திருவரங்கத்தந்தாதி

தொண்டுபூணுங்கள்; அங்ஙனம் அடிமைபூண்டவளவிலே கருமமனைத்துந் தொலைதலால், பிரமன் கையைக்குவித்து உங்கள் தலையில் மறுபடி பிறக்க விதித்துஎழுதான்; ஆகவே, உங்கட்கு முத்தி கைகூடும் எனக் காண்க.

நால்வகைநகையுள் இங்குக்குறித்த நகை, இகழ்ச்சிபற்றியது. முண்டகம் - உடலினின்று கிள்ளியெடுக்கப்பட்ட தலை. முண்டம் - உடற்குறையென்ற படி. இனி, நகமுண்டகம் தரித்தான் என்பதற்கு - தாருகவனமுனிவர் ஏவிய நகுவெண்டலையைச் சிரத்திலணிந்த சிவபிரா னென்றும் பொருள்கொள்ள லாம்; முண்ட கம் - தலைமாத்திரமாகிய உடற்குறை, நக - (தன்னையழித்தற் பொருட்டுச்) சிரித்துக்கொண்டு வர, தரித்தாற்கு - (அதனைக் கைப்பற்றிச்சிரத்தின்மீது) அணிந்து அடக்கினவனுக்கு என்று பதவுரை காண்க: "சீற்றமா முனிவர் வேள்வித்தீயில் வெண்டலைதானொன்று, தோற்றியே யுலகம்யாவுந் தொலைய நக்கெழுந்ததன்றே," "நக்கெழுசிரத்தை யன்னோர் நாதன்மேல் விடுத்தலோடும், அக்கணமணுக வற்றா லகிலமதிறவாவண்ணம், முக்கணன ருள்செய்தந்தமுண்ட முண்டகக்கைபற்றிச், செக்கரஞ்சடைமேற்கொண்டுன் செயவினைப் புரிதி யென்றான்" என்பன, இங்கு நோக்கத்தக்கன. இனி, நக - விளங்க, முண்டகம் - சிரமாலையை, தரித்தாற்கு - தரித்த உருத்திரமூர்த்திக்கு என்று உரைப்பாரு முளர்.

நகம் - மலை யென்ற பொருளில், புடைபெயராத தென்று காரணப் பொருள்படும் வடசொல். வானகம் என்றதன் னகரத்தை நகரமாகத் திரித்துக்கொண்டது, யமகத்தின்பொருட்டு. அஹம், பரன், நகம் - வடசொற்கள். அயனகமுண்டகமலர் என்று சந்திசேர்க்காமல் அயன் நகமுண்டக மலர் என்று சந்திபிரித்தபடியே கொண்டதும், யமகத்தின்பொருட்டே. "சிலவிகாரமா முயர்திணை" என்றபடி அயன் என்ற நிலைமொழியின் ஈற்றுனகரத்தை யொழித்து "அயநகமுண்டகமலர்" என்ற பாடங் கொள்ளினும் இழுக்காது. நகம்முண்டகமலர் - நகத்தையுடைய தாமரைமலர்: எனவே, கையென்றதாயிற்று; இது, யானையை "கைம்மலை" என்றல் போலும். குளம் - நெற்றி: இங்குத் தலையென்ற பொருளில் வந்தது; இலக்கணை: சிறப்புப்பெயர் பொதுப்பொருளின்மேலது, கருமகதியைத் தலைவிதியென்றும், தலையெழுத்தென்றுங் கூறுதல், மரபு. சிறுபான்மை "லலாடலிபி" என்றவழக்கும் இருத்தல்பற்றி, குளம் - நெற்றி யென்றே கொள்ளினுமாம். பிரமன் உங்களை மீண்டும்பிறப்பெடுக்கச்செய்யான் என்ற பொருளை வேறு வகையாகக் கூறிவிளக்கியது, பிறிதினவிற்சியணி. எழுதும்பொழுது எழுது கருவிபிடித்தற்குக் கைகுவிதலாகிய இயல்பு, இங்குக் கருதற்பாலது.

(88)

89.குளப்படிநெய்யடிசிற்கொத்ததோகொள்ளப்பற்றியதோ
குளப்படியிற்றிங்கள்சேரரங்காகோலமாயவன்றுன்
குளப்படிகாட்டும்பிறைமறுப்போலொருகோட்டிருந்து
குளப்படியின்னகத்துட்பரல்போன்றகுவலயமே.

(இ - ள்.) குளம் படியில் திங்கள் சேர் அரங்கா - குளத்தின் (சந்திர புஷ்கரிணியின்) படியிலே சந்திரன் (தன்குறைதீர்த்தற்பொருட்டுத் தவஞ் செய்யுமாறு), சேர்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே! - கோலம் ஆய அன்று - (நீ) மகாவராகரூபமாகிய அந்நாளில், உன் குளம் படி காட்