டும் பிறை மறு போல் - உனது நெற்றியினுருவத்தைக் காட்டுகின்ற பிறைச் சந்திரனிடத்து விளங்குங் களங்கம்போல, ஒரு கோடு இருந்து - (உனது) ஒரு மருப்பிலே தங்கி, குளம்பு அடியின் அகத்துள் பரல் போன்ற - காற் குளம்பின்கீழ்ப் பருக்கைக்கல்லை நிகர்த்து அடங்கிய, குவலயம் - பூமண் டலமானது, (பிரளயகாலத்தில் நீ உண்டபொழுது), குளம் படி நெய் அடிசிற்கு ஒத்ததோ - வெல்லமும் படியளவுகொண்ட நெய்யுங் கலந்த உணவுக்கு ஒப்பாயிருந்ததோ! கொள்ள பற்றியதோ - அமுதுசெய்தற்குப் போதுமானதாயிருந்ததோ! (எ - று.) உனது பெருவடிவுக்குமுன் மிகச்சிறியதாகிய மண்ணுலகம், நீ உண்ணுங்காலத்தில் உனக்கு ஒருகவளத்துக்கேனும் போதுமோ! அன்றி, மண் ணையுண்டது அதன் இனிமைபற்றியோ! என வியந்துகூறியவாறு. "அண்ட மெலாம் உண்டையென்ப ரறியாதா ராங்கவை நீ, உண்டருளுங் காலத்தி லொருதுற்றுக் காற்றாவால்" என்பதுங் காண்க. ஒவ்வாது பற்றா தென்பதே துணிவு; நீ உண்டது நினதுதிருவிளையாட்டே: உயிர்களைக் காப்பது கருதியே அங்ஙனஞ்செய்தாய் என்பது, குறிப்பு. "நாண்மன்னுவெண்டிங் கள்கொல் நயந்தார்க்குநச்சிலைகொல், சேண்மன்னுநாற்றடந்தோட்பெரு மான்றன் திருநுதலே", "இருநாற்பகலினிலங்குமதி யலங்கலிருளினெழி னிழற்கீழ்ப், பெருநாணிற்பி னவனெற்றிப்பெற்றித்தாகப்பெறு மன்னோ" என்றபடி எம்பெருமானது திருநெற்றி பிறைச்சந்திரன்போலுதலால், "உன் குளப்படிகாட்டும்" என்ற அடைமொழி பிறைக்குக் கொடுக்கப்பட்டது. பிறைமறுப்போற் குவலயம் உன்ஒருகோட்டிருந்து - வளைந்த வெண் ணிறமான கோரதந்தத்துக்குப் பிறையும், அவ்வளைமருப்பிற் குத்தியெடுத்த பூமிக்குப் பிறையிலுள்ள களங்கமும் உவமையாம்; "நிறக்குஞ் செழுஞ் சுடர்க்கோடு மிப்பாரு நிசாமுகத்துச், சிறக்கும்பிறையுங் களங்கமும் போலு மெனிற்சிறுகண், மறக்குஞ்சரஞ்செற்றமாயோ னரங்கன் வராகமதாய்ப், பிறக்கும் பிறப்பின் பெருமை யெவ்வா றினிப்பேசுவதே" என்பர் திருவரங்கத்து மாலையிலும்: "பன்றியாய்ப் படியெடுத்த பாழியா யென்ப ரது, வென்றியா ருனதெயிற்றின் மென்றுகள்போன் றிருந்ததால்" என்பதுங் காண்க. குளப்படியின்னகத்துட் பரல்போன்ற குவலயம் - "தீதறுதிங்கள் பொங்குசுடரும்ப ரும்ப ருலகேழினோடு முடனே, மாதிர மண்சுமந்து வடகுன்று நின்றமலை யாறு மேழுகடலும், பாதமர்சூழ்குளம்பினகமண்டலத்தி னொருபாலொடுங்க வளர்சே, ராதிமுனேனமாகி யரணாயமூர்த்தியது நம் மையாளு மரசே" எனப் பெரியார்பணித்தது பார்க்கத்தக்கது. குளப்படி நெய்யடிசில் - சர்க்கரைப்பொங்கல். பின்னிரண்டடி - உவமையணி.. கோலம் - பன்றி. குளம்பு + அடி = குளப்படி; மென்றொடர் வன்றொடராயிற்று. அடியின்னகத்து, னகரமெய் - விரித்தல். நெற்றிக்குப் பிறையுவமை - வளைந்தவடிவிலும், ஒளியிலும். (89) | 90. | குவலையஞ்சூழ்கடல்காயாமரகதங்கொண்டனெய்தல | | | குவலையங்கண்டன்பர்நைவரென்றாற்கொற்றவாணற்குவா | | | குவலையநேமிதொட்டாயரங்காகொடும்பல்பிறப்பா | | | குவலையங்கற்றுனைக்காணிலென்னாங்கொல்குறிப்பவர்க்கே. | |