பக்கம் எண் :

திருவரங்கத்தந்தாதி113

(இ - ள்.) குறியானை - குறுகிய வடிவமுடைய வாமனாவதாரஞ் செய்த வனும், செம் கண் நெடியானை - சிவந்ததிருக்கண்களையுடைய திரிவிக்கிரம னாய் நீண்டுவளர்ந்தவனும், வானவர் கோவை சங்கம் குறியால் நைவித்த திருவரங்கேசனை - தேவராஜனான இந்திரனை (த் தனது பாஞ்சஜந்யமென் னுஞ்) சங்கத்தின் முழக்கத்தால் (பாரிஜாதாபஹரணகாலத்திலே) மூர்ச்சித்துவிழச் செய்த ஸ்ரீரங்கநாதனும், கூவி நின்று குறி யானை காத்தவனை - ("ஆதிமூலமே!" என்று தன்னைக்) கூவியழைத்துத் தியானித்த கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனு மாகிய திருமாலைக்குறித்து, - கொடி கூப்பிடினும் குறி ஆ நயப்பவர் போல் கொடியேன் சொலும் கொள்வன் என்று - காக்கை (இயல்பாகக்) கத்தினாலும் (அதனை ஒரு) நல்லநிமித்தமாக விரும்பி உலகத்தார் கொள்வதுபோலக் கொடியவனான யான் வாய்க்குவந்தபடி சொல்லுஞ் சொல்லையும் நன்மையாக (அப்பெருமான்) ஏற்றுக்கொள்வ னென்று நினைத்து, பாடினேன் - வாய்விட்டுக் கவிபாடினேன்; (எ - று.)

அற்பஜந்துவாகிய காக்கை தன்னடைவிலே செய்யுஞ் சத்தத்தையும் விருந்துவருதல் முதலியவற்றைக் குறிக்கும் நற்குறியாக நிமித்தமுணர்ந்த பெரியோர் கொள்ளுதல்போல, எளியவனான யான் வாயில்வந்தபடி சொல்லுஞ் சொல்லையும் எம்பெருமான் குற்றமாகக்கொள்ளாது குணமாகக்கொ ள்வ னென்றெண்ணியே யான், அப்பரமனதுபெருமையையும் எனதுசிறுமையையுங் கருதாது அவனைக்குறித்து வாய்விட்டுக் கவிபாடலானே னென்றன ரென்க. "நாக்கு நின்னையல்லாலறியாது நானதஞ்சுவ னென்வச மன்று, மூர்க்குப்பேசுகின்றானிவனென்று முனிவாயேலு மென்னாவினுக் காற்றேன், காக்கைவாயிலுங் கட்டுரைகொள்வர் காரணா கருளக்கொடியானே" என்ற பெரியாழ்வார் பாசுரத்தையும், அதன் வியாக்கியானத்தில் "அறிவுடையார் குற்றமாகாதவளவன்றிக்கே குணமாகவுங் கொள்வர்கள்; அது ஓரிடத்தேயிருந்து தனக்குவேண்டினதுபிதற்றிப்போகவும் அத்தை அறிவுடையார் "நமக்கு நன்மைசொல்லுகிறது" என்று கொள்ளுவர்களிறே" என்றதையும் காண்க. இது, "திருமாலவன்கவி யாதுகற்றேன், பல்லியின் சொல்லுஞ் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டுபண்டே" என்றதனோடு ஒப்பு நோக்கத்தக்கது.

"குறியானைச் செங்கணெடியானை" என்றவிடத்து, முரண்தொடை காண்க. செங் கண் - செந்தாமரைக்கண் ணென்ற குறிப்பு. குறி - ஒலி. நைவித்தல் - வருந்தச்செய்தல். குறி யானை - வினைத்தொகை; குறித்தல் - கருதுதல். ஆ - விகாரம். "நயப்பவர்" என்பது, யமகத்துக்கு ஏற்பப் போலி விகாரங்களேற்றி "னையப்பவர்" என்று கொள்ளப்பட்டது. உம்மை இரண்டும் - இழிவுசிறப்பு.

(91)

92.வனத்திற்சிலம்பிவிடுநூலுட்பட்டுமசகமெய்த்த
வனத்திற்சிலம்பினபோற்பிணிவாய்ப்பட்டென்வாய்புலம்பின்
வனத்திற்சிலம்பின்குரலன்னம்வாழுமரங்கனிப்பு
வனத்திற்சிலம்பினின்றான்கேட்குமோவும்பர்வாழ்த்தைவிட்டே.

(இ - ள்.) மசகம் - கொசுகானது, வனத்தில் சிலம்பி விடு நூலுள் பட்டு - காட்டிலே சிலந்திப்பூச்சி வாய்விட்டு இழைத்த நூலினிடையே சிக்கிக்கொ