ண்டு, மெய் தவனத்தின் சிலம்பின போல் - உடல்தவிப்பினால் அரற்றியது போல, பிணி வாய் பட்டு என் வாய் புலம்பின் - (யான்) நோயின்கண் அகப்பட்டு எனது வாய்விட்டு அரற்றினால், (அந்த அரற்றொலியை), - சிலம்பின் குரல் அன்னம் வனத்தில் வாழும் அரங்கன் இ புவனத்தில் சிலம்பில் நின்றான் - சிலம்பென்னுங் காலணியினொலிபோன்ற குரலையுடைய அன்னப் பறவைகள் நீரிலே வாழ்தற்கிடமான திருவரங்கத்திற் பள்ளிகொண்டிருப்பவனும் இந்த உலகத்திலே (திருவேங்கடமென்னும்) மலையில் நின்றருள் பவனுமான எம்பெருமான், உம்பர் வாழ்த்தை விட்டு கேட்குமோ - (பரம பதத்தில் வாழும்) நித்ய முக்தர்களுடைய மங்கலவாழ்த்தொலியை விட்டுக் கேட்டருள்வனோ? (எ - று.) ரங்கநாதன் நித்தியசூரிகளுடைய மங்கலவாழ்த்தை விட்டு எனதுபுல ம்பலொலியைக் கேட்பனோ வென்று இரங்கின ரென்க. மசகம் - வடசொல், தவனம் - தபநமென்ற வடசொல்லின் திரிபு. சிலம்பின் - சிலம்பினது என்பதன் தொகுத்தல். வனம் என்பது - காடு நீர் என்ற இருபொருளிலும், வநம் என்ற வடசொல் திரிந்ததாம். அன்னத்தின் குரலுக்குச் சிலம்பினொலி உவமையாதலை, "மின்னார்சிலம்பிற் சிலம்புங் குர வன்னம்" எனச் சிந்தாமணியிலுங் காண்க. புவநம் - வடசொல். மலையின் பெயரான சிலம்பு என்பது - இங்குச் சிறப்பாய், மலைகளிற்சிறந்த தான திருவேங்கடத்தை யுணர்த்திற்று; அதற்கு "திருமலை" என ஒருபெயர் வழங்குதலுங் காண்க. "கோயில் திருமலை" என்று சேர்த்துச்சொல்லுதல் தோன்ற, "அரங்கன் சிலம்பினின்றான்" என்றார். நான்கடியிலும் "வனத்து" என்ற பாடமும் உண்டு. (92) | 93. | விடத்தேரைமன்னும்வனப்பாழ்ங்கிணற்றுள்வெம்பாம்பு பற்றும், | | விடத்தேரைவாய்வண்டுதேன்வேட்டல்போல்விசித்துக்கொடுபோய், | | விடத்தேரையில்வெங்கட்கூற்றையெண்ணாதெண்ணும்வேட்கையெல்லாம், | | விடத்தேரையூரரங்கன்றிருத்தாளில்விழுநெஞ்சமே. | (இ - ள்.) நெஞ்சமே - மனமே! - விடத்தேரை மன்னும் - விடத்தே ரையென்னும்மரம் பொருந்திய, வனம் - காட்டிலேயுள்ள, பாழ் கிணற்றுள் - பாழடைந்த கிணற்றிலே, வெம் பாம்பு பற்றும் - கொடிய பாம்பினாற் கௌவிக் கொள்ளப்பட்ட, விடம் தேரை - நஞ்சுஏறிய தவளையினது, வாய் - வாயிலேயகப்பட்டுள்ள, வண்டு - வண்டானது, தேன் வேட்டல் போல் - தேனை விரும்புதல்போல, விசித்து கொடு போய்விட தேர் ஐயில் வெங் கண் கூற்றை எண்ணாது எண்ணும் - (உயிரை உடம்பினின்று பாசத்தாற்) கட்டியிழுத்துக் கொண்டுபோய்விட எண்ணுகிற வேற்படையையும் கொடுந்தன்மையையு முடைய யமனை (ப் பின்புறத்திலேயே யிருக்கிறா னென்று) எண்ணாமல் (நீ மேன் மேல்) எண்ணுகின்ற, வேட்கை எல்லாம் - ஆசைகள்யாவும், விட - ஒழிய, தேரை ஊர் அரங்கன் திரு தாளில் விழு - (அருச்சுனனுக்குத்) தேரையோட்டிய ரங்கநாதனது திருவடிகளிற் சேர்வாய்; (எ - று.) துன்பத்துள்துன்பமான உலகவாழ்க்கையிலிருந்துகொண்டே தனக்கு உடனே வரக்கடவதாகிய துன்பத்தைச் சிறிதும்நினையாமல் இன்பத்தையே |