பக்கம் எண் :

திருவரங்கத்தந்தாதி115

மேன்மேல் அவாவும் பேதைமையியல்புக்கு, கொடியவிருக்ஷவர்க்கத்தையுடைய வெய்யகானத்தில் நீரற்றபாழ்ங்கிணற்றிலே பாம்பின்வாய்ப்பட்டு நஞ்சுலைதக்கேறிய தேரையின் வாயி லகப்பட்டதொரு வண்டு தேனைவிரும் புதலை உவமை கூறினார். "வண்டு நஞ்சுபொருந்தின தவளையின் வாயிலுள்ள தேனை விரும்புவதுபோலத் தகுதியில்லாத பலவற்றை அவாவுகிற ஆசைகளை யெல்லாம் விடு, அந்தத்தேரையூர்கிற அரங்கனது திருத்தாளில் விழு" என்று உரைப்பாருளர்; 'அத்தேர்' எனச் சுட்டுதல், கதையை உட்கொண்டு மனம் திருத்தாளில் விழுதலாவது - திருவடியையே இடைவிடாது தியானித்தல். அடியவர்க்கு எளியவ னென்பார், "தேரையூ ரரங்கன்" என்றார். இனி, "தேரையூ ரரங்கன்" என்பதற்கு - திருவிழாக்களிலே திருத்தேருத்ஸவங் கண்டருளுகிற நம்பெருமா ளென்றும் பொருள்கொள்ளலாம்; கீழ் 83 - ஆஞ் செய்யுளில் "கரி யாடற்பரி தேர் நடத்து எந்தை" என்றது காண்க. கொடியகருவியும் கல்நெஞ்சுமுடையா னென்பார், "அயில் வெங்கட் கூற்று" என்றார். அயில் - இங்கு, முத்தலைவேல்: சூலம். வெங்கண் - அஞ்சாமை, அஞ்சுவித்தல், கண்ணோட்டமின்மை; அச்சந்தருங் கண்களுமாம்.

பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு: அல்வழியிற் சிறுபான்மை இனமெலி மிக்கது; பாழாகியகிணறு. என்க. வேட்டல், வேட்கை - தொழிற்பெயர்கள்; தல், கை - விகுதிகள். கொடு - தொகுத்தல். போய்விட, விடு - துணிவுணர்த்தும். தேர்கூற்று - வினைத்தொகை. ஐயில் = அயில்: முதற்போலி. 

(93)

94.விழுங்கூன்றசைச்சுவர்நீர்மலங்கோழைவெம்பித்தொடுங்க
விழுங்கூனரம்புறியென்பேணிதோற்சட்டைவீழ்ந்துநொந்த
விழுங்கூந்தலாரழப்பாடையிற்போய்ச்சுடும்வெய்யசெந்தீ
விழுங்கூனநோய்க்குடில்வேண்டேனரங்கவிமானத்தனே.

(இ - ள்.) அரங்கவிமானத்தனே - ஸ்ரீரங்கவிமானத்திற் பள்ளிகொண் டிருப்பவனே! - கூன் விழும் - கூன்விழு மியல்புள்ள, தசை சுவர் - தசை யினாலாகிய சுவரும், - நீர் - ஜலமும், மலம் - மலமும், கோழை - கோழையும், வெம் பித்தொடும் - கொடிய பித்தமும் ஆகிய இவற்றுடனே, கவிழும் - கவிழ்கிற, கூன் - பாத்திரமும், - நரம்பு உறி - நரம்புகளினாலமைக்கப்பட்டதொரு சிக்கமும், - என்பு ஏணி - எலும்புகளினாலாகியதோ ரேணியும், - தோல் சட்டை - தோலினாலாகியதொரு சட்டையும், - அவிழும் கூந்தலார் - விரிந்த கூந்தலையுடையவர்களான மாதர்கள், நொந்து - வருந்தி, வீழ்ந்து - கீழ்விழுந்து, அழ - புலம்ப, பாடையில் போய் - பாடைமேற் கொண்டு போய், சுடும் வெய்ய செம் தீ விழுங்கு - சுடுகிற கொடிய சிவந்த தீயினால் விழுங்கப்படுகிற (எரிக்கப்படுகிற), ஊனம் நோய் குடில் - துன் பந்தரும்நோய்கள் வசிக்கிற குடிசையு மாகிய உடம்பை, வேண்டேன் - விரு ம்பேன்; (எ - று.)

"ஊனேறு செல்வத் துடற்பிறவி யான் வேண்டேன்" என்பதை அடியொற்றியது இச்செய்யுள். உடம்பின் பலவகையிழிவுகளையும் எடுத்து உரைத்து, இங்ஙனந் தூயதல்லாத உடம்பை வேண்டே னென்றார். இப் பிறப்பையொழித்துத் திவ்வியதேஜோமயமான வடிவத்துடன் பரமபதத்து