பக்கம் எண் :

116திருவரங்கத்தந்தாதி

நிரதிசயவின்பநுகரும் பேற்றை அளித்தருளவேண்டு மென்பது, குறிப்பு. இவ்வுடம்பை வேண்டே னென்றதனால், உடம்பின்சம்பந்தமான இவ்வுலக வின்பங்களை வேண்டாமை தானே பெறப்படும். உடம்பாகிய ஒருபொருளை "தசைச்சுவர்" என்பது முதலாகப் பலவாறுபுனைந்துரைத்ததனால், புலபடப் புனைவணி. இச்செய்யுள், அருவருப்புத்தோன்றக் கூறினமையால், பீபத்ஸ மென்னும் இழிப்புச்சுவைக்கு உதாரணமாம்.

கூன்விழுதல் - முதுகு வளைதல். தசை = சதை: எழுத்துநிலைமாறுதல், இலக்கணப்போலி. கூன் என்பது மட்கலங்களில் ஒருவகையாதலை, "கூனையுங் குடமுங் குண்டுசட்டியும், பானையும் வனையு - மங்குசப்பையல் யான்" என்ற விடத்துங் காண்க. ஜலம் மலம் முதலியன வெளிப்படுதலால், அவற்றோடு கவிழுங் கூ னெனப்பட்டது. சட்டை - அங்கி. "ஏற்புச் சட்டகம், முடைக்குரம்பை, புழுப்பிண்டம், பைம்மறியாநோக்கப் பருந்தார்க்குந் தகைமைத்து, ஐயும் பித்தும் வளியும் குடரும் கொழுவும் புரளியும் நரம்பும் மூத்திரபுரீடங்களும் என்றிவற்றது இயைபு" என உடம்பின் தூய்தன்மையை விளக்கும் இறையனாரகப்பொருளுரைவாக்கியம் இங்கு நோக்கத்தக்கது.

(94)

95.மானத்துவண்டலுழவோரெழுத்தின்வடிவுற்றசீர்
மானத்துவண்டவினையாளராயினுமால்வளர்வி
மானத்துவண்டலமாமரங்கம்வழியாவரினு
மானத்துவண்டமர்தாரண்டராம்பதம்வாய்க்குமங்கே.

(இ - ள்.) மால் நத்து - பெரிய நத்தையானது, வண்டல் உழ - சேற்றிலே ஊர்ந்துசெல்ல, ஓர் எழுத்தின் வடிவு உற்ற சீர் மான - (அவ்வூர்தலாலாகிய வரையானது தற்செயலாய்) ஓர் அக்ஷரத்தினது வடிவமாக அமைந்த சிறப்புப் போல, - துவண்ட வினையாளர் ஆயினும் - வருந்துதற்குக்காரணமான ஊழ்வினையை யுடையவர்களே யானாலும், (அவர்கள்), மால் வளர் விமானத்து வள் தலம் ஆம் அரங்கம் வழி ஆ வரினும் - திருமால் கண்வளர்ந் தருளுகிற (பிரணவாகார) விமானத்தையுடைய சிறந்ததலமாகிய ஸ்ரீரங்கத்தின் மார்க்கமாய்த் தன்னடைவிலே வந்தாலும், அங்கே - அவ்வரவினாலே, மானத்து வண்டு அமர் தார் அண்டர் ஆம் பதம் வாய்க்கும் - பெருமையையும் வண்டுகள்மொய்க்கும்மாலையையு முடைய முக்தர்களாகும் பதவி சித்திக்கும்; (எ - று.)

ஒருவனுக்குப் பக்திமுதலியன இல்லாதிருக்கையில் அபுத்திபூர்வமாய் ஸ்ரீரங்கமார்க்கமாக யாத்திரைநேர்ந்தாலும் அதுவே வியாஜமாக எம்பெரு மானருளால் அவனுக்குத் தீவினைகள்நீங்கி நிரதிசயவின்பநுகரும்படியான முக்திபதம் சித்திக்கு மென்பதாம்; இதற்கு, வண்டலிலே நத்து ஊர்ந்து செல்லுதலாலாகிய கோடு ஒரோசமயத்து ஓரெழுத்துவடிவமாகத் தன்னடைவிலே அமைகிற குணாக்ஷரநியாயத்தை ஒப்புமைகூறினார்: உவமையணி. மான - உவமவுருபு.

துவண்ட வினை - பெயரெச்சம், காரணப்பொருளது; "நோய்தீர்ந்த மருந்து" என்றவிடத்துப் போல, வினையாளர் - கர்மிகள், அண்டம் - பரம