பதம்; அதில் வாழ்பவர், அண்டர். "தேவர்கள்மாலையில் வண்டு மொய்க்காது" என்ற விலக்கு அருளிற்சிறந்தவரான முக்தர்க்கு இல்லை யென்பது தோன்ற, "வண்டமர்தா ரண்டர்" என்றார். (95) 96. | அங்காக்கைக்கேமங்கைக்கீந்தானரங்கனவனிக்குவாய | | அங்காக்கைக்கேபசித்தானிற்கவேமுத்தியாக்கித்துயர் - | | அங்காக்கைக்கேசிலர்வேறேதொழுவரருந்திரவிய் - | | அங்காக்கைக்கேதனத்தாடருமோதிருவன்றியிலே. | (இ - ள்.) அம் - அழகிய, கா - சோலையை (இந்திரனது கற்பகச் சோலையிலுள்ள பாரிஜாததருவை), மங்கைக்கு - தன்மனைவியான சத்தியபாமைக்கு, கைக்கே ஈந்தான் - கையிலே கொடுத்தவனும் (கைவசமாக்கித் தந்தவனும்), அவனிக்கு - உலகத்தையுண்பதற்கு, வாய் அங்காக்கைக்கே - (தனது) வாயைத் திறக்குமவ்வளவாகவே, பசித்தான் - பசியுற்றவனும் (வாய்திறந்து உலகத்தையுட்கொள்ள அவாக்கொண்டவனும்) ஆகிய, அரங்கன் - ரங்கநாதன், நிற்கவே - இருக்கையிலே, (அவனை விட்டு), முத்தி ஆக்கி துயரம் காக்கைக்கே சிலர் வேறே தொழுவர் - (தமக்கு) மோக்ஷத்தைக் கொடுத்துத் துன்பங்கள்வாராதபடி (தம்மைக்) காப்பதற்காகவே வேறு தெய்வங்களைச் சிலர் வணங்குவார்கள்; அருந் திரவியம் - அருமையான செல்வப்பொருளை, திரு அன்றியிலே - திருமகள் கொடுப்பளேயல்லாமல், காக்கை கேதனத்தாள் தருமோ - காக்கைவடிவ மெழுதிய துவசத்தை யுடையவளான மூதேவி கொடுக்கமாட்டுவளோ? (எ - று.) பொருட்செல்வத்தை அதற்கு அதிதேவதையான இலக்குமி கொடுக்க வல்லளே யன்றி அதற்குமாறானதன்மையுள்ள மூதேவி கொடுக்கவல்ல ளல்ல ளென்ற உபமானவாக்கியந் தானே, பிறவித்துன்பத்தையொழித்து முத்திச் செல்வத்தை அதற்கு உரியதலைவனான திருமால் கொடுத்தருள்வனே யன்றி அதற்குஉரியரல்லாதபிறதேவர்கள் கொடுக்கத்தரமுடையரல்ல ரென்ற உபமேயக்கருத்தை விளக்குதலால், பிறிதினவிற்சியணி. முத்தியளித்துத் துயர்தீர்க்கும் எம்பெருமானி ருக்க அவனைத்தொழாது சிலர் தேவதாந்தரங்களைத் தொழுதல், செல்வந்தருந் திருமக ளிருக்க அவளைவழிபடாது மூதேவியைவழிபடுதல்போலப் பெரும்பேதைமையா மென்பது, குறிப்பு. "நாட்டினான்தெய்வமெங்கும் நல்லதோ ரருள்தன்னாலே, காட்டினான் திருவரங்க முய்பவர்க் குய்யும்வண்ணங், கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவாகனனும் நிற்கச், சேட்டைதன்மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே" என்ற திருமாலைப்பாசுரம் இங்கு உணரத்தக்கது. கைக்கே, ஏ - அசைநிலை. அங்காக்கைக்கே, ஏ - பிரிநிலை. காக்கைக்கே, ஏ - தேற்றம். தருமோ, ஓ - எதிர்மறை. அன்றியிலே, ஏ - ஈற்றசை; இல் - சாரியை. அங்காக்கை, காக்கை - தொழிற்பெயர்கள்: அங்கா, கா - பகுதி, கை - விகுதி. முக்தி, த்ரவ்யம், கேதநம் - வடசொற்கள். காக்கை காகமென்ற வடசொல்லின் சிதைவு: காஎன்று கத்துவது எனக் காரணப்பொருள்படும். துயரம், அம் - சாரியை. "அன்றியுமே" என்பதும் பாடம். (96) |