யில், இது, சொற்றொடர்நிலை; "செய்யு ளந்தாதி சொற்றொடர் நிலையே" என்றார் தண்டியலங்காரத்தும். தலத்தின் பெயர் - ரங்கம், ஸ்ரீரங்கம், திருவரங்கம், பெரியகோயில், கோயில் என்பன. பூலோகவைகுண்டம், போகமண்டபம், ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் என்பவை - விசேஷநாமங்களாம். இது, ஸ்வயம்வ்யக்தக்ஷேத்ரம் எட்டில் ஒன்று. இத்திருப்பதியின் எம்பெருமானது திருநாமம் - ஸ்ரீரங்கநாதன், பெரியபெருமாள், நம்பெருமாள், அழகியமணவாளன். கோலம் - பள்ளிகொண்ட திருக்கோலம். சேஷசயனம். சந்நிதி - தெற்குநோக்கியது. நாச்சியார் - ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரங்கநாச்சியார். விமானம் - பிரணவாகாரவிமானம், வேதசிருங்கம். நதி - உபயகாவேரி. [தென்திருக்காவேரியும், வடதிருக்காவேரியும் (கொள்ளிடம்.)] தீர்த்தம் - சந்திரபுஷ்கரிணி முதலிய நவதீர்த்தங்கள். தலவிருக்ஷம் - புன்னைமரம். பிரதியக்ஷம் - தர்மவர்மா, ரவிதர்மன், சந்திரன், காவேரி முதலான வர்களுக்குப் பிரதியக்ஷம். பாடல் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என்கிற ஆழ்வார்கள் பதின்மர், ஆண்டாள் இவர்கள் மங்களாசாஸநம். பஞ்சகாவியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் இந்தத் திவ்வியதேசமும் இதிலெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானும் "நீலமேக நெடும்பொற் குன்றத்துப், பால்விரிந் தகலாது படிந்தது போல, ஆயிரம் விரித்தெழு தலையுடையருந்திறற், பாயற்பள்ளிப் பலர்தொழுதேத்த, விரிதிரைக்காவிரிவியன்பெருந் துருத்தி, திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்,..... என் கண்காட்டென் றென்னுளங் கவற்ற, வந்தேன்" என்று பாராட்டிக் கூறப்பட்டிருத்தலுங் காண்க. |