பக்கம் எண் :

திருவரங்கத்தந்தாதி13

திருவரங்கத்தந்தாதி

சிறப்புப்பாயிரம்

மணவாளரவிந்தைமார்நோக்கவிம்மைமறுமையின்மா
மணவ்ளர்தம்பதம்வாய்த்திடுங்கோயிலில்வந்தவந்த
மணவாளர்பொற்றிருப்பாதாம்புயங்கட்குமாலையென
மணவாளர்சூடும்யமகவந்தாதியைவாசிமினே.

(இதன்பொருள்.) கோயிலில் வந்த - திருவரங்கத்தி லெழுந்தருளியுள்ள, அந்தம் மணவாளர் - அழகியமணவாளருடைய, பொன் திரு பாத அம்பு யங்கட்கு - அழகிய திருவடித்தாமரைகட்கு (உரிய), மாலை என - மாலையாக, மணவாளர் சூடும் - அழகிய மணவாளதாசர் சாத்திய, யமகம் அந்தாதியை - இந்த யமகவந்தாதிப் பிரபந்தத்தை வாசிமின் - (நீங்கள் படியுங்கள்:) (இதனைப்படிப்பீராயின் உங்கட்கு), - இம்மை - இம்மையிலே, மணம் வாள் அர விந்தைமார் நோக்க - வாசனையையும் ஒளியையுமுடைய செந்தாமரைமலரில் வசிக்கின்ற அஷ்டலக்ஷ்மிகளும் கருணையோடு பார்த்தருள, - மறுமையில் - மறுமையிலே, மா மணவாளர்தம் பதம் வாய்த்திடும் - திருமகள்கணவரான திருமாலினது ஸ்தானம் [ஸ்ரீவைகுண்டம்] தவறாது கிடைக்கும்; (என்றவாறு.) - ஏ - ஈற்றசை.

இது, உலகத்தாரை விளித்து முன்னிலைப்படுத்தி அவர்கட்கு நல்லறிவை உபதேசிக்கிற வாய்பாட்டினால் நூற்சிறப்பையும் பயனையும் வெளியிட்டது. திருவரங்கத்தந்தாதியைப் படிப்பவர்கட்கு இம்மையில் அஷ்டலக்ஷ்மீம்கடாக்ஷத்தால் சகலஐசுவரியங்களும் குறைவற உண்டாவதுடன் மறுமையில் மீளாவுலகமாகிய பரமபதத்து நிரதிசயப்பேரின்பமும் எளிதிற் கிடைக்குமெனப் பயன்கூறியவாறாம். அஷ்டலக்ஷ்மிகள் - ஆதிலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, தநலக்ஷ்மி, தானியலக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, சந்தாநலக்ஷ்மி, சௌபாக்கியலக்ஷ்மி என்பர்.

ஸ்ரீரங்கத்துக்கு அருகி லுள்ளதும் நிசுலாபுரியென்னும் மறுபெயரை யுடையதுமான உறையூரை இராசதானியாகக்கொண்டு அதில் வீற்றிருந்து அரசாளுகிற தர்மவர்மாவின் வம்சத்தவனான நந்தசோழன் வெகுகாலம் பிள்ளையில்லாமலிருந்து ஸ்ரீரங்கநாதனைக்குறித்துத் தவஞ்செய்து அத்தவத்தின் பயனாய் ஒருநாள் தாமரையோடையில் ஒருதாமரைமலரில் ஒருபெண்குழந் தையிருக்கக்கண்டு களித்து அக்குழந்தையை எடுத்துக்கொண்டுவந்து கமலவல்லி யென்று திருநாமஞ்சாத்தி வளர்த்துவருகையில், மங்கைப்பருவ மடைந்த அந்தப்பெண் தோழியருடன் உத்தியானவனத்தில் மலர்கொய்து விளையாடிவரும்போது, திருமகளின் அம்சமான அப்பெண்மணியை மணம் புரிந்து ஏற்றுக்கொள்ள விரும்பிய ஸ்ரீரங்கநாதன் அதிசுந்தர மூர்த்தியாய் விபவாவதாரமாகக் குதிரைமீதுஏறி வேட்டையாடச்செல்லுகிற வியாஜத்