பக்கம் எண் :

14திருவரங்கத்தந்தாதி

தால் அவளெதிரில் எழுந்தருளிக் காட்சிகொடுக்க, மிகஅழகிய அப்பெருமானைக் கண்டு கமலவல்லி மோகங்கொள்ள, அதனையுணர்ந்த நந்தசோழன் அந்தக்கன்னிகையை ரங்கநாதனுக்கு மிக்கசிறப்போடு மணம்புரிவித்தான்; இங்ஙனம் அழகியவடிவங்கொண்டுமணம்பெற்றுக் கலியாணக்கோலத்தோடு விளங்கியதனால், ஸ்ரீரங்கநாதனுக்கு அழகியமணவாளனென்று ஒருதிருநாம மாயிற்று; (மணம் - விவாகம்; அதனை ஆள்பவன் [பெற்றவன்] - மணவாளன்.) முன்னிலும்பின்னழகியபெருமாள், ஆபரணத்துக்கு அழகுகொடுக்கும் பெருமாள் என்ற திருநாமங்களும் உண்டு. "எழிலுடையவம்மனைமீர் என் அரங்கத்து இன்னமுதர், குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழி, லெழு கமலப்பூவழகர் எம்மானார் என்னுடைய, கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே" என்ற நாச்சியார் திருமொழியையுங் காண்க. அழகியமணவாள னென்ற பொருளில் 'அந்தமணவாளன்' என்றார்; (அந்தம் - அழகு). அந்த என அகரச்சுட்டின் மரூஉவாக எடுத்து, அப்படிப்பட்ட [அதாவது - அதிப்பிரசித்திபெற்ற] என்றும் உரைக்கலாம்; உலகறிசுட்டு.

கோ+இல்=கோயில்; பொதுவிதிப்படி கோவில்என வகரவுடம்படு மெய் பெறாது யகரம்பெற்று வழங்குவது, இலக்கணப்போலி. பெருமானுடைய இருப்பிடமென ஆறாம்வேற்றுமைத் தொகையாகவாவது, தலைமையான இடமெனப் பண்புத்தொகையாகவாவது விரியும். (கோ - தலைவன், தலைமை; இல் - இடம், வீடு.) இது தேவாலயங்கட்கெல்லாம் பொதுப்பெயராயினும், நூற்றெட்டுத் திருமால்திருப்பதிகளுள் திருவரங்கம் தலைமைபெற்ற தாதலால், இதனைக் 'கோயில்' எனச் சிறப்பாகவழங்குவது, வைஷ்ணவசம்பிரதாயம்; இது, காரணவிடுகுறியின்பாற்படும். (சிவதலங்களுட் சிறந்ததான சிதம்பரத்தை 'கோயில்' என வழங்குவர் சைவர்.) ரங்கநாதன் ஆதியில் பிரமனது திருவாராதநத்திருவுருவமாய்ச் சத்தியலோகத்திலே இருந்து பின்பு இக்ஷ்வாகுகுலதநமாய்த் திருவயோத்தியி லெழுந்தருளியிருந்து, பின்பு விபீஷணாழ்வானால் இவ்விடத்து வந்தமை தோன்ற, 'கோயிலில் வந்த அந்த மணவாளர்' என்றார்.

பொன் - பொன்போலருமையாகப் பாராட்டத்தக்க எனினுமாம். பா தாம்புஜம் - தீர்க்கசந்தி பெற்ற வடமொழித்தொடர்; திருவடியாகிய தாமரைக்கு என உருவகப்பொருள்பட 'பாதாம்புயங்கட்கு' எனக் கூறினாலும், மேல்வரும் 'மாலையெனச்சூடும்' என்ற முடிக்குஞ்சொல்லுக்கு ஏற்ப, தாமரை போன்ற திருவடிக்கு என முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகையாகக் கருத்துக் கொள்ளுதலே சிறப்பாமென்க; உருவகத்துக்கு ஏற்ற தொடர்ச்சிச் சொல் இல்லாமையின். திருவடிக்குத் தாமரைமலர் உவமை, செம்மை மென்மை யழகுகட்கு. அம்புஜம் - நீரில்தோன்றுவதெனப் பொருள்படும்; தாமரைக்குக் காரணவிடுகுறி; மலர்க்கு முதலாகுபெயர். (அம்பு - நீர்.) அம்புய ங்கட்குமாலையென - நான்காம்வேற்றுமை, தகுதிப்பொருளது; அழகியமணவாளனது திருவடிகளின் மகிமைக்கும் மென்மைக்கும் ஏற்ற சிறப்பும் மென்மையும் வாய்ந்தது இந்நூலென்றகருத்து இதனாற்போதரும். பாதாம்புயங்களிற் சூடின எனக் கொள்ளுதலும் ஒன்று; உருபுமயக்கம். பெருமானது திருவடி