பக்கம் எண் :

126திருவரங்கத்துமாலை

திருவரங்கத்துமாலை.

சிறப்புப்பாயிரம்.

மறைப்பொருளோ வச்சிரப்பொருளோ மனுவேமுதலா
முறைப்பொருளோ விதிகாசபுராணமுதுப்பொருளோ
விறைப்பொருளாநம்பெருமாளுடைத்திருவெட்டெழுத்துள்
ளுறைப்பொருளோ மணவாளர்தமாலையினுட்பொருளே.

(இதன்பொருள்.) மணவாளர்தம் - அழகியமணவாளதாசருடைய, மாலையின் - திருவரங்கத்துமாலையினது, உள் - உள்ளே யமைந்திருக்கின்ற, பொருள் - பொருளானது, - மறை - பொருளோ - வேதங்களின் பொருளேயோ? அ சிரம் பொருளோ - அவ்வேதமுடிவுகளின் பொருளேயோ? மனுவே முதல் ஆம் - மநுஸ்மிருதி முதலான, முறை - தருமசாஸ்திரங்களின், பொருளோ - பொருளேயோ? இதிகாச புராணம் முது பொருளோ - இதிகாசங்கள் புராணங்கள் என்னு மிவற்றினது தேர்ந்தபொருளேயோ? இறைபொருள் ஆம் - பரதத்துவமாகிய, நம்பெருமாளுடை - நம்பெருமாளுடைய, திரு எட்டு எழுத்து - ஸ்ரீஅஷ்டாக்ஷரமந்திரத்தினது, உள்உறை - உட்கருத்தாகிய, பொருளோ - பொருளேயோ? (என்றவாறு.) - ஏகாரம் - ஈற்றசை.

இங்ஙனம் ஐயந்தோன்றப் பலவாறு விகற்பித்துக்கூறினா ராயினும், வேதம் வேதாந்தம் தருமசாஸ்திரம் இதிகாசம் புராணம் அஷ்டாக்ஷரம் என்னும் இவையெல்லாவற்றினது பொருளும் இத்திருவரங்கத்துமாலையில் அடங்கியிருக்கின்றன வென்பது கருத்தாம். எனவே, இவ்வாறு பலவகையாக ஐயப்பட்டது, இன்னதென்று ஒன்றன்மையாலே வரையறுத்துச் சொல்லத் தெரிந்திலே னென்ற தல்லது, தேர்ந்துதெளியாமையாற் சொன்ன தன் றென்று அறிக. "புகழுநல்லொருவனென்கோ பொருவில்சீர்ப்பூமியென்கோ, திகழுந்தண்பரவையென்கோ, தீயென்கோ வாயுவென்கோ, நிகழுமாகாசமென்கோ நீள்சுடதிரண்டுமென்கோ, இகழ்விலிவ்வனைத்து மென்கோ கண்ணனைக்கூவுமாறே" என்றாற்போல, மிக்கஈடுபாட்டினால் இப்படி வியந்துகூறின ரென்க. இதனால், இந்நூலின் சிறப்பையும், இந்நூலாசிரியரது வேத சாஸ்திர பாண்டித்திய விசேஷத்தையும் விளக்கியவாறாம். மறைப்பொருள் முதலிய யாவும் இந்நூலில்இருத்தலை வெளிப்படையாகக் காணலாம்; குறிப்பால் நுண்ணிதின் உய்த்துஉணரத்தக்க இடங்களும் உண்டு.

(ஓதலாகாதென்று சிலர்க்கு) மறுக்கப்படுதல்பற்றி, மறையென்று பெயர்; மறு - பகுதி, ஐ - செயப்படுபொருள்விகுதி. இனி, இச்சொல்லுக்கு - (எளிதிலுணரலாகாதபடி) மறைந்துள்ளபொருள்களையுடைய தென்று காரணப்பொருள் கூறவுமாம். அவ்வேதந்தான், ருக் யஜுஸ் ஸாமம் அதர்