பக்கம் எண் :

திருவரங்கத்துமாலை127

வணம் என நான்கு வகையது. பொருள் - அர்த்தம். வேதத்தின்பிரிவு இரண்டனுள், யாகாதிகிரியைகளைக்கூறுவதும் கர்மகாண்டமெனப்படுவது மான பூர்வபாகத்தின் பொருளை "மறைப்பொருள்" என்றும், பகவானைக்குறித்ததும் உபநிஷத்தென்றும் வேதாந்தமென்றும் பிரமகாண்டமென்றுங் கூறப்படுவதும் வேதத்தின் தேர்ந்தகருத்துமான உத்தரபாகத்தின் பொருளை "அச்சிரப்பொருள்" என்றுங் கூறினர். அச்சிரம் - வேதசிரம் என்றபடி. செய்யா மொழியாதலாற் சிறந்தபிரமாணமாகிற வேதத்தின் பொருளை ஐயந்திரிபற நிச்சயிப்பதற்கு உரிய ஸாதநங்கள், ஸ்மிருதிகளும் இதிகாசபுராணங்களுமாம். ஆதலால், அவை வேதத்திற்கு உபப்ரும்ஹணங்க ளெனப்படும்; அவற்றுள், பெரும்பாலும் வேதத்தினது பூர்வபாகத்தின் அர்த்தம் ஸ்மிருதிகளாலும், உத்தரபாகத்தின் அர்த்தம் இதிகாசபுராணங்களாலும் நிச்சயிக்கத்தக்கது; இதிகாசபுராணங்களுட் புராணங்களினும் இதிகாசம் பிரபலமான பிரமாணமாம் என்பது உணர்க. இதுவே, மறைப்பொருள் முதலியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்திய முறைமைக்குக் காரணம். ("வேதார்த்தம் அறுதியிடுவது, ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களாலே; ஸ்ம்ருதியாலே, பூர்வபாகத்திலர்த்தம் அறுதியிடக்கடவது; மற்றையிரண்டாலும், உத்தரபாகத்திலர்த்தம் அறுதியிடக்கடவது. இவையிரண்டிலும் வைத்துக்கொண்டு இதிஹாஸம் ப்ரபலம்; அத்தாலே, அது முற்பட்டது" என்ற ஸ்ரீவசநபூஷண வாக்கியங்களும், அவற்றின் வியாக்கியானங்களும் இங்கு நோக்கத்தக்கன.) வேதத்தின்பொருளை நினைத்துச் செய்யப்பட்டன வாதலால் ஸ்ம்ருதிகளென்று பெயர்பெற்றனவும், ஆப்தர்களான மநு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஞ வல்க்யர் பராசரர் முதலானவர்களாற் சொல்லப்பட்டனவு மான தரும சாஸ்திரங்கள், "மனுவே முதலாம் முறை" எனப்பட்டன; அவை, பதினெட்டு. அவையெல்லாவற்றினுள்ளும் மநுஸ்ம்ருதியே மிகச்சிறத்தலால், "மனுவே முதலாம்" என்று அதனையே தலைமையாக எடுத்துக்கூறினர்; (எல்லா ருஷிகளும் ஒருதட்டும், மநு ஒரு தட்டுமாம்" என்றும், "மநுஸ்ம்ருதிக்கு மாறாக மற்றைப்பதினேழுஸ்ம்ருதிகளும் ஒரேவாக்காய்ச் சொல்லியிருந்தாலும் அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று" என்றும், "மநுஸ்ம்ருதிக்கு விரோதமான ஸ்ம்ருதி புகழையடையாது" என்றும் பலஇடங்களில் அந்நூலின்சிறப்புக் கொண்டாடப்பட்டிருத்தல் காணலாம்.) இதிஹாஸங்களாவன - பூர்வசரித்திரத்தைக் கூறுவனவான ஸ்ரீராமாயணம், மகாபாரதம் முதலியன. புராணங்களாவன - ஸ்ருஷ்டிக்கிரமம் முதலிய ஐந்துலக்ஷணங்களுடன் கூடியவையான பிராம்மம் பாத்மம் வைஷ்ணவம் முதலிய பதினெட்டாம். (புராணத்திற் காட்டில் இதிஹாஸத்துக்கு ப்ராபல்யம் - பரிக்ரஹாதிசயம், மத்யஸ்தசை, கர்த்துராப்ததமத்வம் ஆகிற இவற்றாலே" என்பர் ஆன்றோர்; இதன் விவரத்தை, தத்வநிர்ணயம், ஸ்ரீஸஹஸ்ரநாமபாஷ்யம், ஸ்ரீவசநபூஷணவியாக்கியானம் முதலியவற்றிற் கண்டும், கற்றுங் கேட்டு முணர்ந்த ஆன்றோர்பக்கல் கேட்டும் உணர்க; இங்கு விரிப்பிற் பெருகும்.)

இறைப் பொருள் - தலைமையாகிய பொருள். "முதலாவார் மூவரே யம்மூவருள்ளும், முதலாவான் மூரிநீர்வண்ணன்" என்றபடி எம்பெருமான்