நூல் | 1. | திருவாழி சங்குதிருவாழிவாழி சிறந்தகொண்ட | | லுருவாழி யோகத்திருத்துயில்வாழி யுலகளந்த | | மருவார்மதுமலர்த்தாள்வாழி வாழிவணங்குமன்பர் | | பெருவாழ்வனையபெருமாளரங்கப்பெருஞ்செல்வமே. | (இ - ள்.) திரு - ஸ்ரீமகாலக்ஷ்மி, வாழி - வாழக்கடவன்; சங்கு திரு ஆழி - ஸ்ரீசங்கசக்கரங்கள், வாழி - வாழக்கடவன; சிறந்த கொண்டல் உரு - சிறந்த காளமேகம்போன்ற (திருமாலின்) திருமேனி, வாழி - வாழக்கடவது; திரு யோகம் துயில் - (அப்பெருமானது) சிறந்த யோகநித்திரை, வாழி - வாழக்கடவது; உலகு அளந்த - உலகங்களை (இரண்டுஅடியாக) அளவிட்ட, மரு ஆழ் மது மலர் தாள் - வாசனைநிறைந்த தேனையுடைய தாமரை மலர்போன்ற திருவடிகள், வாழி - வாழக்கடவன; வணங்கும் அன்பர் பெருவாழ்வு அனைய - நமஸ்கரிக்கின்ற மெய்யடியார்கட்குப் பெரியவாழ்க்கை போன்ற, பெருமாள் - பெரியபெருமாளுடைய, அரங்கம் பெருஞ் செல்வம் - ஸ்ரீரங்கத்துப் பெரிய ஐசுவரியம், வாழி - வாழக்கடவது; (எ - று.) எம்பெருமானது தரிசனத்தைப் பெற்றபோது, அந்தத்தேவாதிதேவனு டைய முற்றுணர்வு, வரம்பிலாற்றல், யாவரையும்பாதுகாக்குந்திறம், அழியா வியல்பு முதலிய திவ்வியகுணங்களைக் கருதுதற்குமுன்னே அப்பெருமானது திவ்வியசௌந்தரியத்திற் கண்செலுத்தி அதனையே சேவித்து அதில் ஈடுபட்டு ஆழ்ந்து பக்திபரவசராகி, அதனால் தம்நிலையையும் எம்பெருமான் நிலையையும் மறந்து, "காலாதீதமான வைகுண்டத்திலே யிருக்கின்ற இந்த அரும்பொருள் காலம் நடையாடப்பெற்ற இவ்வுலகத்திலே கண்ணுக்கு இலக்காகுதலால், திருஷ்டிதோஷங்காரணமாக இதற்கு என்னதீங்கு வருமோ! என்று தமக்குஉள்ள ஆதராதிசயத்தால் அநாவசியமாக அதிக பயசங்கை கொண்டு "இத்திருமேனிக்கு எவ்வாற்றாலும் ஒருகுறையும் வராதிருக்க வேணும்" என்று வாழ்த்துபவராய் "திருப்பல்லாண்டு" என்னுந் திவ்வியப்பிர பந்தம் பாடி, இங்ஙனம் பொங்கும்பரிவுடையரானதனாற் பெரியாழ்வாரென்று பெயர்பெற்ற விஷ்ணுசித்தர் போலவே, இந்த அழகியமணவாளதாசரும் திருவரங்கநாதனைச்சேவித்தவுடனே முதலில் வாழ்த்துக்கூறலானார். இதனால், இவரது அன்பின்மிகுதி விளங்கும். எம்பெருமானைக் கண்டவளவிலே அடிமைத்தொழில்கள்செய்து தமக்குவேண்டுவனவற்றை வேண்டிப்பெற நினையாமல் அவனது வாழ்வையே தமக்குப் பரமபுருஷார்த்தமாக நினைத்தலின் அருமைபெருமைகளை உணர்க. பெரியபெருமாளைக் கண்ணெதிரிலே காணும்போது, அப்பெருமானைச் சார்ந்துள்ள செம்பொன்னிறத்தவளான பெரியபிராட்டியினது திருமேனியொளி காளமேகத்திற்கொடிமின்னல்போலக் கண்களைக்கவரும்படி மிக விளங்குதலால், "பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாக்களுக்கும் ஸர்வமங்களங்களை யுஞ்செய்பவளான இத்திருமகளது சேர்க்கை நித்யமாயிக்கவேணும்" என்று |