எல்லாநூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது மரபாதலால், "திரு" என்று தொடங்கினார்; "வழிபடு தெய்வவணக்கஞ் செய்து, மங்கலமொழி முதல்வகுத், தெடுத்துக்கொண்ட விலக்கண விலக்கியம், இடுக்க ணின்றி யினிது முடியும்," "சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள், கார் மலை சொல் எழுத்துக் கங்கை நீர் கடல் பூத் தேர் பொன், ஏருறு மிவை மூவாறும் இதன் பரியாயப்பேரும், ஆரு மங்கலச் சொல் செய்யு ளாய்ந்து முன்வைக்க நன்றாம்" என்பன நோக்குக. (1) | 2. | படுப்பவரைப்பணிமெல்லணையாகப் பருவரையாற் | | றடுப்பவரைப்பண்டுமண்டுகன்மாரி தரணியிடந் | | தெடுப்பவரைத் தம்மடியாரிடும்பச்சிலைக்குமுத்தி | | கொடுப்பவரைச் செம்பொற்கோயிலுள்ளேகண்டுகொண்டனனே. | (இ - ள்.) பணி - திருவனந்தாழ்வான் (ஆதிசேஷன்), மெல் அணை ஆக - மெத்தென்ற படுக்கை யாக, படுப்பவரை - (அதன்மேற்) பள்ளிகொண்டருள்பவரும், - பண்டு - முன்னே (கிருஷ்ணாவதாரத்தில்), மண்டு கல்மாரி - (இந்திரன்பெய்வித்த) மிகுதியான கல்மழையை, பரு வரையால் - பருத்த (கோவர்த்தனமென்னும்) மலையைக்கொண்டு, தடுப்பவரை - தடுத்தருளியவரும், - தரணி - (ஹிரண்யாக்ஷனாற் கவர்ந்துகொள்ளப்பட்ட) பூமியை, இடந்து எடுப்பவரை - (வராகாவதாரமாகிக்) கோட்டினாற்குத்தி யெடுத்தருளியவரும், - தம் அடியார் இடும் பசுஇலைக்கு - தமதுதிருவடிகளைச்சரணமடைந்த மெய்யடியார்கள் (அத்திருவடிகளில்) அருச்சிக்கின்ற பசுமையான திருத்துழாய்த்தளத்திற்காக, முத்தி கொடுப்பவரை - (அவ்வடியார்கட்குத் தமது) பெருவீட்டைக் கொடுத்தருள்பவருமான பெரியபெருமாளை, - செம்பொன் கோயிலுள்ளே - சிவந்தபொன்மயமான திருவரங்கம் பெரியகோயிலினுள்ளே, கண்டுகொண்டனன் - தரிசிக்கப்பெற்றேன்; (எ - று.) எம்பெருமானுக்குச் சகலவித கைங்கரியங்களையுஞ் செய்கின்றவனும் நித்தியர்களிலொருவனும் சர்ப்பராஜனுமான ஆதிசேஷன், "புல்கும்அணை யாந் திருமாற்கு அரவு" என்றபடி, அப்பெருமான் சயனிக்கத்திருவுளங் கொண்டபோது அவனது மென்மைக்குஏற்ற புஷ்பசயனம்போன்ற திருப் பள்ளிமெத்தையாக, அதில் அப்பரமன் பள்ளிகொண்டருளுதலால், "பணி மெல்லணையாகப் படுப்பவரை" என்றார். "இருளிரியச்சுடர்மணிகளிமைக்கு நெற்றியினத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த, அரவரசப்பெருஞ் சோதியனந்தனென்னு மணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவித், திருவரங்கப்பெரு நகருள் தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையாலடிவருடப் பள்ளிகொள்ளுங், கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண் டென்கண்ணிணைக ளென்று கொலோ களிக்கு நாளே" என்று பெரியார் பலகாலுங் காணவிரும்பிய திருமூர்த்தி யாதலால், அந்தத்திவ்வியமங்களவிக்கிரகத்தைத் தாம் காணப்பெற்ற பேற்றை "பணிமெல்லணையாகப்படுப்பவரை..... செம்பொற்கோயிலுள்ளே கண்டுகொண்டனன்" என்று வெளியிட்டார். தமக்குக்கட்புலனான வடிவமாதலால் "படுப்பவரைப் பணிமெல்லணையாக" என்று அர்ச்சாவதார |