பக்கம் எண் :

திருவரங்கத்துமாலை137

த்தை முதலிலும், விபவாவதாரங்களுள் வராகாவதாரம் கிருஷ்ணாவதார த்துக்குமுந்தியதாயினும் தமக்கு ஸந்நிஹிதமானதுபற்றிக் கிருஷ்ணாவதாரத்தை முதலிலும், அதற்குமுற்பட்ட வராகாவதாரத்தை அதன்பின்னும், அடியவர்க்கெளியனாகின்ற ஸௌலப்யமாகிற பொதுநிலையை அதன்பின்னு மாகக் கூறின ரென்க. "பருவரையாற் பண்டு மண்டு கன்மாரி தடுப்பவர்" "தரணியிடந்தெடுப்பவர்" என்ற இரண்டு விசேஷணங்களும், துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலன சீல ரென்பதை விளக்கின. "வாதாசநம்" என்று ஒரு பெயர் பெறும்படி காற்றைஉணவாகக்கொள்வதான பாம்பு அக்காற்றை உச்சுவாசநிச்சு வாசங்களினால் உட்கொள்ளும்போதும் வெளிவிடும்போதும் உடற்பூரிப்பையும் உடல்தளர்ச்சியையுங் கொள்வதாய்க் காற்றடைத்தமெத்தைபோன்று இனிதுபள்ளிகொள்ளுதற்குப் பாங்காதல் தோன்ற, "பணி மெல்லணையாக" எனப்பட்டது; "அடலாயிரவாய்ப்பொருந்து வந்தார் பணிப் பாயார்" என்பர் அழகரந்தாதியிலும்.

("மகரத்திற்சூரியன்வந்துதித்தகாலில் வந்திக்க விந்திரனைநோக்கிப் பொங்கல், மிகவிட்டுக்கயிலைமலைபோலேவைக்க விளையாட்டா யத்தனையு நீயேயுண்ணக், ககனத்திலிந்திரனும் வந்துபார்த்துக் கன்மழையை நிரை மீதில் விடுத்தமட்டில், இகபரத்திற்கிறையவனே நிரைக்காக் குன்றையெடு த்துமழைதடுத்தனையே யெம்பிரானே" என்பது காண்க.) திரிலோகாதிபதி யென்று பேர்படைத்தவனான தேவேந்திரன் தானே அவ்வுலகத்தில் ஒரு சார் நிரபராதியாயுள்ள சிலஉயிர்கட்கு நலிவுசெய்யப்புக் கவிடத்து எம்பெருமான் தான் அருள்கொண்டு பாதுகாத்தன னென்பதை விளக்கும், இவ்வரலாறு; "நாம் கோவர்த்தனமலையை ஆராதித்தோம்: அதனால்நேர்ந்த தீங்கைப் போக்கிக் கண்ணன் காத்தருளினான்" என்று இடையர்கள் நினைக்க வொண்ணாதெனக் கருதி, அவர்கள் ஆராதித்த மலையைக்கொண்டே காத்தருளின னென்க. இந்திரன் கல்மழை பொழிந்திட்டதனால், அதனைக் கற்கொண்டுதடுத்தான்; அன்றி நீர் மழையையே பொழிந்திருப்பானாயின் அதனை நீரைக்கொண்டே தடுக்கவல்ல ஸர்வசக்த னென்பது தோன்ற, "வரையாற் கல்மாரிதடுப்பவர்" என்றார். "கன்மாரியாகையாலே, கல்லையெடுத்து ரக்ஷித்தான்; நீர்மாரியாகில், கடலையெடுத்து ரக்ஷிக்குங்காணும்" என்று பட்டர் அருளிச்செய்வர்; இத்தால், இன்னதைக்கொண்டு இன்னகார்யஞ் செய்யக் கடவோமென்னும்நியதியில்லை: ஸர்வசக்தனென்கை" என்ற வியாக்கியான வாக்கியம், இங்கு அறியத்தக்கது.

("புண்ணியந்தெய்வதமுஞ் சேர்பூலோகத்தைப் புற்பாய்போற்சுருட்டிக் கொண்டே பாதாளம், நண்ணிரணியாட்சனைப் பின் தொடர்ந்தே யேகி நலமுடனே யாதிவராகத்தேவாகி, மண்ணுலகமனைத்துமிடந்தெடுத் தோர் கோட்டில்வைத்துவர வவன்மறிக்க வதைத்துத் தேவ, ரெண்ணவுலகீ ரேழும்படியப்பண்ணா யிறைவாநாராயணனே யெம்பிரானே" என்பர் பின்னோரும்.) இப்பொழுதுநடக்கிற சுவேதவராக கல்பத்துக்கு முந்திய பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து