பக்கம் எண் :

138திருவரங்கத்துமாலை

ஸ்ரீவராகாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டுநுனியாற் பூமியை யெடுத்து வந்தனனென்ற வரலாறும் உண்டு.

இயல்பிலே தமக்கு அடிமையான எல்லாவுயிர்களிடத்துங் காரண மின்றியெழுங் கருணையையுடையவனான கடவுள் அவர்கட்குத் தனது பேரின்பப்பெருவீட்டையளித்தருளுதற்கு ஒருவியாஜமாக அவர்களிடுவதொரு துளஸீதளத்தையெதிர்நோக்குகின்றனனென்பது விளங்க, "தம் அடியாரிடும் பச்சிலைக்கு முத்திகொடுப்பவர்" என்றார். பயனாகிய அந்தப் பரமபதத்தின் பெருமைக்கு இவர்களிடும் பச்சிலை ஏற்றஸாதநமன்றாதலை நோக்குமிடத்து, அவனது திருவருள் காரணமின்றியெழுந்ததாத லுணர்க. "பத்திரத்தையும் புஷ்பத்தையும் பழத்தையும் ஜலத்தையும் எவன் எனக்குப் பக்தியுடன் கொடுக்கின்றானோ, சுத்தமான மனத்தையுடையனான அவனது பக்தியினாற் கொடுக்கப்பட்டதாகிய அதனை நான் அங்கீகரிக்கின்றேன்" என்று ஸ்ரீகீதையிற் கண்ணபிரான் தானே அருளிச்செய்திருத்தல் இங்கு உணரத்தக்கது; "அச்சுத நின்மெய்யடியாருகந்தேயிட்டதணுவெனினுமக மேருவாகக்கொள்வாய், நிச்சயமாயுனைநம்பியெண்ணாமூடர்நினைத்திடிலோ நூற்றையொன்றாவுங்கொள்ளாயால்" எனப் பின்னோர்கூறியதுங் காண்க. "தம்மடியாரிடும் பச்சிலைக்கு முத்திகொடுப்பவர்" என்ற தொடரில், சிறியதைப் பெற்றுக் கொண்டு பெரியதைக் கொடுத்தலாகிய பரிவர்த்தநாலங்காரந் தோன்றுதல் காண்க; அதனிலக்கணத்தை, தண்டியலங்காரத்தில் "பொருள்பரிமாறுதல் பரிவருத்தனையே" எனக் காணலாம்; இது, மாற்றலணி என்றுஞ் சொல்லப்படும். "இலைக்கும்" எனப் பிரித்து இழிவுசிறப்பும்மையாகக்கொள்ளுதலு மொன்று. அடியார்கள் எம்பெருமானை வசப்படுத்தும் பச்சிலையாகின்றது திருத்துழா யென்பதும் இங்குத் தோன்றும்; ஆகவே, அதனால் அவர்கள்வசப்பட்டு அவர்கட்குப் பெருவீடுதந்திடுகின்றன னென்க.

படுப்பவர் கொடுப்பவர் என்றவற்றில், பகரவொற்றிடைநிலை - எதிர்கால முணர்த்தாமல் தன்மையுணர்த்திற்று; படுக்குமியல்பினர் கொடுக்குமியல்பினர் என்று பொருள். "பண்டு தடுப்பவர்" என்றது, இயல்பினால் இறந்த காலம் எதிர்காலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி, "யாம் பண்டு விளையாடுவது இச்சோலை" என்றாற் போல. "பண்டு" என்பதை, "எடுப்பவர்" என்பதனோடுங் கூட்டுக; அதுவும் அவ்வகைக் காலவழுவமைதியே. படுப்பவரை, தடுப்பவரை, எடுப்பவரை, கொடுப்பவரை என்றவை - ஒருபொருளின்மேல் வந்த பலபெயர்கள்; இவை, "கண்டுகொண்டனன்" என்னும் ஒருவினையைக் கொண்டன. விசேஷணச்சொற்கள், விசேஷ்யச் சொல் இவையனைத்திலும் வேற்றுமையுருபு விரியவைப்பது, வடமொழி நடை. இங்கே "படுப்பவரை" என்றதை விசேஷ்யமாகவும், மற்றைமூன்றையும் விசேஷணமாகவுங் கொள்ளுதல் சாலும். பணம் - படம்; அதனை யுடையது பணீ யென வடமொழிக்காரணக்குறி; அது ஈறுகுறுகிற்று. மெல் அணை - பண்புத்தொகை. "வரையால்" என்பதில், "ஆல்" உருபு - கருவிப் பொருளது. கல்மாரி - சிலாவர்ஷம்; ஆலாங்கட்டிமழை. தரணி - வடசொல்; (பொருள்களைத்) தரிப்ப தென்றறு காரணப்பொருள்படும். இடந்து,