இட - பகுதி. அடியார் - அடிமை யென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர். பசுமை + இலை = பச்சிலை: பண்புப்பெயர், ஈறுபோய்த் தன்ஒற்றுஇரட்டிற்று. முக்தி என்ற வடசொல்லுக்கு - (பற்றுக்களை) விட்டு அடையு மிடமென்பது உறுப்புப்பொருள்; வீடு என்ற தமிழ்ப்பெயரும் இப்பொருள் கொண்டதே. செம்பொன் - மாற்றுயர்ந்த பொன். கோயில் = கோவில்: இலக்கணப்போலி; கோ இல் - இறைவனது இடம், தலைமையான இடம்; இது தேவாலயங்கட்கெல்லாம் பொதுப்பெயராயினும், நூற்றெட்டுத்திருமால் திருப்பதிகளுள் திருவரங்கம் தலைமைபெற்ற தாதலால், அதனை "கோயில்" எனச் சிறப்பாகவழங்குவது, வைஷ்ணவசம்பிரதாயம்; இது, காரணவிடுகுறி யின்பாற்படும். கண்டுகொண்டனன் - "அன்" விகுதி, தன்மையொருமைக்கு வந்தது. (2) | 3. | ஆளானவர்கண்களிகூரரங்கத்தரவணைமேற் | | காளாசலமெனக்கண்டுகொண்டேன் மறைகாணவொண்ணாத் | | தாளாயிரஞ் செம்பொன்மாமுடியா யிரந் தாமநெடுந் | | தோளாயிரந் திருக்கண்ணாயிரங் கொண்ட சோதியையே. | (இ - ள்.) மறை காண ஒண்ணா - வேதங்களாலும் அறியமுடியாத, தாள் ஆயிரம் - ஆயிரம் திருவடிகளையும், செம் பொன் மா முடி ஆயிரம் -சிவந்த பொன்மயமான அழகிய கிரீடத்தைத் தரித்த ஆயிரம்திருமுடிகளை யும், தாமம் நெடுந் தோள் ஆயிரம் - மாலையைத்தரித்த பெரிய ஆயிரம் திருத்தோள்களையும், திரு கண் ஆயிரம் - ஆயிரம் திருக்கண்களையும், கொண்ட - தன்னிடத்திற் கொண்ட, சோதியை - ஒளிவடிவமான ஸ்ரீமந்நாராயண மூர்த்தியை, ஆள் ஆனவர் கண் களி கூர் அரங்கத்து - அடியார்கள் (கண்டு) கண்களிப்புமிகுதற்குக்காரணமான திருவரங்கம்பெரிய கோயிலில், அரவு அணைமேல் - ஆதிசேஷனாகிய சயனத்தின்மேல், காள அசலம் என கண்டு கொண்டேன் - கருநிறமுள்ளதொரு மலை (கிடந்தாற்) போல(ச் சயனத் திருக்கோலமாயிருக்க)க் காணப்பெற்றேன்; (எ - று.) எல்லாப்பொருள்களையும் உள்ளபடி உணர்ந்து உரைக்கின்ற வேதங்களாலுங் காணமுடியாத பரஞ்சோதி ஸ்வரூபமான பரமாத்மாவை இந்நிலவுலகத்திலே திருவரங்கத்திருப்பதியில் திருவனந்தாழ்வானாகிய திருப்பள்ளி மெத்தையில் "பச்சைமாமலைபோல்மேனி பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா" என்றபடி ஒருநீலமலைபோலே பள்ளிகொண்டிருக்கக் காணப் பெற்றேன் என்று, பிறர்களுக்கு அரியவித்தகனான எம்பெருமான் பத்துடையடியவர்க்கு எளியனாகின்ற இயல்பையும், தமது பாக்கியவிசேஷத்தையும், கீழ்ச்செய்யுள்போலவே இச்செய்யுளும் கொண்டாடிக்கூறியதாம். "மறை காணவொண்ணா" என்றது, சோதியோடு இயையும்; பரப்ரஹ்மஸ்வரூபத்தைத் தான் முழுவதுங் காணமாட்டாமையை, வேதம் தானே கூறுகின்றது. தேஜோரூபி யாதலால், "சோதி" என்றார்; அடுத்தசெய்யுளில் "ஒண்சுடர்" என்பதுங் காண்க. ஆள் ஆனவர் - அடிமைப்பட்டவர். கண்களிகூர் - கண்களாற்காணுத லால் மனம்களிகூர்தல், அக்கண்களின்மேல் ஏற்றிக்கூறப்பட்டது; ஒரு |