பக்கம் எண் :

திருவரங்கத்துமாலை141

(இ - ள்.) எள்ளும் எண்ணெயும் போல் -, நீங்காது - இடையறாமல், உலகத்து உயிர்க்கு உயிர் ஆகி - உலகத்திலுள்ள ஜீவாத்மாக்களுக்கு அந்த ராத்மாவாகியும், நியாமகன் ஆய் - (அந்த ஜீவாத்மாக்களுக்கெல்லாம்) தலைவனாகியும், ஓங்காரம் ஆய் - பிரணவமந்திரஸ்வரூபியாகியும், அதன் உள் பொருள் ஆய் - அம்மந்திரத்தினது உள்ளேயடங்கிய பொருளாகியும், நின்ற - (எந்நாளும் அழிவின்றி ஒரேதன்மையதாய்) நிலைபெற்ற, ஒள் சுடர் - பிரகாசிக்கின்ற சோதியானது, பூ காவேரி புனல் கோயிலுள்ளே - அழகிய காவேரி நதியின் நீரினாற் சூழப்பெற்ற திருவரங்கம் பெரியகோயிலினகத்தே, மிக்க போகம் எல்லாம் யாம் காண - மிகுதியான போகங்க ளெல்லாவற்றையும் நாம் காணும்படி, யோகம் துயில் கொண்ட ஆறு - யோகநித்திரையைக் கொண்டிருக்கின்ற விதம், (என்ன ஆச்சரியம்!) (எ - று.)

உடலினுள்ளே உயிர் அதற்குத் தாரகமாய் நியாமகமாயச் சேஷியாய்த் தங்கியிருத்தல்போலப் பரமாத்மா ஜீவாத்மாக்களினுள்ளே அந்தர்யாமியாய் அவற்றிற்குத் தான் தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய் விடாது வீற்றிருத்தலால், "நீங்காது உலகத்து உயிர்க்குஉயிராகி நியாமகனாய்" என்றார். "எள்ளும் எண்ணெயும் போல்" என்றா ராயினும், எள்ளினுள் எண்ணெய் போ லென்பது கருத்து; அது பிரிந்து காட்டாமல் எங்கும் பரந்து மறைந்துநிற்றற்கு உவமை. எள் - ஜீவாத்மாவுக்கும், எண்ணெய் - பரமாத்மாவுக்கும் உபமானம். "எள்ளுமெண்ணெயும்போல்" என்றதனால், எல்லாம் தானாகியும் அல்லதுமாகியும் இறைவன் நிற்கின்ற நிலையைத் தோன்றவைத்தன ரென்னலாம். "உலகம்" என்றது, அசித்துக்களை. "உயிர்" என்றது, சித்துக்களை. "உயிர்க்குஉயிர்" என்றது, ஈசுவரனை. "உலகத்து உயிர்க்கு உயிராகி நியாமகனாய்" என்றதனால், சித்துக்களுக்குப்போலவே அசித்துக்களுக்கும் பரமாத்மா தாரகனும் நியாமகனும் சேஷியு மாதல் தோன்றும். சித் அசித் ஈச்வரன் - தத்துவத்திரயம். இதுவே, விசிஷ்டாத்வைத சித்தாந்தம் எனப்படும். "கருதரிய வுயிர்க்குயிராய்க் கரந்தெங்கும்பரந்துறையும், ஒரு தனிநாயக மென்றா லுன்புகழ்க்கு வரம்பாமோ" என்பர் திருவரங்கக் கலம்பகத்திலும். ("திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசைப், படர்பொருள்முழுவதுமா யவையவைதொறும், உடன்மிசையுயிரெனக்கரந்தெங்கும் பரந்துளன்," "பரந்ததண்பரவையுள்நீர் தொறும்பரந்துளன், பரந்த வண்டமிதென நிலவிசும் பொழிவறக், கரந்தசிலிடந்தொறு மிடந்திகழ் பொருடொறுங், கரந்தெங்கும்பரந்துளன்" என்றார் நம்மாழ்வாரும்.)

"எள்ளு மெண்ணெயும் போல் நீங்கா துலகத்துயிர்க் குயிராகி" - "எண்ணுமெண்ணெயுமியைய மற்றெப்பொருளகத்தும், நண்ணுநாரணன்" என்ற பாகவதத்தையும் காண்க. "ஓங்காரமா யதனுட்பொருளாய் நின்ற வொண்சுடர்" - "எப்பொழுதும் தியானஞ்செய்துகொண் டிருக்கின்ற யோகிகள், தங்களுடைய பாபபுண்யரூபமான கர்மங்கள் நசித்தவுடனே, எந்தச் சொரூபத்தைப் பிரணவப்பொருளாகக் காண்கின்றார்களோ," "உன்னுடைய ஆராதநரூபமான யாகங்களும், வஷட்காராதிகளும், சகலவேத மூலமான பிரணவமும் நீயே" என்றது விஷ்ணுபுராணம். தாரகன் - தாங்