குபவன், வாழச்செய்பவன். நியாமகன் - நியமிப்பவன், நடத்துபவன். சேஷி - தலைவன், உடையவன். சொல்லும் பொருளும் ஆகிய இரண்டுமாய் நிற்பவன் எம்பெருமானே யாதலால், "ஓங்காரமாய் அதனுட்பொருளாய் நின்ற" என்றார்; "ஓங்காரோ பகவாந் விஷ்ணு:" என்றது காண்க. "ஓங்காரம்" என்றதில், "காரம்" என்பது - சாரியை; அகாரம், ஆகாரம் என்றவற்றிற் போல. பிரணவம், அகார உகார மகாரங்க ளாகிய மூன்று ஓரெழுத்தொருமொழிகள் கூடிய தோ ரெழுத்தாம். அது ஸகலவேதகாரணமும், ஸகலவேதஸங்க்ரஹமும், ஸகலவேதஸாரமு மாதலால், தலைமைபற்றி எடுத்துக் கூறப்பட்டது. அதன் பொருள், ஸர்வரக்ஷகனான திருமாலுக்கே உரியபொருள் ஜீவாத்மா என்பது; இதில், பகவானுக்கே பிராதானியந் தோன்றுதலால், பகவான் பிரணவத்தின் பொருளாவன்: "ப்ரணவோ பகவத்வாசீ ப்ராதாந்யாதர்த்தஸம்பவாத்" என்பது காண்க. ஒண்சுடர் - சூரிய சந்திர அக்கினிகளாகிய முச்சுடர்களின் ஒளியினும் மேம்பட்ட பேரொளி; புறவிருளையேபோக்குகின்ற அவ்வொளி களினுஞ்சிறக்குமாறு அகவிருளையும் அகற்றும் ஞானவொளி; தோற்றக்கேடுகளும் மிகுதிகுறைவுகளுமின்றி என்றும் ஒருபடிப்பட விளங்கும்ஒளி. இப்படி சேதநாசேதநங்களுக்கு வியாபகனும் அந்தர்யாமியும் மந்த்ரார்த்தஸ்வரூபியும் தேஜோரூபியுமான பரமாத்மா சில்வாழ்நாட்பல்பிணிச் சிற்றறிவினராகிய நாமெல்லாம் எளிதிற்சேவித்து ஈடேறுமாறு இவ்வுலகத்தில் திருவரங்கம் பெரிய கோயிலிலே பள்ளிகொண்ட திருக்கோலமாய்க் காட்சிதந்தருள்கின்ற திருவருட்பெருமை என்னே! என்று கொண்டாடியவாறாம். முடிக்குஞ்சொல், வருலித்து உரைக்கப்பட்டது. விதத்தையுணர்த்துகின்ற "ஆறு" என்ற சொல் வருமிடங்களில் முடிக்குஞ்சொல் கூறப்படாது எஞ்சிநிற்பதை இலக்கியங்களிற் பலவிடத்துங் காணலாம்; இது, இசையெச்சம். இப்படி "ஆறு" என்ற சொல் முடிபின்றி வியப்புவிளக்குதலை, "வெள்ளைவாகனக்குரிசில்வின்மை வல்லப மிருந்தவாறே" என்ற வில்லபுத்தூரார் பாரதத்திலுங் காண்க. "பூங்காவிரிப்புனல்" என்ற அடைமொழி, "தெளிவிலாக்கலங்கல்நீர் சூழ் திருவரங்கம்" என்றபடி தலத்தின் நீர்வளவாய்ப்பைக் காட்டும். திருவரங்கம் போகமண்டபமெனப்படுதலின், "மிக்கபோகமெல்லாம் யாம்காண யோகத்துயில்கொண்ட ஆறு" எனப்பட்டது; மூன்னும் "பெருமா ளரங் கப்பெருஞ்செல்வம்" என்றார். போகம் - வைபவம்: செல்வமும், சுகானுபவமும். அங்கு எம்பெருமானுக்கு எல்லா ஐசுவரியங்களும் குறைவறவிருத்தலும், அப்பெருமான் தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையாலடி வருட இனிது பள்ளிகொள்ளுதலுங் காண்க. இனி, "மிக்கபோகமெல்லாம் யாம்காண" என்பதற்கு - (எம்பெருமானைச் சேவித்ததன்பயனாக இம்மைமறுமைவீடுகளில்) மகாபாக்கியங்களையெல்லாம் நாம் அனுபவிக்கும்படி யென்றும் பொருள் கொள்ளலாம். மிக்கபோகம் - வரம்பிலின்ப மெனப்படும் நிரதிசயசுகாநுபவ மென்றலுமாம். காவிரி - காவேரீ என்ற வடசொல்லின் விகாரம்; அப்பெயர் - கவேரனென்ற அரசனது மகள் என்று பொருள்படும். போகம், யோகம், நியா |