பக்கம் எண் :

16திருவரங்கத்தந்தாதி

பெற்ற, அரங்கர் - திருவரங்கமென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கின் றவரும், கார்ஆழி வண்ணம் பெருமாள் - கரியகடல்போன்ற திருநிறமுடைய நம்பெருமாளுமாகியஎம்பெருமான்விஷயமாக (யான்பாடுகிற), அந்தாதிக்கு - அந்தாதியென்னும் பிரபந்தம் இடையூறின்றிஇனிது நிறைவேறுதற்கு, காப்பு - பாதுகாவலாகும் பொருள்கள், - உரைக்கின் - (இன்னவையென்று) சொல்லுமிடத்து, - சீர் ஆழி அம் கையில் பொன்பிரம்புஏந்திய சேனையர்கோன் - சிறந்தமோதிரத்தை யணிந்த அழகியகையிற் பொன்மயமானபிரம்பை [செங்கோலைத்] தரித்த சேனைமுதலியாரும், கூர் ஆழி சங்கம் திருகதை நாந்தகம் கோதண்டமே - கூரிய சக்கரமும் சங்கமும் அழகிய கதையும் வாளும் வில்லுமாகிய (திருமாலின்) பஞ்சாயுதங்களும்; (எ - று.)

"சிறைப்பறவை புறங்காப்பச் சேனையர்கோன் பணிகேட்ப, நறைப்படலைத் துழாய்மார்பினாயிறுபோன்மணிவிளங்க, அரியதானவர்க்கடிந்த ஐம்படையும்புடைதயங்க,.... ஆயிராவய்ப்பாம்பணைமேலறி துயிலினினி தமர்ந்தோய்", "கோலார்ந்தநெடுஞ்சார்ங்கம்கூனற்சங்கம்கொலையாழி கொடுந் தண்டு கொற்றவொள்வாள், காலார்ந்தகதிக்கருடனென்னும்வென்றிக்கடும் பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ்காப்பச், சேலார்ந்தநெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத் தரவணையிற் பள்ளிகொள்ளு, மாலோன்" என்றபடி எம்பெருமானது திருவுள்ளக்கருத்தின்படி அவனுக்குக் குற்றேவல்செய்யும் பரிசனங்களும் எப்பொழுதும் அவனருகில் விடாதுநின்று அவனது திருமேனிக்குப் பாதுகாவல்செய்பவரு மான ஸ்ரீசேனைமுதலியாரும், திவ்விய பஞ்சாயுதமூர்த்திகளுமே, அப்பெருமானது தோத்திரமாகத் தாம்செய்யும் அந்தாதிக்கு நேரும் இடையூறுகளை நீக்கிப் பாதுகாப்ப ரென்று கொண்டு அவர்களை இவ்வந்தாதிக்குக் காப்பு என்றார்.

ஸ்ரீவைஷ்ணவசமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக் காப்புச்செய்யுள் அந்தஸ்ரீமகாவிஷ்ணுவினதுதொண்டர்கட்குத்தலைவரான சேனைமுதலியாரையும், அத்திருமாலின் ஐம்படையையுங் குறித்ததாதலால், வழிபடுகடவுள்வணக்கம் ஏற்புடைக்கடவுள்வணக்கம் என்ற வகையிரண்டில் வழிபடுகடவுள்வணக்கமாம். அடுத்த நான்குசெய்யுள்களும் இவ்வாறே. தம் தமதுமதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலேயன்றி அக்கடவுளினடியார் களை வணங்குதலும் வழிபடுகடவுள்வணக்கத்தின் பாற்படுமென அறிக.

சேனையர்கோன் - பரமபதத்திலுள்ள நித்தியமுக்தர்களின் திரளுக்கும் மற்றவுலகங்களிலுள்ள திருமாலடியார்கட்கும் தலைவராதலாற்சேனை முதலியாரென்றும் சேனைத்தலைவரென்றும் சொல்லப்படுகிற விஷ்வக்ஸேநர். தம்மைச்சரணமடைந்தவர் தொடங்குந் தொழில்கட்கு வரும் விக்கினங்களை [இடையூறுகளை]ப் போக்குதலாலும், தம்மையடையாது அகங்கரித்தவர்கட்கு விக்கினங்களை ஆக்குதலாலும் விக்நேசுவரரென்று பெயர்பெற்றவரான விநாயகர் இவரது அம்சத்தைச் சிறிதுபெற்றவரே யாதலால், இவரை முதற்காப்பாகக் கொள்ளுதல் சாலும். "ஆளி லமர ரரங்கேசர்சேவைக் கணுகுந்தொறுங், கோளில் திரளை விலக்கும் பிரம்பின் கொனை படலால், தோளிலடித்தழும்புண்டச்சுரர்க்கு" என்றபடிதிரள்விலக்குதற்பொருட்டும்,