ப்பாடலில் தேர்ச்சிபெற்று மகாவிஷ்ணுபக்தரான இவர், ரங்கநாதனுக்குப் பாடல்திருத்தொண்டுசெய்யக் கருதி, தாம்தாழ்ந்தகுலத்தில்வளர்ந்தவராதலால் உபயகாவேரிமத்தியிலுள்ள ஸ்ரீரங்கதிவ்வியக்ஷேத்திரத்தில் அடியிடு தற்குந்துணியாமல் தென்திருக்காவேரியின் தென்கரையில் திருமுகத்துறைக்கு எதிரிலே யாழுங்கையுமாக நின்றுகொண்டு நம்பெருமாளைத் திசைநோக்கித் தொழுது இசைபாடி வருகையில், ஒருநாள், நம்பெருமாள் தமக்குத்தீர் த்தகைங்கரியஞ்செய்பவரான லோகசாரங்கமகாமுனியின் கனவில் தோன்றி 'நமக்கு நல்லன்பரான பாண்பெருமாளை இழிவாக நினையாமல் நீர் சென்று தோள்களில்எழுந்தருளப்பண்ணிவாரும்' என்றுநியமிக்க, அவரும் அங்ஙனமே சென்று பாணரை அரிதில்இசைவித்துத் தோளில் எடுத்துக்கொண்டு வந்துசேர்க்க, அம்முனிவாகனர் அணியரங்கனைச்சேவித்து அவனடியிலமர்ந்தனர்; இங்ஙனம் விசேஷகடாக்ஷம் பெற்றமைபற்றி, 'அருட்பாண்பெருமாள்' என்றார். ஐயன் - ஆர்யன்: பூசிக்கத்தக்கவன், அந்தணன்; ஆசாரியன். மெய்யன்பர்காற்பொடி - உள்ளும்புறமும் ஒத்துத் தொண்டுசெய்யும் மெய்யடியாரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவடித்தூளிபோல அவர்கட்குக் கீழ்ப்படிந்து அடிமைபூண்டு ஒழுகுபவராதலால், இவர்க்கு, தொண்ட ரடிப்பொடியென்று திருநாமம். இளமைதொடங்கி எப்பொழுதும் தமது சித்தத்தை விஷ்ணுவினிடத்திலே செலுத்தி "மார்வமென்பதோர்கோயிலமைத்து மாதவனென்னுந் தெய்வத்தை நாட்டி" என்னும்படி அப்பெருமானை மனத்திலேநிலைநிறுத்தித் தியானித்துவந்ததனால், விஷ்ணுசித்தர் என்று பெரியாழ்வார்க்குப்பெயர். கோதை - மாலை; எம்பெருமானுக்கு மாலைபோல மிகஇனியளா யிருப்பவள்; அல்லது, எம்பெருமானுக்குச் சமர்ப்பித்தற்காகத் தனதுதந்தையார் அமைத்துவைத்த பூமாலையை அவர்இல்லாத சமயத்தில் தான் சூடிக்கொண்டு அழகுபார்த்துப் பின்பு கொடுத்தவள்; அன்றி, எம்பெருமானுக்குப் பாமாலை சூட்டினவள். "ஆழ்வார்கள்தஞ் செயலை விஞ்சிநிற்குந் தன்மையளாய்ப், பிஞ்சாப்பழுத்தாளை யாண்டாளை" என்றபடி. ஞானபக்தியாதிகளில் ஆழ்வார்களனைவரினும் மிகவிஞ்சியிருத்தல், மிக்க விளமையிலேயே பரமபக்தியை இயல்பாகக்கொண்டமை முதலிய சிறப்புக்களை யுடைமையால், 'வியன்கோதை' என்றார். கலியன் - மிடுக்குடையவன். சோழராசன் கட்டளைப்படி மங்கை நாட்டுக்கு அரசராகிய இவ்வாழ்வார் குமுதவல்லி யென்னுங் கட்டழகியை மணஞ்செய்துகொள்ளும்பொருட்டு அவள்விருப்பத்தின்படி நாள்தோறும் ஆரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து வருகையில், கைப்பொருள்முழுவதுஞ் செலவாய்விட்டதனால் வழிபறித்தாகிலும் பொருள் தேடிப் பாகவதததீயாராதநத்தைத் தடையற நடத்தத் துணிந்து வழிச் செல்வோரைக் கொள்ளையடித்து வரும்போது ஸ்ரீமந்நாராயணன் இவரை யாட்கொள்ளக் கருதித் தான் ஒரு பிராமணவேடங் கொண்டு பலஅணி கலங்களைப்பூண்டு மணவாளக்கோலமாய் மனைவியுடனே இவரெதிரில் எழுந்தருள, இவர் கண்டு களித்து ஆயுதபாணியாய்ப் பரிவாரத்துடன் சென்று அவர்களை வளைந்து வஸ்திர ஆபரணங்களையெல்லாம் அபகரிக்கையில், அம்மணமகன்காலிலணிந்துள்ள மோதிரமொன்றைக் கழற்றமுடியாமையால் |