ஒப்பிலேனாகிலு நின்னடைந்தே னானைக்குநீயருள்செய்தமையால், எய்ப்பென்னை வந்து நலியும்போ தங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன், அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தே னரங்கத்தரவணைப்பள்ளியானே" என்ற பதிகத்தின் கருத்துக் கொண்டது, இச்செய்யுள். உபாயாந்தரநிஷ்டர்க்குப்போல, ப்ரபந்நர்க்கு அந்திமஸ்மிருதி வேண்டுமென்ற நியமமில்லை யாதலால், இவ்வாறு கூறுகின்றனர். (109) (நைரபேக்ஷ்யம்.) 110. | நீடுந்திகிரிப்படையாயுனைக்கற்றுநின்னையென்றும் | | பாடும்படித்தமிழ்ப்பாடறந்தாய் பழநான்மறைநூ | | றேடுந்திருவரங்கா வடியேனுயிர்செல்லுமந்நாள் | | வீடுந்தரவிருந்தா யெனக்கேதினிவேண்டுவதே. |
(இ - ள்.) நீடும் திகிரி படையாய் - (விரோதிகளளவே விரைந்து) ஓடுகின்ற சக்கராயுதத்தை யுடையவனே! - பழ நால் மறை நூல் தேடும் - பழைய நான்கு வேதசாஸ்திரங்க ளெல்லாந் தேடுகின்ற, திருவரங்கா -!- உனை கற்று - உன்னைப் படித்து, என்றும் - எந்நாளும், நின்னை - உன்னை, பாடும்படி - (அடியேன்) பாடித்துதிக்கும்படி, தமிழ் பாடல் - தமிழ்ப் பாடல்களை, தந்தாய் - ஈந்தருளினாய்; அடியேன் -, உயிர் செல்லும் அ நாள் - உயிர் விடுகின்ற அக்காலத்தில், வீடும் - மோக்ஷசாம்பிராச்சியத்தையும், தர இருந்தாய் - (அடியேனுக்குக்) கொடுக்க இருந்தாய்; எனக்கு இனி வேண்டுவது ஏது - அடியேனுக்கு இனிமேல் ஒன்றும் பெறவேண்டுவதில்லை; (எ - று.) தமது ஜாயமாநகடாக்ஷத்தால், எம்பெருமான் தம்மிடத்து நிர்ஹேதுகமாக அருள்செய்தமைபற்றி இனித் தமக்கு ஒன்றுங் குறையில்லாமையால், இதனால் தம்முடைய நைரபேக்ஷ்யத்தை (ஒன்றிலும் விருப்பின்மையை) வெளியிடுகின்றனரென்க. உனைக்கற்று - உன்திருநாமங்களையும் வைபவங்களையுங் கற்றறிந்து என்றபடி. பாடல்தருதல் - பாடும்படி அநுக்கிரகித்தல். தெளிவுபற்றி, இருந்தா யென இறந்தகாலத்தாற்கூறினார்; காலவழுவமைதி. பேறு தப்பா தென்று துணிந்திருத்தல், பிரபந்நனுக்கு அவசியாபேக்ஷித மென்று மேலோர் அருளிச்செய்திருத்தல் காண்க. (110) (அந்யசேஷத்வநிவ்ருத்தி.) 111. | ஆவைக்கல்லாவையெதிரென்றுசொல்லியழுக்கடைந்த | | நாவைப்பரிசுத்தம்பண்ணியவே கஞ்சனஞ்சன்விட்ட | | கோவைச்சகட்டைப்பகட்டைப்பொருதியகோயிலில்வாழ் | | தேவைப்பகர்ந்தசெஞ்சொற்றிருநாமங்கள்சிற்சிலவே. | (இ - ள்.) கஞ்சன் நஞ்சன் விட்ட - விஷம்போன்ற துஷ்டசுவபாவத்தையுடைய கம்ஸன் ஏவியனுப்பிய, கோவை - எருதையும், சகட்டை - சகடா சுரனையும், பகட்டை - (குவலயாபீடமென்னும்) யானையையும், பொருதிய - கொன்று வென்ற, கோயிலில் வாழ் தேவை -திருவரங்கம் பெரிய கோயிலில் நித்தய வாசம் பண்ணுகின்ற திருவரங்கநாதனை, பகர்ந்த - சொல்லித் துதித்த, செம் சொல் திருநாமங்கள் சில சில - சிலசில செஞ்சொற்களாகிய திருநாமங்கள், - ஆவை - உண்மையான பசுவையும், கல் ஆவை - |