பக்கம் எண் :

26திருவரங்கத்தந்தாதி

ஆழ்வாரருளிச்செயல்களை அடியொற்றி, 'திசைமுகன்சேவிப்பக்கந்திருவரங் காதரித்தின்னிசைபாடத் திருக்கண்வளர் திருவரங்கா எழுந்திரு' என்றார். திசைமுகன் - நான்குதிசையையும்நோக்கிய நான்குமுகமுடையவன்; எம் பெருமானைத்துதித்தல் முதலியன செய்தற்கு வேண்டிய கருவியிற் குறைவற்றவனென்பது இதில்தொனிக்கும். சேவிப்ப, பாட - வினைச் செவ்வெண். கந்தர்வர் என்ற வடமொழி, யமகநயத்தின் பொருட்டு, கந்திருவரென விகாரப்பட்டது; பதினெண்வகைத் தேவகணங்களுள் ஒருசாரார் இவர்: இசை பாடுதலிற் சிறந்தவர். அங்கு - அப்பிரமன் போலவே யென்றபடி; அவ்விடத்திலே யெனினுமாம்: அசையாகவுங் கொள்ளலாம்.

உன் பழவடியேன் - "எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்ப னேழ் படிகால்தொடங்கி வந்துவழி வழியாட்செய்கின்றோம்" என்றபடி வம்சபரம்பரையாக நெடுங்காலமாய் உனக்கு அடிமைசெய்துவருகிற தொண்டக்குலத்தில் தோன்றிய நான் என்றபடி. அழகியமணவாளதாசர் பெரியபெருமாள் திருவடிகளிலே அடிமைசெய்ய ஆசைப்பட்டு அருகிற்சென்றவளவிலே, அர்ச்சாரூபியான அப்பெருமான் எதிர்முகங்கொடுத்தல், திருக்கண்களாலே குளிர நோக்குதல், கைகளைநீட்டியணைத்தல், குசலப்ரச்நம்பண்ணுதல் முதலியன செய்யாதே பள்ளிகொண்டிருக்க, அவனைப் பள்ளியுணர்த்தி அவனுணர்ந் தருளும்போதையழகுகண்டு அவன் உகந்து வாய்திறந்து ஏவுங் குற்றேவல்களைச் செய்யவேண்டி, அவனை 'எழுந்திரு' என எழுப்புகிறார். எழுந்திருத்தல் - துயிலொழிதல். இதில், இரு என்பது - துணைவினை. இனி, எழுந்து இரு - நாளோலக்கமாக வீற்றிரு என்றுங் கொள்ளலாம். "கிடந்தநாள் கிடந்தாய்எத்தனை காலங்கிடத்தி உன்திருவுடம்பசையத், தொடர்ந்துகுற்றே வல்செய்துதொல்லடிமைவழிவருந்தொண்ட ரோர்க்கருளித், தடங்கொள்தா மரைக்கண்விழித்து நீயெழுந் துன்தாமரைமங்கையு நீயும், இடங்கொள் மூவுலகுந்தொழஇருந்தருளாய் திருப்புளிங்குடிக்கிடந்தானே" எனப்பள்ளி கொண்ட பெருமாளை நம்மாழ்வார் துயிலுணர்த்தியெழுப்பி அடிமைசெய்யப் பரரித்தமை காண்க. "மறந்தும் புறந்தொழா மாந்தர்" ஆதலால், "எற்றைக்குமேழேழ்பிறவிக்கு முன்றன்னோ, டுற்றோமேயாவோ முனக்கே நாமாட்செய்வோம்" என்றாற்போல, "உன்பழவடியேன் உனக்கே தொண்டு செய்வதற்கு வரங் காதலித்தேன்" என்றார்; ஏ - பிரிநிலை. வரம் - வேண்டுவன கொள்ளுதல்.

எல்லா நூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது மரபாதலால், 'திரு' என்று தொடங்கினார்; "சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள், கார் மலை சொல் எழுத்துக் கங்கை நீர் கடல் பூத் தேர் பொன், ஏருறு மிவை மூவாறும் இதிற்பரியாயப்பேரும், ஆரு மங்கலச்சொல் செய்யுளாய்ந்து முன்வைக்க நன்றாம்" என்பது காண்க.

(1)

2.செய்யவளைக்குருவின்னருளாற்றிருத்தாள்வணங்கிச்
செய்யவளைக்குலஞ்சூழரங்கேசன்சிறிதமுது
செய்யவளைக்கும்புவிக்குமங்காந்தசெவ்வாய்முகுந்தன்
செய்யவளைக்குஞ்சிலம்பணிபாதங்கள்சேர்ந்தனமே.