(இ - ள்.) குரு இன் அருளால் - ஆசாரியருடைய இனிமையான கிருபாகடாக்ஷத்தினால், செய்யவளை திரு தாள் வணங்கி - திருமகளைத் திருவடி தொழுது, - செய்யவளை குலம்சூழ் அரங்க ஈசன் - கழனிகளிலுள்ள சங்கினங்கள் சூழப்பெற்ற திருவரங்கத்து நாதனும், அளைக்கும் புவிக்கும் அமுது செய்ய சிறிது அங்காந்த செம்வாய் முகுந்தன் - வெண்ணையையும் பூமியையும் உண்ணுதற்குச் சிறிதுதிறந்த சிவந்த வாயையுடைய முகுந்தனென்னும் ஒரு திருநாம முள்ளவனுமான திருமாலினது, செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் - செவ்வியையுடைய வளைந்துள்ள சிலம்பென்னும் ஆபரணத்தை யணிந்த திருவடிகளை, சேர்ந்தனம் - அடைந்தோம்; (எ - று.) ஸதாசாரியனையடுத்து அவனபிமானத்தை அவனருளாற்பெற்று அது மூலமாகவுண்டானபிராட்டிபுருஷகாரபலத்தாலே பெருமாள் திருவடியிலே சரண்புகுந்தோ மென்றார். ஆக, இதனால், ஆசார்யாபிமானமே உத்தாரக மென்னும் அர்த்தம் சொல்லியதாயிற்று. ஈற்றுஏகாரம் - தேற்றவகையால், இனி எமக்கு ஒருகுறையுமில்லையென்ற பொருளைத் தொனிப்பிக்கும், சேர்ந்தனம் என்ற தன்மைப்பன்மை - தனதுகுலத்து முன்னோரையும் பின்னோரையும் தனது அடியார்களையும் உளப்படுத்தும். வணங்கிச்சேர்ந்தனம் என இயையும். செய்யவள் - செந்நிறமுடையவள்: செம்மையென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர். குரு என்ற வடசொல் - அஜ்ஞாநமாகிய அகவிருளை யழிப் பவனென்று அவயவப்பொருள்படும். (கு - இருள், ரு - ஒழிப்பவன்.) இன் அருள் - பண்புத்தொகை; இன் - சாரியையெனக் கொண்டு குருவினது அருளென்றால், னகரமெய் - விரித்தல்விகாரமாம். செய்யவளைத் தாளை வணங்கி என இரண்டுசெயப்படுபொருள்வந்த வினையாகவாவது, செய்யவளினது தாளைவணங்கி என உருபுமயக்க மென்றாவது, செய்யவளைத் தாளிலே வணங்கி யென்றாவது கொள்க. செய்யஎன்றசொல் - இரண்டாமடியில்செய்என் னும்பெயரின்மேற் பிறந்த குறிப்புப்பெயரெச்சமும்; மூன்றாம் அடியில், செய் என்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த குறிப்புப்பெயரெச்சமும்; மூன்றாம் அடியில், செய் என்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த தெரிநிலை வினையச்சமும் நான்காமடியில், செவ்வியையுணர்த்தும் செம்மையென்னும் பண்பின்மேற் பிறந்த குறிப்புப் பெயரெச்சமுமாம்; வயலை 'செய்' என்பது பன்றிநகாட்டுத் திசைச்சொல். வளை - வளைந்துள்ளது; உட்சுழிந்துள்ளது. 'செய்யவளைக்குலஞ்சூழரங்கம்' என்பது, நீர்வளமிகுதியை உணர்த்தும். அரங்கேசன் - குணசந்திபெற்ற வடமொழித்தொடர். பெரியோர் உண்ணுதல், அமுதுசெய்தலெனப்படும்: உபசாரச்சொல். வெண்ணெயுண்ண வாய்திறந்தது, கிருஷ்ணாவதாரத்திலே திருவாய்ப்பாடியில்வளர்ந்த குழந்தைப்பருவத்திலென்க. புவி என்ற சிறப்புப்பெயர், பொதுப்பொருளின் மேலதாய் உலக மென்றவாறாம். அதனை யுண்ண வாய்திறந்தது, பிரளயகாலத்திலென்க. பிரமன்முதலான சகலதேவர்களுமுட்பட யாவும்அழிந்துபோகிற யுகாந்தகாலத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன்வயிற்றில் வைத்து அடக்கிக்கொண்டு பிரளயப் பெருங்கடலில் ஆதிசேஷாம்சமானதோ ராலிலையின்மீது யோகநித்திரை செய்தருள்கின்றன னென்பது, நூற்கொள்கை. அங்காந்த, அங்கா - பகுதி. முகுந்தன் - (தன் அடியார்க்கு), மு - முத்தியின்பத்தையும், கு - நிலவுலக |