பாடலென்னுந் தொழிற்பெயர் - அதனைப்பொருந்திய கவிக்காதலால், தொழிலாகுபெயர். விமலனென்பதற்கு - குற்றமற்றவனென்று பொருள்; இது, பிறந்தபொழுது பரிசித்தமாத்திரத்தில் அஞ்ஞானமயமாக்குகிற ஸடமென்னும் வாயுவைத் தம்மீது படவொட்டாமற் கோபித்துப் போக்கி யருளியவ ரென்னும் பொருளதாகிய ஸடகோபனென்னுந் திருநாமத்தின் பொருளை உட்கொண்டது. நம்மாழ்வாரை முதலிற் கூறியது, அவயவியாய்த் திருத்துழாய் அங்குரிக்கும்போதே பரிமளத்தோடு தோற்றுதல்போல ஞானத்துடனேயே திருவவதரித்து மற்றையாழ்வார்களினும் மேம்படுதலா லென்க. செய்யுளாதலின் முறைபிறழ வைத்தாரேனும், பாடக்ரமாபேக்ஷ யா அர்த்தக்ரமஸ்ய பலீயஸ்தவம் (சொல்நிற்கும் முறையைவிடப் பொருள் நிற்கும்நிலையே வலியுடைத்து) என்ற முறைமைபற்றி, மயிலையர்கோன் என்ற சொற்குப்பின் "மாமழிசைக்குமன்" என்பதனைக் கூட்டுக. பொய்கை - குளம்; பொய்கையில் திருவவதரித்தவரைப் பொய்கையென்றது, இடவாகுபெயர்: இனி, உவமவாகுபெயராய், ஊர்நடுவேயுள்ள ஊருணிபோல எல்லார்க்கும் எளிதிற் பயன்கொடுப்பவ ரென்றுமாம். பூதன் - "கடல்வண்ணன் பூதம்," "மறுத்திருமார்பனவன்றன்பூதம்" என்றவாறு எம்பெருமானை யறிதலாலே தமது உளனாகையை யுடையவர். மயிலையர்கோன் - திருமயிலையிலுள்ளார்க்குத் தலைவர், கோன், னகரமெய் - சாரியை. புகழாவது - இம்மைப்பயனாகி இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்குங் கீர்த்தி. சேரன் - சேரகுலத்தில் திருவவதரித்தவர். புத்தூரன் - வில்லிபுத்தூரில் திருவவதரித்தவர். தொண்டர்பாதந்தருந்துகள் - ஸ்ரீபாததூளியாயிருப்பவர்; உள்ளும் புறமும் ஒத்துத் தொண்டுசெய்யும் மெய்யடியாரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவடித்தூளிபோல அவர்கட்குக் கீழ்ப்படிந்து அடிமைபூண்டு ஒழுகுபவராதலால், இவர்க்கு இத்திருநாமம். மாமழிசைக்குமன் - மஹீஸாரக்ஷேத்ரமென்கிற பெருமையையுடைய திருமழிசைக்குத் தலைவர்; "இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கிறைவன்" என்றார். அமுதனாரும். பாணன் - வீணாபாணியாய்ப் பெரியபெருமாள் திருவடிக்கீழே நிரந்தரசேவைபண்ணிக்கொண்டு பாட்டுப்பாடிப் புகழ்பவர்; பாண் - இசைப்பாட்டு; அதனையுடையவன், பாணன்: "பாட்டினாற்கண்டுவாழும் பாணர்" என்பர். மங்கைநாதன் - திருமங்கையென்னுந் திருப்பதிக்குத் தலைவர். மதுரகவி - இனிமையான பாடலைப் பாடுபவர். கோதை - மாலை; எம்பெருமானுக்கு மாலைபோல நிரதிசயபோக்கியையாயிருப்பவள்; அன்றிக்கே, பாமாலையையும் பூமாலையையுஞ் சூடிக்கொடுத்தவள். நண்ணுதல் - இடைவிடாது நினைத்தல்; "மலர்மிசை யேகினான்மாணடி சேர்ந்தார்" என்பதில் "சேர்தல்ழுபோல. நண்ணுதும் - தன்மைப்பன்மைமுற்று; ஈண்டு ஒருவரைக்கூறும் பன்மை; தும்மீறு எதிர்காலமுணர்த்திற்று. யாமென்னும் பயனிலைகுறைந்துநின்றது; இனி, யாமென்பது தோன்றா எழுவாயெனக் கொண்டு நண்ணுதுமென்னும் வினைப்பயனிலை கொண்டதெனினும் அமையும். இது கடவுள்வணக்க மாதலால் "நான்முகற்றொழுது நன்கியம்புவன்", "பந்த மடி தொடை பாவினங் கூறுவன்" என்றாற்போல |