வானதனாலும், மேருமலையினிடமிருந்து ஆதிசேஷனுடனே வாயுவினால் இம்மலை கொணரப்பட்டதனாலும், இதற்கு "சேஷகிரி" என்று பெயர் வாய்த்தது. (8) | 9. | துய்யசெம்பொற் கோயிற் சுடரெறிப்பக் கண்முகிழ்த்து | | வெய்யவன்றேர் மாவிடறும் வேங்கடமே - யையிருநூ | | றானமுகப் பாம்பணையா ரானிரைப்பி னூதிவருங் | | கானமுகப் பாம்பணையார் காப்பு. | (இ - ள்.) துய்ய - சுத்தமான (மாசற்ற), செம் பொன் - சிவந்தபொன் மயமான, கோயில் - திருக்கோயிலினது, சுடர் - காந்தி, எறிப்ப - வீசுதலால், வெய்யவன் தேர் மா - சூரியனுடைய தேரிற் கட்டிய குதிரைகள், கண் முகிழ்த்து - கண்கள் மூடப்பெற்று, இடறும் - (அதனால்) கால் இடறுதற்குக் காரணமாகின்ற, வேங்கடமே - , - ஐ இரு நூறு ஆன முகம் பாம்பு அணையார் - ஆயிரந்தலைகளையுடைய ஆதிசேஷனைத் திருப்பள்ளி மெத்தையாகவுடையவரும், ஆன் நிரை பின் ஊதி வரும் - பசுக்கூட்டத்தின் பின்னே ஊதிக்கொண்டுவருகின்ற, கானம் - சங்கீதம், உகப்பு ஆம் - (எல்லாப் பிராணிகட்கும்) ஆநந்தகரமாம்படியான, பணையார் - வேய்ங் குழலையுடையவருமாகிய திருமால், காப்பு - (உயிர்களைப்) பாதுகாத்தருளும் இடம்; (எ - று.) முன்னிரண்டடி - அதிசயோக்தி. திருவேங்கடமலையிலுள்ள பொன் மயமான திருக்கோயிலின் ஒளி மிகுதியாக வீசுதலால் சூரியன் தேர்க்குதிரைகள் கண்கூச்சமடைந்து கண்விழிக்கமாட்டாமல் கண்மூடிக்கொண்டு அம் மலையின் உயர்வினால் அதிற்காலிடறுமென வருணித்தது, பொற்கோயிலின் சிறப்பையும் மலையின் உயர்வையும் விளக்கியவாறாம். துய்ய - தூய் என்னும் பண்பினடி முதல்குறுகிற்று. ஐயிருநூறு - பண்புத்தொகைப் பன்மொழித் தொடர். பலவிடங்களிற் பரவிமேய்கிற பசுக்கூட்டங்களை ஒருங்குசேர்த்தற் பொருட்டும், அவற்றை மகிழ்வித்தற்பொருட்டும் கண்ணன் வேணுகரநஞ் செய்தபொழுது அவ்வின்னிசையைச் செவியுற்று அனைத்துயிர்களும் அளவற்ற ஆனந்தத்தை யடைந்தமை, பிரசித்தம். கோயில் - கோ + இல்; கடவுளின் இடம்: வகரம்பெறாது யகரம்பெற்றது, இலக்கணப்போலி. பணை - மூங்கிலின் பெயர், குழலுக்குக் கருவியாகுபெயராய் நின்றது. காநம் - வடசொல். (9) | 10. | மாண்டுபிறக் குந்துயர்போய் வைகுந்தம் புக்கவரு | | மீண்டுதொழக் காதலிக்கும் வேங்கடமே - பாண்டுமக | | னேறிரதப் பாகனா ரேத்துமடி யார்நாவி | | லூறிரதப் பாகனா ரூர். | (இ - ள்.) மாண்டு - இறந்து, பிறக்கும் துயர் போய் - (மறுபடி இவ்வுலகிற்) பிறப்பெடுத்தலா லாகிற துன்பம் நீங்கி, வைகுந்தம் புக்கவரும் - ஸ்ரீவை |