பக்கம் எண் :

408திருவேங்கடமாலை

குண்டலோகத்தை யடைந்தவர்களும், மீண்டு தொழ காதலிக்கும் - (அங்கு நின்று) மீண்டுவந்து வணங்க ஆசைப்படும்படியான, வேங்கடமே - , - பாண்டுமகன் ஏறு இரதம்பாகனார் - பாண்டுவினது குமாரனான அருச்சுனன் ஏறிய தேரைச் செலுத்தும் சாரதியானவரும், ஏத்தும் அடியார் நாவில் - (தம் மைத்) துதிசெய்கின்ற அடியார்களுடைய நாக்கிலே, ஊறு - மேன்மேற்சுரக் கின்ற, இரதம் பாகு அனார் - சுவையுள்ள சர்க்கரைப்பாகு போன்றவரும் ஆகிய திருமாலினது, ஊர் -; (எ - று.)

ஒருபிறப்பின் முடிவிலே கருமமனைத்தும் தொலைந்து முத்திபெற்றவர்க்கு மீண்டும் பிறத்தல் இல்லை யென்றும், முத்திபெற்றவர் மீண்டு இவ்வுலகில்வரு தல்இல்லையென்றும் அறிக. அங்ஙனம் இவ்வுலகினின்று பிறப்புத்துயரமொ ழிந்து மீளாவுலகமாகிய பரமபதத்தை யடைந்தவரும் திருவேங்கடத்தின் சிறப்பையும் திருவேங்கடமுடையான் பேரானந்தந்தருந் தன்மையையும் கருதி அங்குநின்று மீண்டு இங்குவந்து தொழவிரும்புவரென வேங்கடத்தின் மகிமையை விளக்கியவாறாம். வைகுந்தம் - வடமொழித்திரிபு. பாண்டு மகன் - பாண்டவன்; பொதுப்பெயர் இங்குச் சிறப்புப்பொருளின் மேல்நின்றது. மகாபாரதயுத்தத்திற் கண்ணன் திருவருளால் அருச்சுனனுக்குத் தேரூர்ந்து அதனால் பார்த்தசாரதியென்று ஒருதிருநாமம்பெற்றமை, பிரசித்தம். இரதம் என்பது - தேர்என்ற பொருளில் ரத மென்ற வடசொல்லின் விகாரமும், இனிமை என்ற பொருளில் ரஸமென்ற வடசொல்லின் விகாரமுமாம். அடியார்கள் நாப்படைத்தபயன்பெற அதுகொண்டு துதிக்கத் துதிக்க எம்பெருமான் ஆராதவமுமாய் மேன்மேல் இனியனாகிச்சுவைமயமா யுள்ளவ னென்பது, "ஏத்துமடியார்நாவிலூறு இரதப்பாகுஅனார்" என்பதன் கருத்து; "அமுதம்பொதி யின்சுவைக் கரும்பினைக் கனியை" என்றார் திரு மங்கையாழ்வாரும்.

(10)

11.கோலியொரு நான்கு குலமறையு நாற்றிசையும்
வேலியென நின்றேத்தும் வேங்கடமே - வாலிதனை
நண்பாவை யாதரித்தான் ஞானமுத லாழ்வார்கள்
வெண்பாவை யாதரித்தான் வெற்பு.

(இ - ள்.) ஒரு நான்கு குலம் மறையும் - ஒப்பற்ற சிறப்புள்ள நான்கு வேதங்களும், நால் திசையும் - நான்கு பக்கங்களிலும், வேலி என கோலி நின்று - வேலிபோலச் சூழ்ந்து, ஏத்தும் - துதிக்கப்பெற்ற, வேங்கடம் - , - வாலிதனை நண்பு ஆ வையாது அரித்தான் - வாலியை நண்பனாகக் கொள்ளாமல் (பகையாகக் கொண்டு) கொன்றிட்டவனும், ஞானம் முதலாழ்வார்கள் வெண்பாவை ஆதரித்தான் - தத்துவஞானத்தையுடைய முதலாழ்வார்கள் மூவரும் இயற்றிய வெண்பாவினாலாகிய பிரபந்தங்களை அன்போடு ஏற்றுக் கொண்டவனுமான திருமாலினுடைய, வெற்பு - மலை; (எ - று.)

வேங்கடம் வேதப்பிரதிபாத்தியமாய் மகிமைபெறுந் தன்மை, முன்னிர ண்டடியில் விளக்கப்பட்டது. நாற்றிசையும் என்பதற்கு - நான்குதிக்கிலுள்