பொன் மலையும் வெள்ளி மலையும் பணியும் - பொன்மலையான மகாமேருவும் வெள்ளிமலையான கைலாசமும் வணங்கப்பெற்ற, வேங்கடமே - , - புள்ளின் கொடி வாகனத்தான் - பக்ஷிராசனாகிய கருடனது வடிவமெழுதிய கொடியையும் அக்கருடனாகிய வாகனத்தையு முடையவனும், குளிர்ந்து இருண்டகாரின் வடிவு ஆகன் - குளிர்ச்சியுள்ளதாய்க் கறுத்துள்ள மேகத்தினது வடிவம் போன்ற திருமேனியையுடையவனும், நத்தான் - (பாஞ்சசந்நிய மென்னுஞ்) சங்கத்தையையுடையவனுமாகிய திருமாலினது, வரை - மலை; (எ - று.) கர்மபந்தத்தொடர்ச்சியின்றி ஞானாநந்தங்களையேதருந்தன்மையதான முத்தியுலகைத் தன்னையடைந்தார்க்குத் தந்தருளும் மகிமை திருவேங்கட மலைக்கு இருத்தலை அதன் புகழினாற்செவியுற்று அறிந்து, அத்தன்மையில்லா தனவான பொன்மலையும் வெள்ளிமலையும் தமதுதாழ்வையும் அம்மலையின் உயர்வையும்நோக்கி அதற்குத்தாம் கீழ்ப்படிந்து அதனைவணங்கிக் கிடக்குமென்க. பொன்மலைக்கும் வெள்ளிமலைக்கும் "நாம் பொன்மயமாகவும் வெள்ளி மயமாகவும் இருக்கிறோம்" என்ற இறுமாப்பு ஒழிதற்குக் காரணமாயிற்று, வேங்கடத்தின் வீடளிக்குந்திற மென்க. வீடு - (பற்றுக்களை) விட்டு அடையுமிடம்; முக்தி. புள் - இங்குப் பொதுப்பெயர் சிறப்புப் பொருளின் மேலது. காண்பவர் கண்களுக்குக் காணுமளவிலே குளிர்ச்சியைத் தந்து அவர்களுடைய எல்லாச் சிரமங்களையும் பரிகரிக்குந் திருமேனியின் தோற்றமுடையா னென்பார், "குளிர்ந்திருண்ட காரின்வடிவாகன்" என்றார். ஆகம் - மேனி; அதனையுடையவன் - ஆகன். (12) | 13. | எப்பூ தலமு மிறைஞ்சித் திசைநோக்கி | | மெய்ப்பூ சனைபுரியும் வேங்கடமே - கொப்பூ | | ழிலகுமுண்ட கந்தரத்தா னீன்றளிக்கு மீரே | | "லகுமுண்ட கந்தரத்தா னூர். | (இ - ள்.) எ பூதலமும் - நிலவுலகத்தில் எவ்விடத்திலுள்ளவரும், திசை நோக்கி - திக்குநோக்கி, இறைஞ்சி - வணங்கி, மெய் பூசனை புரியும் - உண்மையான பூசையைச் செய்யப்பெற்ற, வேங்கடமே - , - கொப்பூழ் - திருநாபியில், இலகும் - தோன்றி விளங்கிய, முண்டகம் - தாமரை மலர், தர - அளிக்க, தான் ஈன்று - தான்பெற்று, அளிக்கும் - பாதுகாக்கிற, ஈரேழ் உலகும் - பதினான்குலோகங்களையும், உண்ட - அமுதுசெய்த, கந்தரத்தான் - கண்டத்தையுடைய திருமாலினது, ஊர் -; (எ - று.) உலகத்தில் எத்திசையிலுள்ளாரும் திருவேங்கடத்தின் மகிமையைக் கருதி அத்திருப்பதியிருக்கின்ற திசையை நோக்கி வணங்கி வழிபடுவரென அத்தலத்தின் சிறப்பை விளக்கியவாறு. பூதலம் - இடவாகுபெயர். "பந்திக் கமலத் தடஞ்சூ ழரங்கர் படைப்பழிப்புச், சிந்தித்திடுவது மில்லைகண்டீ ரத் திசைமுகனோடு, உந்திக் கமலம் விரிந்தால் விரியு முகக்கடையில், முந்திக் குவியி லுடனே குவியு மிம்மூதண்டமே" என்பது சித்தாந்த மாதலால், "கொப்பூழிலகு முண்டகந் தரத் தானீன்று" என்றார். பிரமன் முதலான |