பக்கம் எண் :

திருவேங்கடமாலை439

நாலு மறை - நான்கு வேதங்களாலும், ஆய்ந்த - ஆராய்ந்து கூறப்பட்ட, பர தத்துவம் - (எல்லாவற்றுக்கும்) மேலான உண்மைப்பொருள், தான் ஆனான் -தானேயானவனும், குடம் ஆடல் வாய்ந்த பரதத்து - குடமெடுத்து ஆடுதல் பொருந்தின கூத்தைச் செய்வதிலே, உவந்தான் - திருவுள்ள முகந்தவனுமாகிய திருமால், வாழ்வு - வாழுமிடம்; (எ - று.) - மணி - செம்மணி.

சுமேருபர்வதத்தில் கேசரியென்ற வாநர வீரனது மனையாளான அஞ்சனாதேவி வாயுதேவனது அநுக்கிரகத்தால் ஒருகுமாரனைப்பெற்றுக் கனிகள் கொணர்தற்குக் காட்டிற்குச் செல்ல, அக்குமாரன் பசிபொறுக்கமாட் டாமல் காலையிலுதித்த ஆதித்த பிம்பத்தைக் கனியெனக்கருதித் கவர்வான் எழுந்து, தந்தையாகியவாயுவினது உதவிகொண்டு அச்சூரியமண்டலத்தின் மீது பாய்ந்தனனென்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது. "செழுமலர்த்திரு வனையதாய் செழுங்கனிநாடிப், பழுவமுற்றிடப் பசியினாற்பதைபதைத் திரங்கி, யழுதாற்றிய பாலக னன்னை முன்னுரைத்த, பழம் நமக்கிதுவாமென ப்பரிதிமேற் பாய்ந்தான்" என்றார் ஒட்டக்கூத்தரும். அப்பொழுது சூரியனைப் பிடிக்கவந்த இராகு இவ்வாநரனைக் கண்டு அஞ்சியோடி இந்திரனிடம் முறையிட, இந்திரன் சினங்கொண்டு வந்து வச்சிராயுதத்தால் மெல்லப்புடைக்க, அக்குரங்கு கன்னத்தில் அடிபட்டுக் கன்னம் சிதையப் பெற்றதனால், அதற்கு, பிறகு "ஹநுமாந்" என்ற பெயர் இந்திரனால் வைக்கப்பட்டது. ஹநுமாந் என்ற வடசொல் - கன்னத்தில் விசேஷமுடையவ னென்று பொருள்படும்; ஹநு - கன்னம், மாந் - உடைமைப்பொருள் காட்டும் வட மொழிப்பெயர்விகுதி. அப்பெயர், அனுமன் என விகாரப்பட்டது. செந்நிறமாக விளங்கும் சூரியமண்டலத்தின்மீது பாய்ந்த அநுமானென்னும் தெய்வக்குரங்கை, செந்நிறமான மாணிக்கப் பாறையின்மேற் பாயும் குரங்குகட்கு உவமை கூறினார்.

நாலு - நான்கு ஈறுகெட்டு னகரம் லகரமாய் உகரச்சாரியைப் பெற்றது. பரதத்வம் - பரம்பொருள். குடமாடல் வாய்ந்த பாரதம் - குடக்கூத்து; அதாவது - இடையர்கள் செல்வச்செருக்கினால் தமது மகிழ்ச்சிக்குப் போக்குவீடாகக் குடங்களையெடுத்து மேலேயெறிந்து மீண்டும்ஏந்தி ஆடுவதொரு கூத்து. பஞ்சலோகங்களாலும் மண்ணாலுங்குடங் கொண்டு ஆடுவதென்பர். கண்ணபிரானுக்கு அக்கூத்தில் மிகவும்பிரியமாதலை "குடங்களெடுத் தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே" என்ற பெரியாழ்வார் திருமொழியினாலும் உணர்க. இப்பாசுரத்தின் வியாக்கியாநத்தில் "பிராமணர் ஐசுவரியம் விஞ்சினால் யாகாதிகள் பண்ணுமாபோலே இடையர் ஐசுவரியம் விஞ்சினால் செருக்குக்குப் போக்குவிட்டு ஆடுவதொரு கூத்தாய்த்து, குடக்கூத்தாவது," "இடையர்க்கு ஐசுவரியந்தானாவது - கோஸம்ருத்தியிறே: அந்த ஸம்ருத்தி குறைவறவுள்ளது தனக்கே யாகையாலே, அத்தால் வந்த செருக்குக்குப் போக்குவிட்டுக் குடக்கூத்தாடினபடி சொல்லுகிறது; தலையிலே அடுக்குக் குடமிருக்க, இரண்டுதோள்களிலும் குடங்களிருக்க, இரண்டுகைகயிலும் குடங்களையேந்தி ஆகாசத்திலேயெறிந்து ஆடுவதொரு கூத்தாய்த்து, குடக்