பக்கம் எண் :

திருவேங்கடமாலை451

(இ - ள்.) முந்நூல் - முப்புரிநூலைத் தரித்த, மறையவர் - பிராமணர் களுடைய, நா - நாவானது, மெய் நூல் நலம்கவரும் - (பொருள்களின்) உண்மையைச் சொல்லுகிற தத்துவசாஸ்திரங்களின் நற்பொருள்களை (ஓதி)க்கிர கித்தற்கு இடமான: மூது அரம்பைமாரின் நடு - பழமையான தேவமாதர்களினுடைய இடையானது, மெய் நூல் நலங்க வரும் - (தனதுவடிவத்தின் நுண்மையால்) பஞ்சுநூல் (தனக்கு ஒப்பாகமாட்டாது) கெடும்படி பொருந்திய: வேங்கடமே -,- பொய் நூலால் - பொய்ம்மையைக்கூறுகிற சாஸ்திரங்களைக் கொண்டு, அ சமயம் கத்தினார் - அந்தந்த மதக்கோட்பாடுகளைப் பிதற்றுந் தன்மையுள்ளவர்கள், ஆதரிக்க - விரும்பிக்கொண்டாடும்படி, தெய்வங்கள் வச்ச - பலதெய்வங்களை உண்டாக்கிவைத்த, மயக்கத்தினார் - மாயையை யுடையவரான திருமால், வாழ்வு - வாழுமிடம்; (எ - று.)

வடமும், வடத்தினுள் புரியும், புரியினுள் இழையும் மும்மூன்றா யிருத் தல்பற்றி, உபவீதத்துக்கு "முந்நூல்" என்று பெயர். "நூலே கரக முக்கோல் மணையே, ஆயுங்காலை யந்தணர்க் குரிய" என்ற தொல்காப்பியவிதிபற்றி, முந்நூல் மறையவர்க்கு அடைமொழியாக்கப்பட்டது. வேதங்களை ஓதுதலோடு ஓதுவித்தற்கும் உரியவர் அந்தணரேயாதலால், அவர் "மறையவர்" எனப்பட்டனர். சிலசாதியார்க்கும் பெண்பாலார்க்கும் ஓதுவிக்கவும் ஓதவும் கேட்கவும் ஆகாதென்று மறுக்கப்படுதல் பற்றியும், ஓதியுணர்ந்த குருவினிடம் உபதேசங்கேட்டாலன்றித் தெரிதற்குஅரிய மறைந்தபொருளையுடைமைபற்றியும், "மறை" என்று பெயர் மூதரம்பைமார் - முதுமையென்னும் பண்புப்பெயர் ஈறுபோய் ஆதிநீண்டது. அரம்பை - ரம்பா என்னும் வடசொல்லின் விகாரம். அரம்பைமார் - ரம்பை முதலியோர்; மார் - பலர்பாற்பெயர்விகுதி. தமக்கு உரிய தேவலோகத்தினும் திருவேங்கடம் வசித்தற்கு இனியதால் பற்றியும், அம்மலை உயர்ச்சியால் தங்களுலகத்துக்கு அருகிலாதல்பற்றியும், திருவேங்கடமுடையானைச் சேவித்தற்பொருட்டும், தேவமாதர்கள் அங்கு வந்து தங்குதலால், அவர்கள் அம்மலைக்கு உரியபொருளாகச் சொல்லப்பட்டனர். அவர்களிடை நூலினும் நுண்ணிதென்பது கருத்து. நடு - இடையுறுப்பு.

கத்தினார் - கத்து என்னும் முதனிலைத் தொழிற்பெயரின்மேற் பிறந்த பலர்பாற்குறிப்பு வினையாலணையும்பெயர்; இன் - சாரியை. ஸமயம், தைவம் - வடசொற்கள். வச்ச - வைத்த என்பதன் முழுப்போலி. மயக்கம் - பிறரை மயங்கச்செய்வது; அம் - கருத்தாப்பொருள்விகுதி. "வணங்குந் துறைகள் பலபல வாக்கி மதிவிகற்பாற், பிணங்குஞ் சமயம் பலபலவாக்கி யவையவை தோறு, அணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பிவைத்தாய்" என்று ஆழ்வார் அருளிச்செய்தபடி, எம்பெருமான் ரஜோகுணதமோகுணங்களால் மிக்கவர் கருமகதியால் தன்பக்கல் வாராது வெவ்வேறு துணிவுகொள்ளும் படி தனது அமிசத்தாற் பலபலதெய்வங்களையும், பலபல மதக்கோட்பாடுகளையும், பல உபாசனை விதங்களையும் அமைத்து வைத்த விசித்திரசக்தியை வெளியிட்டார். சிவபிரான் ஜிநன் புத்தன் முதலியோர் திருமாலின துரூப பேதமாதலையும், அவரவரைத்தலைமையாகக்கொள்ளும் மதங்கள் ஒவ்வொரு சமயத்தில் அத்திருமாலினாலேயே வெளியிடப்பட்டனவாதலையும் அறிக.