கேட்டு அவன் பெருங்கோபங்கொண்டு, மிகப்பெரியசேனையோடும் அறுபது லட்சம் படைவீரர்களோடும் சேனைத்தலைவர் பதினால்வரோடும் தூஷணன் திரிசிரஸ் என்னும் முக்கிய சேனாதிபதிகளோடும் புறப்பட்டு வந்து போர் தொடங்குகையில், இராமன் லக்ஷ்மணனைச் சீதைக்குக் காவலாகப் பர்ண சாலையில் நிறுத்தித் தான் தனியேசென்று எதிர்த்துப் பெரும்போர் செய்து அவ்வரக்கரையெல்லாம் துணித்து வெற்றிகொண்டு மீண்டு பர்ணசாலையிற் காவல்செய்துநின்ற இலக்குமணனைச் சார்ந்தனனென்ற வரலாறு, இங்கே குறிக்கப்பட்டது. இறக்க என்ற பொருளில் "துஞ்ச" என்றல் - மங்கலவழக்கு; மீளவும் எழுந்திராத பெருந்தூக்கங் கொள்ள வென்க. இராமன் வனவாசஞ்செய்த பதினான்கு வருடத்திலும் இலக்குமணன் தூங்காது அல்லும் பகலும் அநவரதமும் இராமனுக்கும் சீதைக்கும் பாதுகாவலாய் விழித்தபடியேயிருந்தன னாதலால், அவனுக்கு "துஞ்சார்" என ஒருபெயர் கூறினார். அணனார் = அண்ணனார்: தொகுத்தல். துஞ்சார் - இளையபெருமாள். அண்ணனார் - பெருமாள். திருப்பாற்கடலிலும் பிரளயப் பெருங்கடலிலும் திருமால் பள்ளிகொள்ளுதல்பற்றி, "அலையார்" என்றார். அலை - கடலுக்குச் சினையாகு பெயர். முத்து - முக்தா என்ற வடசொல்லின் விகாரம்; (சிப்பியினின்று) விடுபட்ட தெனப் பொருள்படும். (64) | 65. | கோங்கைக்கோ டேறிக் குலுக்குமரி யுங்கரியும் | | வேங்கைக்கோ டாதரிக்கும் வேங்கடமே - பூங்கைக்குண் | | மெய்த்தவளச் சங்கெடுத்தார் மேகலைவிட் டங்கைதலை | | வைத்தவளச் சங்கெடுத்தார் வாழ்வு. | (இ - ள்.) கோங்கை - கோங்குமரத்தை, கோடு ஏறி குலுக்கும் - கிளைகளின் மேலேறி மிகஅசைக்கின்ற, அரியும் - குரங்கும், வேங்கை கோடு ஆதரிக்கும் - (அங்கிருந்து அருகிலுள்ள) வேங்கைமரத்தின்கிளையை விரும்பித் தாவிப் பிடிக்கப்பெற்ற: கரியும் - யானைகளும், வேங்கைக்கு ஓடாது அரிக்கும் - புலிகளுக்கு அஞ்சியோடாமல் (எதிர்த்துநின்றுபொருது அவற்றை) அழிக்கப்பெற்ற: வேங்கடமே -,- பூ கைக்குள் - அழகிய திருக்கையினிடத்து, மெய் தவளம் சங்கு எடுத்தார் - உருவம் வெண்மையான சங்கத்தை ஏந்தியவரும், மேகலை விட்டு அம் கை தலை வைத்தவள் அச்சம் கெடுத்தார் - தனது ஆடையைப் பற்றுதலை விட்டு அழகியகைகளைத் தன்தலைமேல் வைத்துக் கூப்பி வணங்கினவளான திரௌபதியினது பயத்தைப் போக்கியவருமான திருமால், வாழ்வு - வாழுமிடம்; (எ - று.) மரக்கிளைகளிலேறிக் குலுக்குதலும், ஒருமரத்திலிருந்து மற்றொருமரத் தை விரும்பித்தாவுதலும், குரங்கினியல்பு. கோங்கைக்குலுக்குமென இயையும். ஹரி, கரீ என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. ஹரி - (பிறர்கைப் பொருளைக்) கவர்வதெனக் காரணப்பொருள்படும். கரம் - கை; இங்கே, துதிக்கை; அதனையுடையது கரீ எனக் காண்க. கரி என்பதற்கு - கருமை |