"சித்திரகூடத்திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட, அத்திரமே கொண் டெறிய வனைத்துலகுந் திரிந்தோடி, வித்தகனே யிராமாவோ நின்னபய மென்றழைப்ப, அத்திரமே யதன் கண்ணை யறுத்தது மோரடையாளம்" என்ற பெரியாழ்வார் திருமொழி - நான்காமடிக்கு மேற்கோள். (67) | 68. | கண்டடைந்த வானவருங் காந்தட் குலமலரும் | | விண்டவிர்ந்து நிற்கின்ற வேங்கடமே - தொண்டருக்கு | | வைகுந்த நாட்டான் மருவுருவ மீந்துவைக்கும் | | வைகுந்த நாட்டான் வரை. | (இ - ள்.) கண்டு - (அத்திருமலையின் அழகைக்) கண்டு, அடைந்த - (அதனிடத்தில்) வந்துசேர்ந்த, வானவரும் - தேவர்களும், விண் தவிர்ந்து நிற்கின்ற - (மிகவும் இனிமையான அவ்விடத்தை விட்டுச்செல்ல மனமில்லாமையால்) தேவலோகத்தை நீங்கி நிற்றற்குக் காரணமான குலம் காந்தள்மலரும் - சிறந்தசாதிக் காந்தட்செடிகளின் மலர்களும், விண்டு அவிர்ந்து நிற்கின்ற - இதழ்விரிந்து மலர்ந்து விளங்கி நிற்றற்கு இடமான: வேங்கடமே -,- தொண்டருக்கு - தன் அடியார்களுக்கு, வை குந்தம் நாட்டான் - கூரியசூலா யுதத்தை (யமன்) நாட்டாதபடி (அருள்) செய்பவனும், மருவு உருவம் ஈந்து - பொருந்திய தனது உருவத்தை (அவ்வடியார்கட்கு)க் கொடுத்து, வைக்கும் வைகுந்தம் நாட்டான் - (அவர்களை) ஸ்ரீவைகுண்டமென்னுந் தனது தேசத்தில் நிலையாகவைப்பவனுமான திருமாலினது, வரை - திருமலை; (எ - று.) "கண்டுஅடைந்த வானவரும் விண்தவிர்ந்து நிற்கின்ற" என்றதனால், புண்ணிய லோகமாய்ச் சுகானுபவத்துக்கேயுரிய தேவலோகத்தினும் திரு வேங்கடம் மிக இனிய வாசஸ்தாநமாகு மென்பதனோடு தேவர்கட்குப் புகலிட மாகுமது வென்பதும் விளங்கும். காந்தள்மலரைக் கூறினது, மற்றைக் குறிஞ்சி நிலத்து மலர்களுக்கெல்லாம் உபலக்ஷணம். குலம் - கூட்டமுமாம். விண்டு - வாய்விண்டு; விள் - பகுதி. தன்அடியார்செய்த தீயகருமங்களையெல்லாம் தீர்த்தருளுதலால் அவர்கட்கு யமதண்டளை யில்லாதபடி செய்பவனென்பது, "தொண்டருக்கு வை குந்தநாட்டான்" என்பதன் கருத்து. யமனுக்கும் அந்தராத்மாவாய் நின்று தொழில் செய்பவன் திருமாலேயாதலால், அவனதுதொழிலைத் திருமாலின் மேலேற்றிக் கூறினார். "வையே கூர்மை" என்ற தொல்காப்பியஉரியியற் சூத்திரத்தால், வை என்பது - கூர்மை யுணர்த்துகையில், உரிச்சொல்லென அறிக. குந்தம் - வடசொல்: வேல், ஈட்டி, சூலம். நாட்டான் - நாட்டு என்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த எதிர்மறைத் தெரிநிலைவினையாலணையும் பெயர். எம்பெருமான் தனதுவடிவம்போன்ற வடிவத்தைத் தன் அடியார்கட்குக் கொடுத்தலாகிய ஸாரூப்யநிலை "மருவுருவமீந்து" என்றதனாலும், தான்வசிக்கிற உலகத்தைத் தன்அடியார்கட்கு வாசஸ்தானமாகத் தருதலாகிய ஸாலோகநிலை "வைக்கும் வைகுந்தநாட்டான்" என்றதனாலும் கூறப் |