| 70. | தாட்கமலப் பூஞ்சுனைக்குஞ் சாயகங்கள் கொய்துதிரி | | வேட்கும் வடிவில்லா வேங்கடமே - வாட்கலிய | | னாவியப்பாம் பாட்டினார் நச்சுமடு வைக்கலக்கித் | | தாவியப்பாம் பாட்டினார் சார்பு. | (இ - ள்.) தாள் - நாளத்தோடு கூடிய, கமலம் - தாமரையையுடைய, பூ - அழகிய, சுனைக்கும் - சுனைகளுக்கும், வடிவு இல்லா - நீர்குறைதல் இல்லாத: சாயகங்கள் கொய்து திரி வேட்கும் - (தனக்குஅம்புகளாகிற) மலர்களைப் பறித்துக்கொண்டு திரிகிற மன்மதனுக்கும், வடிவு இல்லா - உருவம் இல்லாத: வேங்கடமே -,- வாள் - வாட்படையை ஏந்திய, கலியன் - திரு மங்கையாழ்வாருடைய, நா - நாவினின்றுவருகிற, வியப்பு ஆம் பாட்டினார் - அதிசயிக்கத்தக்க பாடல்களையுடையவரும், தாவி - குதித்து, நஞ்சு மடுவை கலக்கி - விஷத்தையுடைய மடுவைக் கலங்கச்செய்து, அ பாம்பு ஆட்டினார் - அந்த(க் காளியனென்னும்) பாம்பை ஆட்டினவருமான திருமால், சார்பு - சார்ந்திருக்கு மிடம்; (எ - று.) சுனை - நீரூற்றுள்ள மலைக்குளம். அதற்கு வடிவுஇல்லையென வேங்கடத்தின் நீர்வளச்சிறப்பை உணர்த்தியவாறாம். வடிவு - வடிதல்; 'வு' விகுதி பெற்ற தொழிற்பெயர். சிவபிரானது நெற்றிக்கண்ணின் நெருப்புக்கு இரையாய் அங்கம் இழந்து அநங்கனான மன்மதன், தனக்கு அம்புகளாகின்ற தா மரைமலர் அசோகமலர் மாமலர் முல்லைமலர் நீலோற்பலமலர் என்பன அம்மலையிற் செழித்திருத்தலால் அவற்றைப் பறித்தெடுத்துக் கொள்ளுதற் பொருட்டு அங்குத் திரிகின்றன னென்பார் "சாயகங்கள்கொய்துதிரி வேட்கும் வடிவில்லா" என்றார். கொய்து என்ற வினையினால், "சாயகங்கள்" என்றது, மலர்களென விளங்கும். கமலம், ஸாயகம் - வடசொற்கள். திவ்யமான பாசுரங்களைத் திருமங்கையாழ்வார்பாடும்படி அருள்செய் தவர் திருமாலாதலாலும், திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வாரது பாடல் பெற்றவ ராதலாலும், "கலியன் நாவியப்பாம் பாட்டினார்" என்றார். சோழமண்டலத்தில் திருமங்கையென்னும் நாட்டில் சோழராசனுக்குச்சேனை த்தலைமைபூணும்பரம்பரையில் தோன்றி நீலனென்னும் இயற்பெயர் பெற்ற இவர், தம்குடிக்கு ஏற்ப இளமையிலேயே படைக்கலத் தேர்ச்சிபெற்று அவ் வரசனுக்குச் சேனாதிபதியாய் அமர்ந்து வலக்கையில் வாளையும் இடக்கையில் கேடகத்தையும் ஏந்திச்சென்று பகைவரோடு பொருதுவென்று பரகாலனெ ன்றுபெயர்பெற்ற பராக்கிரமம் தோன்ற, "வாட்கலியன்" என்றார். "மாயோ னைவாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்", "தென்னரங்கன்றன்னை வழிபறித்தவாளன்" என்றபடி இவர் எம்பெருமானை வழிபறித்தபோது கையிற்கொண்டவாளைக்காட்டி அச்சுறுத்தி அப்பெருமானிடம் மந்திரோப தேசம்பெற்றமை தோன்ற, "வாட்கலியன்" என்றாருமாம். சோழராசன்கட்டளைப்படி மங்கைநாட்டுக்கு அரசனாகிய இவர் குமுதவல்லியென்னும் கட்டழகியை மணஞ்செய்து கொள்ளுதற்பொருட்டு அவள்சொற்படி நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து வருகையில், பொருள் |