பக்கம் எண் :

468திருவேங்கடமாலை

கவசம் - இரும்பு முதலியவற்றாலாகின்ற உடம்பின்மேற் சட்டை; அது உடம்பைப் பாதுகாப்பது போலச் சத்தியம் உயிரைப் பாதுகாத்தலால், "மெய்க்கவசம்" எனப்பட்டது. முனிவர்கட்கு வாய்மையுடைமை இன்றி யமையாத ஒழுக்கமாதலால், "புக்க அருமாதவர் மெய்க்கவசம்பூண்டிருக்கும் வேங்கடம்" எனப்பட்டது. கவசம், மது, அவசம் - வடசொற்கள். மெய்க்கு என்பதில் நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது, உருபுமயக்கம். ந + வசம் = அவசம். வடமொழிச்சந்தி. புக்க அருமாதவர், மெய்க்கு அவசம் பூண்டு இருக்கும் - பரம்பொருளை அனுபவிக்கும் ஆனந்தமிகுதியால் தம் உடம்பு தம்வசமிழந்து பரவசமாகப்பெற்ற என்றும்; மலர்களில் மதுவை யுண்ட வண்டினம், மெய்க்கவசம் பூண்டு இருக்கும் - (அம்மலர்களின் தாதுக்கள் மேற்படிதலால்) உடம்புக்குக் கவசம்பூண்டிருக்கப்பெற்ற என்றும் உரைப்பாரும் உளர்.

"அன்பதினால்" என்பதில், "அது" என்பது - பகுதிப்பொருள் விகுதி; இன் - சாரியை. ஆண்டார் என்பது - மூன்றாமடியில் ஆள் என்னும் வினைப் பகுதியின்மேற் பிறந்த இறந்தகாலத்தெரிநிலை வினையாலணையும்பெயரும், நான்காமடியில் ஆண்டுஎன்னும் பெயரின்மேற் பிறந்த குறிப்புவினையாலணை யும்பெயருமாம். அரிவையென்பது - இங்குப் பருவப்பெயராகாமல் பெண்ணென்ற மாத்திரமாய் நின்றது; அப்பருவத்துக்கு வயதெல்லை - இருபது முதல் இருபத்தைந்தளவும். அரிவையொடும், உம் - இசைநிறை. "வன்பதினாலாண்டு" என்றது, கொடியவனத்தில் வசிக்குங் காலம் கழித்தற்கு அரிதாத லாலும், அவ்வனவாசகாலத்திற் பிரானுக்கும் பிராட்டிக்கும் பலஇடையூறுகள் நேர்ந்ததனாலு மென்க. இராமபிரான் தனது சிறியதாயான கைகேயிக்குத் தனது தந்தையாகிய தசரதன் கொடுத்திருந்த வரங்களை நிறைவேற்றுதற்பொருட்டு அக்கைகேயியின் மகனான பரதனுக்கு உரியதாம்படி இராச்சியத்தைக் கைவிட்டுச் சீதையுடனே சென்று பதினான்கு வருடகாலம் வனவாசஞ் செய்தமை பிரசித்தம். "அரிவையொடும் கானுறைந்த வன் பதினாலாண்டார்" என்றது, வடமொழிநடை; கொடிய கானில் அரிவையுடனே பதினாலாண்டு உறைந்தவ ரென்க.

(75)

76.தக்கமறை யோர்நாவுந் தண்சார லின்புடையு
மிக்க மனுவளையும் வேங்கடமே - யக்கரவம்
பூண்டார்க்கு மாறுடைத்தார் பொங்கோத நீரடைத்து
மீண்டார்க்கு மாறுடைத்தார் வெற்பு.

(இ - ள்.) தக்க மறையோர் நாவும் - தகுதியையுடைய அந்தணர்களின் நாக்கும், மிக்க மனு அளையும் - சிறந்த மந்திரம் (உச்சாரணத்தாற்) பொருந் தப்பெற்ற: தண் சாரலின் புடையும் - குளிர்ந்த அம்மலைச்சாரல்களின் பக்கங்களும், மிக்க மனு வளையும் - மிகுதியான மனிதர்கள் பிரதக்ஷிணஞ்செய் யப்பெற்ற: வேங்கடமே -,- அக்கு அரவம் பூண்டார்க்கு - எலும்புமாலையையும் சர்ப்பங்களையும் ஆபரணமாகத்தரித்த சிவபிரானுக்கு, மால் துடைத்தார் - (பிரமகத்திதோஷத்தாலாகிய) மயக்கத்தைப் போக்கியருளியவரும்,